ஜோன் கீற்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் கீட்ஸ்
ஜான் கீட்ஸ்

ஜோன் கீற்ஸ் (தமிழக வழக்கு:ஜான் கீட்ஸ், John Keats, அக்டோபர் 31, 1795 -– பெப்ரவரி 23, 1821) ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் மில்ரன் (மில்டன்), ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் To Autumn என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு இலங்கையில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கீற்ஸ்&oldid=1827269" இருந்து மீள்விக்கப்பட்டது