சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:
| consort = எரா மற்றும் பலர்
| consort = எரா மற்றும் பலர்
| parents = குரோனசு மற்றும் ரியா
| parents = குரோனசு மற்றும் ரியா
| siblings = எசுடியா, ஏட்சு, எரா, பொசைடன், டிமடர்
| siblings = [[எசுடியா]], [[ஏடிசு]], [[ஈரா]], [[பொசைடன்]], [[டிமிடிர்]]
| children = ஏசசு, ஏரெசு, ஏதெனா, அப்போலோ, ஆர்டமீசு, அஃப்ரோடிட், டார்டானசு, டயோனைசசு, எய்லெய்தையா, என்யோ, எரிசு, எபே, எர்மிசு, எராகில்சு, டிராயின் எலன், எஃபீசுடசு, பெர்சியுசு, மினாசு, மியூசுகள், ஓரேக்கள், மொய்ரய்கள், கிரேசுகள்
| children = ஏசசு, ஏரெசு, ஏதெனா, அப்போலோ, ஆர்டமீசு, அஃப்ரோடிட், டார்டானசு, டயோனைசசு, எய்லெய்தையா, என்யோ, எரிசு, எபே, எர்மிசு, எராகில்சு, டிராயின் எலன், எஃபீசுடசு, பெர்சியுசு, மினாசு, மியூசுகள், ஓரேக்கள், மொய்ரய்கள், கிரேசுகள்
| mount =
| mount =
வரிசை 19: வரிசை 19:


==பிறப்பு==
==பிறப்பு==
தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது போல தனக்கும் நேரும் என்று குரோனசு அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, எசுடியா, டிமிடிர், போசிடான் மற்றும் ஏட்சு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சீயசை ரியா ரகசியமாக காப்பாற்ற நினைத்தார். அதனால் தன் தாய் கையாவின் ஆலோசனைப்படி சியுசிற்கு பதிலாக கருங்கல்லில் துணியைச் சுற்றி குரோனசிடம் கொடுத்தார். அதை குழந்தை என்று நினைத்து குரோனசு விழுங்கி விட்டான். பிறகு ரியா சீயசை க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் மறைத்து வைத்தார். பிறகு அங்கிருந்த கியூரிட்சுகள் பதின்மர் சீயசை வளர்த்ததாக கூறப்படுகிறது மற்றொரு கதையில் கையா அவரை வளர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. .
தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது போல தனக்கும் நேரும் என்று குரோனசு அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, எசுடியா, டிமிடிர், போசிடான் மற்றும் ஏட்சு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சீயசை ரியா ரகசியமாக காப்பாற்ற நினைத்தார். அதனால் தன் தாய் கையாவின் ஆலோசனைப்படி சியுசிற்கு பதிலாக கருங்கல்லில் துணியைச் சுற்றி குரோனசிடம் கொடுத்தார். அதை குழந்தை என்று நினைத்து குரோனசு விழுங்கி விட்டான். பிறகு ரியா சீயசை க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் மறைத்து வைத்தார். பிறகு அங்கிருந்த கியூரிட்சுகள் பதின்மர் சீயசை வளர்த்ததாக கூறப்படுகிறது மற்றொரு கதையில் [[கையா]] அவரை வளர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. .


==கடவுள்களின் அரசன்==
==கடவுள்களின் அரசன்==

02:43, 25 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

சியுசு
இடம்ஒலிம்பசு மலைச்சிகரம்
துணைஎரா மற்றும் பலர்
பெற்றோர்கள்குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரிஎசுடியா, ஏடிசு, ஈரா, பொசைடன், டிமிடிர்
குழந்தைகள்ஏசசு, ஏரெசு, ஏதெனா, அப்போலோ, ஆர்டமீசு, அஃப்ரோடிட், டார்டானசு, டயோனைசசு, எய்லெய்தையா, என்யோ, எரிசு, எபே, எர்மிசு, எராகில்சு, டிராயின் எலன், எஃபீசுடசு, பெர்சியுசு, மினாசு, மியூசுகள், ஓரேக்கள், மொய்ரய்கள், கிரேசுகள்

