மேஸ் ரன்னர்: தி டெத் கியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''மேஸ் ரன்னர்: தி டெத் கியூர்''' (Maze Runner: The Death Cure) (தமிழ் : புதிர்க்கட்டிடத்தில் ஓடுபவர் : முடிவின் மருந்து) என்பது 2018 ல் வெளிவந்த அறிவியல் புனைவு திரைப்படம் ஆகும். 2014 இல் வெளிவந்த [[தி மேஸ் ரன்னர்]], அதைத் தொடர்ந்து 2015 இல் வெளிவந்த [[மேஸ் ரன்னர்: தி ஸ்கார்ச் ட்ரையல்ஸ்]] திரைப்படங்களுக்கு அடுத்த பாகமாக இந்தத் திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்பட வரிசையின் கடைசித் திரைப்படம் இதுவாகும். இதில் டிலான் ஓ'பிரையன், தோமஸ் சாங்ஸ்டர், கயா ஸ்காடெல்ரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 26 ஜனவரி 2018 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம், 288 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலைக் குவித்தது .

15:31, 31 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

மேஸ் ரன்னர்: தி டெத் கியூர் (Maze Runner: The Death Cure) (தமிழ் : புதிர்க்கட்டிடத்தில் ஓடுபவர் : முடிவின் மருந்து) என்பது 2018 ல் வெளிவந்த அறிவியல் புனைவு திரைப்படம் ஆகும். 2014 இல் வெளிவந்த தி மேஸ் ரன்னர், அதைத் தொடர்ந்து 2015 இல் வெளிவந்த மேஸ் ரன்னர்: தி ஸ்கார்ச் ட்ரையல்ஸ் திரைப்படங்களுக்கு அடுத்த பாகமாக இந்தத் திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்பட வரிசையின் கடைசித் திரைப்படம் இதுவாகும். இதில் டிலான் ஓ'பிரையன், தோமஸ் சாங்ஸ்டர், கயா ஸ்காடெல்ரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 26 ஜனவரி 2018 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம், 288 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலைக் குவித்தது .

கதை சுருக்கம்

முந்தைய திரைப்படங்களில் புதிர்கட்டிடத்திலிருந்து வெளிவந்த பின்னர் தாமஸ் மற்றும் அவரது குழுவினர் ஒரு மோசமான அமைப்பினால் அடைத்து வைக்கப்பட்டாலும் ஒரு நல்ல அமைப்பின் உதவியால் அங்கிருந்து காப்பாற்றப்படுவதில் இருந்து கதை தொடர்கிறது.

அந்த மோசமான அமைப்புக்கு எதிராக போராடும் குழுவினருடன் இணைகின்றனர். நகர்ப்புறத்துக்கு வெளியே மறைந்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் தாமஸின் நண்பர் நெவ்ட் மோசமான தீநுண்மத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படுவதை தாமஸிடம் சொல்லும்போது அவரைக் காப்பாற்றிவிடலாம் என தாமஸ் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறார் .

மோசமான அமைப்பின் கட்டிடத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துத் தாக்கும்போது தாமஸின் குழுவினர் அவர்களைப் போலவே அடைத்து வைக்கப்பட்ட நிறைய பேரைக் காப்பாற்றுகின்றனர். இருந்தாலும் அவரின் நண்பர் நெவ்ட் தீநுண்மத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது .

கடைசியில் காப்பாற்றப்பட்ட எல்லோரும் நல்ல அமைப்பினரால் உருவாக்கப்பட்ட கப்பலால் கடல் கடந்து ஒரு பாதுகாப்பான அமைதியான இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் .. அங்கே நெவ்ட் தாமஸிடம் அவரின் நினைவாக கொடுத்த ஒரு சிறிய பதக்கத்தில் தாமஸ் நெவ்ட் எழுதிய ஒரு சிறிய குறிப்பைக் கண்டறிகிறார். அந்தக் குறிப்பில், நிறைய துன்பங்களைக் கடந்து வந்தாலும் எல்லோரையும் காப்பாறியதற்கு நெவ்ட் அவரின் நன்றிகளை எழுதியிருந்தார். மோசமான அமைப்பின் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து எடுத்த, தீநுண்ம பாதிப்பிலிருந்து காப்பாற்றும் அருமருந்தும் இப்போது தாமஸிடம் உள்ளது. அங்கேயே அமைதியாக எல்லோரும் வாழ்வதோடு கதை முடிகிறது.