பல்லூடகம் வழி கற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பல்லூடகம் வழியாகத் தமிழ்மொழி கற்றல் பற்றிய சிறு குறிப்பு.
அடையாளங்கள்: விக்கிப்படுத்துதல் வேண்டும் Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
பல்லூடகமும் தமிழ் கற்றலும்
பல்லூடகமும் தமிழ் கற்றலும்



11:35, 6 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பல்லூடகமும் தமிழ் கற்றலும்

   கணினியில் ஒலி – ஒளி பட இயக்கம், வரைகலை உரை முதலிய ஊடகங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துதலைப் பல்லூடகம் என்பர். ஒரே நேரத்தில் இவையனைத்தையும் கணிணியில் பெற்றுப் பயன்பெற முடியும். இன்றைய கணினிகளில் அனைத்திலும் இவ்வசதிகள் உள்ளன. இதனால் ஒரே நேரத்தில் கணினியில் காணவும், கேட்கவும் வரையவும் படிக்கவும் இயலுகிறது.

   கற்பித்தலில் எழுத்தட்டைகள், சொல்லட்டைகள், விளக்க அட்டைகள், பொருத்து அட்டைகள், சுழலட்டைகள், மின்னட்டைகள், வானொலி, ஒலி – ஒளி நாடாக்கள், தொலைக்காட்சி, தலைமேல் வீழ்த்தி, நழுவங்கள், திரைவீழ்த்திகள், முப்பரிமாணங்கள், இயக்கும் மாதிரிகள், உண்மைப்பொருள்கள் எனப் பல்வகைத் துணைக் கருவிகள் கற்பித்தலுக்குப் பயன்படுத்தினர். இவையனைத்தையும் பல்லூடகத்தின் வாயிலகச் செய்துவிட இயலும். சிறப்பான கற்பித்தலுக்குப் பல்லூடகப் பயன்பாடு பெரிதும் உதவும். ஆசிரியர் கணினிப் பயிற்சிப் பெற்றுக் காலத்திற்கேற்பக் கருவிகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் வேண்டும்.  குழந்தைகள்  எழுதும் போக்குகளையும் அவற்றிற்கான ஒலிகளையும் இயக்கத்தோடு காண்பதற்கான வாய்ப்புள்ளதால் மழலைக் கல்வி முதல் பல்லூடத்தைப் பயன்படுத்தலாம். குழந்தைகள் கணினியை இயக்கித் தானே கற்பதனால் கற்றல் விரைவாக நடைபெறுகிறது. ஆசிரியர் வழிகாட்டியாக இருந்து தேவையான கற்றல் பொருள்களையும் மென்பொருள்களையும் வகுப்பு நிலைக்கேற்ப கொடுத்தால் போதும். ஐயமேற்படும் இடங்களில் காரணக் காரியத்தோடு விளக்கினால் குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்வர்.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லூடகம்_வழி_கற்றல்&oldid=2869441" இலிருந்து மீள்விக்கப்பட்டது