கரும்வெருகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

07:42, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

நீலகிரி மார்ட்டின் என்பது தென்னிந்தியாவில் காணப்பபடும் ஒரேயொரு மார்ட்டின் இன விலங்கு. இது நீலகிரி மலையிலும் அதனை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. மார்ட்டின் எனப்படுவது முசுட்டெலிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுன்னி விலங்கு.

தோற்றக்குறிப்பு

இவ்விலங்கு மஞ்சள் கழுத்து மார்ட்டினை ஒத்திருந்தாலும் சற்றுப் பெரியது. மண்டையோட்டின் அமைப்பும் மாறுபட்டது. வால் தவிர உடல் 55 முதல் 65 செ.மீ நீளமும் வால் 40 முதல் 45 செ.மீ நீளமும் இருக்கும். எடை ஏறத்தாழ 2.1 கிலோ கொண்டது.

பரவல்

நீலகிரி மலைப்பகுதியிலும் குடகின் தென்பகுதியிலும் திருவிதாங்கூர் பகுதியிலும் காணப்படுகிறது.

பழக்கவழக்கங்கள்

இது பகலில் வேட்டையாடும் பகலாடி விலங்கு. மரத்தை வாழிடமாகக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தரைக்கு வருகிறது. சிறு பாலூட்டிகள், பறவைகள், சிக்காடா பூச்சி முதலாவற்றை உணவாகக் கொள்கிறது.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்வெருகு&oldid=1886081" இலிருந்து மீள்விக்கப்பட்டது