ஜோன் கீற்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:


'''ஜோன் கீற்ஸ்''' (தமிழக வழக்கு:'''ஜான் கீட்ஸ்''', ''John Keats'', [[அக்டோபர் 31]], [[1795]] -– [[பெப்ரவரி 23]], [[1821]]) [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தின்]] குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் [[ஜான் மில்டன்|மில்ரன்]] (மில்டன்), [[ஷேக்ஸ்பியர்]] ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் ''To Autumn'' என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு [[இலங்கை]]யில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
'''ஜோன் கீற்ஸ்''' (தமிழக வழக்கு:'''ஜான் கீட்ஸ்''', ''John Keats'', [[அக்டோபர் 31]], [[1795]] -– [[பெப்ரவரி 23]], [[1821]]) [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தின்]] குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் [[ஜான் மில்டன்|மில்ரன்]] (மில்டன்), [[ஷேக்ஸ்பியர்]] ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் ''To Autumn'' என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு [[இலங்கை]]யில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

== இளமைக் காலம் ==

         எட்டு வயதில் தந்தையை ஒரு விபத்திலே இழக்கும் கீட்ஸ், சில வருடங்களில் தாயை காசாநோய்க்கு இழந்து தவித்தான்.இறப்பதற்கு முன்பு கீட்ஸின் தாயார் ஜான் கீட்ஸையும்,அவன் உடன் பிறந்த மூவரையும் அவர்கள் பாட்டி வீட்டிற்கு அனுப்பினார்.பள்ளி பருவம் கீட்ஸிற்கு செழுமையான காலம்.புராணம்,பண்டைய இலக்கியங்களை பள்ளி பருவத்தின் போதே கற்றான்.ஆனால் வருமானம் கருதி பள்ளியை துறந்து தாமஸ் ஹாமாண்ட் என்பவர் இடத்தில் உதவி அறுவை சிகிச்சையாளராக பணியை துவக்கினான்.பத்தொன்பது வயதான இளம் பருவம் கீட்ஸின் முதல் கவிதைக்கு திறவுகோலாகிறது.லீக் ஹண்டும்(Leigh Hunt), ஷெல்லியும்(Shelley) கீட்ஸின் கவிதையூற்றுக்கு தூண்டதலாக அமைந்தனர் கண்மூடும் பொழுதெல்லாம் மில்டனும் ஸ்பென்ஸருமே கனவுகளில் காட்சியளித்தனர்.
இருப்புக் கொள்ளவில்லை கீட்ஸுக்கு.வேலையை துறந்தான்.'இனி என் முழு பணியும் கவிதைகள் படைப்பதே', பாட்டி வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

== கற்பனையும் அழகும் ==

         நாம் கற்பனையில் காண்பவை நிஜத்தில் நிகழாது.கற்பனையில் காண்பவை நடைமுறையில் சாத்தியமில்லை.இவையே நம் முடிவாக இருக்கும்.கீட்ஸ் இதை தகர்த்தெறிர்தான். 'கற்பனையில் காண்பவையே அழகு, அந்த அழகே உண்மை' இவ்வாழமான கருத்தை கவிதைகளில் தூவினான்.

"புனிதமான இதயத்தின் அன்பையும், கற்பனையின் உண்மையையும் தவிர எதன் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை."

அழகுணர்ச்சியை தன் முன்னே கொணரும் தேராக கற்பனையை கருதினான்.

"அழகே உண்மை, உண்மையே அழகு.
நீங்கள் இப்புவியில் அறிந்ததும்,
எல்லோரும் அறிய வேண்டியதும் இதுவே."

ஒரு முறை கீட்ஸின் சகோதரரான ஜார்ஜ்(George Keats), கீட்ஸையும் அவன் சமகால அரச மரபில் வந்த கவிஞன் லார்டு பைரனையும் ஒப்பிட்டு கீட்ஸுக்கு  கடிதம் எழுதினார். அதற்கு கீட்ஸ் தக்க பதிலளித்தார்,

"நீ என்னையும் பைரனை பற்றியும் பேசுகிறாய்.எனக்கும் அவருக்கும் இடையில் மிகப் பெரிய வித்யாசம் உள்ளது.அவர் எதை பார்க்கின்றாரோ அதையே வர்ணிக்கிறார், நான் எதை கற்பனை செய்கிறேனோ அதை வர்ணிக்கிறேன். என்னுடைய வேலை கடினமானது."

== காதல் கடிதங்கள் ==

       கீட்ஸ், 1818-ல் தில்க்ஸ் என்ற நண்பரின் மூலம் பிரவுன் குடும்பத்தாரின் இளம் வயது மகளான 'ஃபேனி பிரவுனை(Fanny Brawne)' காண்கிறார். கீட்ஸ், ஃபேனிக்கு தான் எழுதிய சில கவிதைகளையும்,பிற கவிஞர்களின் நூல்களையும் படிக்கத் தருகிறார். பதினெட்டு வயதே நிரம்பிய ஃபேனிக்கு கீட்ஸின் அழகுணர்ச்சி ததும்பும் கவிதைகள் இதம் தருகின்றன. கீட்ஸை ஆர்வத்துடன் மேலும் எழுதச் சொல்லி ஊக்குவிக்கிறாள். அடிக்கடி நிகழும் சந்திப்புகளால் இருவருள்ளும் காதல் துளிர்க்கிறது. கடித பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. உலகின் தலைசிறந்த காதல் கடிதங்களில் கீட்ஸ் ஃபேனிக்கு எழுதிய கடிதங்களும் அடக்கம். கீட்ஸ் இறந்த பின்பும் அக்கடிதங்களை ஃபேனி வெளியிடவில்லை.அவள் கணவன் இறந்த பின்னரே கீட்ஸ் தனக்கு எழுதிய கடிதங்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறாள்.