சியுசு பண்டைக் கிரேக்கம்Ζεύς என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் உரோமப் பழங்கதைகளில் வரும் சூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் சியுசு அனைத்து கடவுள்களுக்கும் அரசராக ஆட்சி புரிகிறார். இவர் டைடன்களான குரோனசு மற்றும் ரியாவின் கடைசி மகன் ஆவார். சியுசிற்கு பல காதலர்கள் இருந்தாலும் அவரது சகோதரி ஈராவே அவருக்கு மனைவியாவார். மேலும் சியுசு பல பெண்கள் மேல் காமம் கொண்டார். அவர்கள் மூலம் பல கடவுள்கள் மற்றும் வீரர்கள் சியுசிற்கு பிறந்தனர்.

பிறப்பு

தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது போல தனக்கும் நேரும் என்று குரோனசு அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, எசுடியா, டிமிடிர், போசிடான் மற்றும் ஏட்சு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சீயசை ரியா ரகசியமாக காப்பாற்ற நினைத்தார். அதனால் தன் தாய் கையாவின் ஆலோசனைப்படி சியுசிற்கு பதிலாக கருங்கல்லில் துணியைச் சுற்றி குரோனசிடம் கொடுத்தார். அதை குழந்தை என்று நினைத்து குரோனசு விழுங்கி விட்டான். பிறகு ரியா சீயசை க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் மறைத்து வைத்தார். பிறகு அங்கிருந்த கியூரிட்சுகள் பதின்மர் சீயசை வளர்த்ததாக கூறப்படுகிறது மற்றொரு கதையில் கையா அவரை வளர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. .

கடவுள்களின் அரசன்

சியுசின் தேர்.

சியுசு ஆடவனாக வளர்ந்தான். கடல் டைடன் ஓசனசின் மகள் மெட்டிசு, சீயசிடம் குரோனசு வாந்தி எடுப்பதற்காக ஒரு மருந்தை தயாரித்து கொடுத்தார். அதை சியுசு குரோனசிடம் கொடுத்தார். சியுசு தன் மகன் என்பதை மருந்தை குடித்த குரோனசுக்கு வாந்தி ஏற்பட்டது. அதன் மூலம் சியுசின் 2 சகோதரர்களும் 3 சகோதரிகளும் வெளிவந்தனர். மற்றொரு கதையில் சியுசு குரோனசின் வயிற்றை வாளால் கிழித்து தன் சகோதர சகோதரிகளை விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.

பிறகு சியுசு தன் மகன் என அறிந்தவுடன் குரோனசு கோபத்துடன் தனது டைட்டன் படைகளை திரட்டிக் கொண்டு போர் செய்ய ஆயத்தமானான். ஆனால் கடல் டைடன் ஓசனசு போரில் சியுசிற்கு ஆதரவராக செல்கிறார். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் பிற படையினருடன் சேர்ந்து டைட்டன்களை எதிர்த்து போர் புரிகிறார். தொடர்ந்து பத்தாண்டுகள் நடந்த இந்த போர் டைட்டானோமாச்சி என்று அழைக்கப்படுகிறது.

