ஓலி ரோமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 39: வரிசை 39:
அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683இல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698இல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே; 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ)

1700இல் ரோமர் டென்மார்க்கு-நோர்வேயில் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார்; முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக [[டைக்கோ பிரா]] எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன.

[[Image:Ole Rømer at work.jpg|thumb|left|200px|பணியில் ஓலெ ரோமர் ]]
ரோமர் முதலில் இயற்றப்பட்ட [[வெப்பநிலை]] ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708இல் இவரைச் சந்தித்த [[தானியல் காபிரியல் பாரன்ஃகைட்|டேனியல் பாரன்ஃகைட்]] இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள [[பாரன்ஃகைட்]] வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.

டென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705இல் கோபனாவன் [[காவல்துறை]]யின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார்; காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார்.

கோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார்; நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.

தமது 65ஆவது அகவையில் 1710இல் உயிரிழந்தார்.

==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

11:52, 15 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

ஓலி ரோமர்
ஓலி ரோமரின் ஓவியம் - ஜேகப் கோனிங் ஏறத்தாழ 1700இல் வரைந்தது
பிறப்பு(1644-09-25)25 செப்டம்பர் 1644
ஆர்ஹஸ்
இறப்பு19 செப்டம்பர் 1710(1710-09-19) (அகவை 65)
கோபனாவன்
தேசியம்டென்மார்க்கியர்
துறைவானியல்
அறியப்படுவதுஒளியின் வேகம்
கையொப்பம்

ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Rømer, டேனிய பலுக்கல்: [o(ː)lə ˈʁœːˀmɐ]; 25 செப்டம்பர் 1644, ஆர்ஹஸ் – 19 செப்டம்பர் 1710, கோபனாவன்) 1676இல் ஒளியின் வேகத்தை அளவியற் முறைகளால் முதலில் கண்டறிந்த டென்மார்க்கு நாட்டு வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

கோபனாவனில் உள்ள ருண்டெடாம், அல்லது வட்டக் கோபுரம் - இதன் உச்சியில்தான் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வகம் 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டின் மத்திவரை இயங்கியது; தற்போதைய ஆய்வகம் 20ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ரோமர் செப்டம்பர் 25, 1644ஆம் ஆண்டு ஆர்ஹஸ் என்றவிடத்தில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்; ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும்.[1] 1662இல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் (கால்சைட்) ஏற்படும் இரட்டை ஒளிவிலகலை ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த ராசுமசு பார்த்தோலின் 1668இல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் டைக்கோ பிராவின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.[2]

ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது; லூயி XIV மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் வெர்சாய் அரண்மனையின் அழகான நீர்த்தாமரைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்றார்.

1681இல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார்; பல்கலைக்கழகத்தில் இருந்த ருண்டெடாம், அல்லது வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துபட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான (பின்னாளில் தாமே ஒரு வானியலாளர்) பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.

அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683இல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698இல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே; 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ)

1700இல் ரோமர் டென்மார்க்கு-நோர்வேயில் கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார்; முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக டைக்கோ பிரா எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன.

பணியில் ஓலெ ரோமர்

ரோமர் முதலில் இயற்றப்பட்ட வெப்பநிலை ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708இல் இவரைச் சந்தித்த டேனியல் பாரன்ஃகைட் இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள பாரன்ஃகைட் வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.

டென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705இல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார்; காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார்.

கோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார்; நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.

தமது 65ஆவது அகவையில் 1710இல் உயிரிழந்தார்.

மேற்சான்றுகள்

  1. Friedrichsen, Per; Tortzen, Chr. Gorm (2001) (in Danish). Ole Rømer – Korrespondance og afhandlinger samt et udvalg af dokumenter. Copenhagen: C. A. Reitzels Forlag. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:87-7876-258-8. 
  2. Friedrichsen; Tortzen (2001), pp. 19–20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலி_ரோமர்&oldid=1439123" இலிருந்து மீள்விக்கப்பட்டது