சியாயி மாநகர அருங்காட்சியகம்
嘉義市立博物館 | |
நிறுவப்பட்டது | 9 மார்ச்சு 2004 |
---|---|
அமைவிடம் | கிழக்கு சியாயி மாவட்டம், சியாயி நகரம், தைவான் |
ஆள்கூற்று | 23°29′13″N 120°27′05″E / 23.48694°N 120.45139°E |
வகை | அருங்காட்சியகம் |
பொது போக்குவரத்து அணுகல் | பெய்மன் இரயில் நிலையம் |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் (in சீன மொழி) |
சியாயி நகராட்சி அருங்காட்சியகம் (Chiayi Municipal Museum) தைவான் நாட்டின் கிழக்கு மாவட்டத்திலுள்ள சியாயி நகரத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]சியாயி நகராட்சி அருங்காட்சியகம் தைவான் நாட்டின் சியாயி நகரத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு கலாச்சார பொது இடத்தை நிறுவும் நம்பிக்கையில் நிறுவப்பட்ட ஒரு கூட்டு சமூக முயற்சியாகும். இதன் காட்சிக்கூடங்களில் திபெத்திய புத்த நூல்களை மறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பட்டுப் போர்வைகள் மற்றும் குயிங் பேரரசர்களின் இசுலாமிய பச்சை மணிக்கல் ஆகியவை அடங்கிய சேகரிப்பும் வைக்கப்பட்டுள்ளன.[1]
கண்காட்சிகள்
[தொகு]அருங்காட்சியகத்தில் பின்வரும் காட்சியகங்கள் உள்ளன:[2]
- புவியியல் மண்டபம்
- புதைபடிவ மண்டபம்
- நுண்கலைகள் காட்சியகம்
செயற்பாடுகள்
[தொகு]கைரேகை, தூரிகை மை ஓவியம், காகித கலைப் பொருள்கள், விளக்கப்படம், தைவானிய தொடுதலுடன் மலர் கலை போன்றவற்றில் அருங்காட்சியகம் படிப்புகளையும் பட்டறைகளையும் வழங்குகிறது.[3]
போக்குவரத்து
[தொகு]அலிசன் வனத்துறை இரயில்வேயின் பெய்மென் நிலையத்திலிருந்து மேற்கே நடந்து செல்லும் தூரத்தில் சியாயி நகராட்சி அருங்காட்சியகத்தை அணுகலாம்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taiwanese identity: Multiculti roots: A museum tells a new story". The Economist. 12 March 2016. https://www.economist.com/news/asia/21694576-museum-tells-new-story-multiculti-roots. பார்த்த நாள்: 12 March 2016.
- ↑ "Chiayi Municipal Museum". Taiwan, the Heart of Asia. 28 June 2021. பார்க்கப்பட்ட நாள் 24 August 2022.
- ↑ "Taiwan Culture Portal - Culture Navigation - Chiayi Municipal Museum (嘉義市立博物館)". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2014-11-03.
- ↑ "Chia-Yi Municipal Museum". Cabcy.gov.tw. Archived from the original on 2014-03-25. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
புற இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (in சீன மொழி)