ஒரு கடிதத்தில்,

"காதலே என் மதம்.
அதற்காக இறக்கவும் சம்மதம்."

"என் காதல் சுயநலமானது.
நீ இல்லாமல் அது சுவாசிக்காது."

மற்றொரு கடிதத்தில்,

"என் ஒவ்வொரு நாடியும் உனக்காகவே துடிக்கின்றன."

இந்த வரிகளெல்லாம் இங்கிலாந்து இளம் பெண்களின் மனத்தைக் கொள்ளைக் கொண்டவை.

== நிராகரிக்கப்பட்ட கவிதைகள் ==

        ஜான் கீட்ஸ் 1817-ல் தன் முதல் கவிதை தொகுப்பை வெளியிடுகிறான். "கவிதைகள்" (Poems) என்னும் தலைப்பை தாங்கிய நூல்.இவ்வுலகம் என்னை நிச்சயம் ஏற்கும், தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.நடந்ததோ வேறு. முதல் கனவே சிதைந்து போகிறது. நண்பர்கள் சிலரை தவிர்த்து பிற கவிஞர்களும் விமர்சகர்களும் கீட்ஸ் எழுதியவை முதிர்ச்சி பெற்ற கவிதைகளல்ல எனக் கூறி நிராகரிக்கின்றனர்.

இம்முறை எப்படியும் உலகம் கவிஞனாய் தன்னை அரவணைக்கும். நம்பிக்கையோடு மற்றோரு நீண்ட கவிதை நூலான, "எண்டிமியான்" (Endymion) 1818-ல் வெளிவருகிறது.
'ஒரு பொருளின் அழகு எப்போதும் இன்பத்தை தரும்' (A thing of beauty is joy for ever), நூலின் ஆரம்ப வரி இது. இதுவும் ஏற்பகடாமல் ஏமாறுகிறான் கீட்ஸ். இந்நூலைப் பற்றி அன்றைய இதழான "லண்டன் இதழ்" (London Magazine), 'இது கவிதையே அல்ல, வெறும் கவிதையின் கனவுதான்' என்னும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது.

== இளமையில் மரணம் ==

மேலும், கீட்ஸ் பல கவிதைகள் எழுதினாலும், தன் நண்பர்களே தன்னை ஏற்கவில்லையோ என்ற எதிர்மரை எண்ணமும்,ஃபேனியின் பிரிவும், கீட்ஸின் கவிதைகள் மீதான பைரனின் தவறான விமர்சனமும், கீட்ஸை துயரத்தில் ஆழ்த்தின. இதனுடன் தன் தாயை கொன்ற அதே காசநோயும் சேர்ந்து கீட்ஸை மரணபடுக்கையில் தள்ளியது. 1821 ஆம் ஆண்டு ரோம்(Rome) நகரில் உள்ள தன் நண்பனின் வீட்டில் கீட்ஸின் உயிர் பிரிந்தது.
கீட்ஸின் வேண்டுகோளின்படி கல்லறை மீதான வாசகம் பொறிக்கப்படுகிறது,

"எவனது பெயர் தண்ணீரால் எழுதப்பட்டதோ,
அவன் இங்கு உறங்குகிறான்"

மகாகவிகள் பலர் இறந்த பின்னரே விழாக்களும்,சிலைகளும் கால சுழற்சியில் எடுக்கப்படுகின்றன. கீட்ஸ் இறந்த ஒரு  நூற்றாண்டாகிய பின்பே உலகம் அவன் கவிதைகளை உணர்ந்தது. கீட்ஸின் "நைட்டிங்கேள் பறவைக்கு ஒரு பா" (Ode to a Nightingale), "கிரேக்க தாழிக்கு ஒரு பா" (Ode on a Grecian Urn)
கவிதைகளை படிக்காத இலக்கிய மாணவர்கள் இருக்க முடியாது.
கீட்ஸ் நினைத்தது போல் அவன் பெயர் தண்ணீரில் எழுதப்படவில்லை. நாம் நம் எதிரே காணும், கற்பனையில் தோன்றும் அழகான ஒவ்வொன்றிலும் கீட்ஸின் பெயர் பிரதிபலிக்கிறது.


[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்]]

03:50, 14 மே 2014 இல் நிலவும் திருத்தம்

ஜான் கீட்ஸ்
ஜான் கீட்ஸ்

ஜோன் கீற்ஸ் (தமிழக வழக்கு:ஜான் கீட்ஸ், John Keats, அக்டோபர் 31, 1795 -– பெப்ரவரி 23, 1821) ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் மில்ரன் (மில்டன்), ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் To Autumn என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு இலங்கையில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கீற்ஸ்&oldid=1659574" இலிருந்து மீள்விக்கப்பட்டது