கையாவின் அரக்கப் பிள்ளைகளான கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் ஒற்றைக் கண்ணர்களான சைக்கிளோப்சுகள் ஆகியோரை விடுவிப்பதற்காக சியுசு பாதாள நிழல் உலகமான டார்டரசுக்கு சென்றார். அங்கு காவலராக கேம்பே என்னும் அரக்கியை வீழ்த்தி அவர்களை விடுவித்தார். அதற்கு பரிசாக சைக்கிளோப்சுகள் சியுசிற்கு இடி ஆயுதத்தை வழங்கினர். பிறகு அவர்களின் உதவியுடன் சியுசு டைட்டன்களை வீழ்த்தினார். போரில் தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசுக்கு சென்றுவிட்டனர். அட்லசு என்ற டைட்டனுக்கு மட்டும் வானத்தை தாங்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. போர் முடிந்தவுடன் சியுசு தன் சகோதரர்களுடன் உலகை பகிர்ந்து கொண்டார். அதன்படி வானம் சியுசுக்கும், கடல் போசீடனுக்கும் பாதாளம் ஏட்சுக்கும் கிடைத்தது. பிறகு கடவுள்களின் அரசனாக முடிசூடிய சியுசு, தன் சகோதரி ஈராவை மணந்து கொண்டு அவரை கடவுள்களின் அரசியாக்கினார்.

பிறகு தன் டைட்டன் பிள்ளைகளை வீழ்த்திய சியுசின் மீது கையா கோபம் கொண்டார். தனது அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவை சியுசுடன் போரிட அனுப்பினார். போரில் டைஃபோனை வெற்றி கொண்ட சியுசு, அந்த அரக்கனை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகள் மேல் இரக்கம் கொண்டு சியுசு அவர்களை உயிருடன் விட்டுவிட்டார்.

சியுசு மற்றும் ஈரா

ஈரா என்பவள் சியுசின் உடன்பிறந்த சகோதரியும் மனைவியும் ஆவாள். ஈராவின் மூலம் ஏரெசு, எபே மற்றும் எஃபீசுடசுக்கு சியுசு தந்தையானார். சியுசு காமத்தால் பல பெண்களுடன் உறவாடினார். அவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீது ஈரா பொறாமை கொண்டு சாபங்கள் வழங்கியதாக பல கதைகள் உண்டு.

சியுசின் காதலர்கள்

டைட்டன்களான கோயசு மற்றும் ஃபோபேயின் மகள் லெடோ. அவள் மீது காமம் கொண்ட சியுசு அவளுடன் உறவாடினான். லெடோ மூலம் அப்போலோ மற்றும் ஆர்டமீசு ஆகிய இரட்டை குழந்தைகளின் தந்தையானார் சியுசு. இவர்கள் பிற்காலத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகியவற்றின் கடவுள்களாயினர்.

பெர்சியூசு மற்றும் அன்ட்ரோமெடாவின் பேத்தியும் எலக்ட்ரியோனின் மகளுமான அல்கிமி மேல் சியுசு மோகம் கொண்டார். அதனால் அல்கிமியின் கணவனான அம்ஃபிட்ரியோனின் உருவத்தில் வந்து அவளுடன் உறவாடினார். அல்கிமி மூலம் மாவீரன் எராகில்சுக்கு தந்தையானார் சியுசு.

டிரோசு மற்றும் கெல்லிர்வோயேவின் மகன் கானிமிடெ. அவன்மீது மோகம் கொண்ட சியுசு கழுகு உருவம் கொண்டு அவனை ஒலிம்பிய மலைக்கு கடத்திச் சென்றார். பிறகு கானிமெடெவிற்கு என்றும் இளமையாக இருக்கும் வரத்தை சியுசு அருளினார்.

சியுசு மற்றும் பிற கடவுள்கள் ஒற்றுமை

சியுசு ரோமக் கடவுளான சூபிடருக்கு நிகரானவர். மேலும் எகிப்திய கடவுள் அம்மோன், இந்துக் கடவுள் தேவேந்திரன் ஆகியோரும் சியுசுக்கு சமமாக கருதப்படுகிறார்கள். சீயசை போலவே தேவேந்திரனும் தேவர்களின் அரசனாகவும் மழைக் கடவுளாகவும் இடி ஆயுதம் கொண்டும் இருக்கிறார். கிறித்தவ புனித நூலான பைபிளில் வரும் பார்னபாசு என்பவருடன் சியுசு ஒப்பிடப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியுசு&oldid=2056040" இலிருந்து மீள்விக்கப்பட்டது