உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்ரஞ்சித் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்ரஞ்சித் சிங்
Simranjeet Singh
தனித் தகவல்
பிறப்பு27 திசம்பர் 1996 (1996-12-27) (அகவை 27)
உயரம்173 செ.மீ[1]
விளையாடுமிடம்நடுக்களம்
Club information
தற்போதைய சங்கம்பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம்
தேசிய அணி
2018–இந்தியா47(13)
பதக்க சாதனை
Men's வளைதடிப் பந்தாட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 சாகர்த்தா ஆண்கள் அணி
வெற்றியாளர் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பிரெதா
இளையோர் உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 லக்னோ
Last updated on: 24 சூலை 2021

சிம்ரஞ்சித் சிங் (Simranjeet Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1996 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய ஆண்கள் வளைகோல் பந்தாட்ட அணியில் நடுக்கள வீரராக சிம்ரஞ்சித் சிங் விளையாடி வருகிறார். 2020 டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை வளைகோல் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார்.[2] 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய மூத்தோர் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இதே ஆண்டு நடைபெற்ற வெற்றியாளர் கோப்பைப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் சிம்ரஞ்சித் சிங் ஓர் உறுப்பினராக இருந்தார்.

சலந்தர் நகரத்தில் அமைந்துள்ள சுர்சித் வளைகோல் பந்தாட்டப் பயிற்சிப் பள்ளியில் சிம்ரஞ்சித் சிங் பயிற்சி பெற்றார்.[3] இவருடைய உறவினர் குர்சந்து சிங்கும் ஒரு பன்னாட்டு வளைகோல் பந்தாட்ட வீரராவார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SINGH Simranjeet". worldcup2018.hockey. International Hockey Federation. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
  2. "Junior World Cup squad announced". The Hindu. 18 November 2016. http://www.thehindu.com/sport/hockey/Junior-World-Cup-squad-announced/article16645743.ece. பார்த்த நாள்: 21 January 2018. 
  3. "3 Punjab youngsters get first call-up". The Tribune. 8 January 2018. https://www.tribuneindia.com/news/sport/3-punjab-youngsters-get-first-call-up/525945.html. பார்த்த நாள்: 14 July 2018. 
  4. Duggal, Saurabh (20 December 2016). "The ‘Green revolution’ behind India’s success in Hockey Junior World Cup". Hindustan Times. https://www.hindustantimes.com/other-sports/the-green-revolution-behind-india-s-success-in-hockey-junior-world-cup/story-Jr5tHYndDAIg7kNmGg1WHJ.html. பார்த்த நாள்: 14 July 2018. 

புற இனைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ரஞ்சித்_சிங்&oldid=3303691" இலிருந்து மீள்விக்கப்பட்டது