உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரா பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா பிரியா
பிறப்பு30 மார்ச்சு 1984 (1984-03-30) (அகவை 40)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை

ஆர். சித்ரா பிரியா (R. Chithra Priya; பிறப்பு 30 மார்ச் 1984) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பெண் இரு சக்கர வாகன சவாரி செய்பவர் ஆவார். இவர் சித்ரா நீண்ட தூர சவாரிகளில் மிகவும் ஆர்வமாக உள்ளார். சித்ரா பிரியா, பிகெர்னியுடனும், விக்கி கிரேவுடனும் இணைந்து [1] சர்வதேச Female Ride Day© என்ற பெண்கள் சவாரியின் நிறுவனராகவும், MOTORESS® என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் அதன் இயக்குனராகவும் இருக்கிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சித்ராவுக்கு தனது இரு சகோதரர்களால் விசையுந்து சவாரி கற்றுக் கொடுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு தனது சொந்த விசையுந்தை இவர் பெற்றார். இவர் 80 சிசி - 110 சிசி பிரிவில் மூன்று புதிய விசையுந்துப் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார்.[2][3][4] ஒரு பந்தயத்தின் போது, இவர் மட்டுமே கலந்து கொண்டவர்களில் ஒரே பெண்ணாக இருந்தார். அந்தப் பந்தயத்தில் இவர் மூன்றாவது இடத்தில் வந்தார். ஆனால் வேகமாக ஓட்டி வந்தவர்களில் தங்கம் வென்றார். சித்ரா நீண்ட தூர சவாரிகளில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.[5]

தொழில்

[தொகு]

விசையுந்துப் பந்தயம் இந்தியாவில் முறையான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டாலும், சித்ரா தனது ஆர்வத்திற்கு நிதி பெறுவது மிகவும் கடினமாகவே உள்ளது.[6] அதற்கு பதிலாக, இவர் நீண்ட தூர சவாரியில் தனது ஆர்வத்தைத் தொடர்கிறார்.

சாடில் சோர் சான்றிதழ் பெற்ற ஒரே இந்திய பெண் விசையுந்து சவாரி செய்பவராக இருக்கிறார். இது அயர்ன் புட் சங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு சகிப்புத்தன்மை சவாரி சான்றிதழ் ஆகும். இதில் இவர் 24 மணி நேரத்தில் 1,600 கிலோமீட்டர் சவாரி செய்து சாதனை புரிந்துள்ளார்.[7] உலகின் மிக உயர்ந்த மோட்டார் வசதியுள்ள சாலையான கர்துங்களாவில் சவாரி செய்ததற்காக, பெண் விசையுந்து இந்தியாவின் பிகெர்னி சங்கத்தின் குழுவிற்கு இவர் ஒரு பகுதியாக இருந்ததற்காகவும் , சர்வதேச சாடில்சோர் சாதனைகள் பட்டத்தை பெற்ற முதல் மற்றும் ஒரே பெண்மணி என்பதற்காகவும், கன்னியாகுமரியிலிருந்து லே வரை 154 மணிநேரத்தில் சவாரி செய்ததற்காகவும்[8] இவரது பெயர் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் மூன்று முறை இடம் பெற்றுள்ளது.

இவர் , ஊர்வசி படோலே, ஷீதல் பிதாயே ஆகியோருடன் பிகர்னி குழுவின் முக்கிய குழு உறுப்பினராக உள்ளார்.[9]

சித்ரா பிரியா, பிகெர்னியுடனும், விக்கி கிரேவுடனும் இணைந்து,[1] சர்வதேச Female Ride Day© என்ற பெண்கள் சவாரியின் நிறுவனராகவும், MOTORESS® என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் அதன் இயக்குனராகவும் இருக்கிறார்.[10] இது சர்வதேச பெண்கள சவாரியின் 10 வது பதிப்பை கொண்டாடியது. இவர்கள் மகாராட்டிராவையும், குசராத்தையும் சுற்றி 10 நாள் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தனர். இது மோட்டார் சைக்கிள் மீது பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச பெண் சவாரி தினத்தின் உலகளாவிய நடவடிக்கையுடன் ஒத்திசைந்தது.[11][12] இவர் இயற்கை பாதுகாப்பு மற்றும் கிரீன் பீஸ் தன்னார்வத் தொண்டில் ஆர்வம் காட்டுகிறார்.

சாதனைகள்

[தொகு]

2011 ஆம் ஆண்டில், 24 மணி நேரத்திற்குள் 1,650 கிமீ முடித்து அயர்ன் பட் சங்கத்தால் சாடில் சோர் சான்றிதழை முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "VICKI GRAY Founder International Female Ride Day". MOTORESS.
  2. "Speed Run". பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  3. Rajendran, Nuvena. "Alisha Abdullah - Biker Girl's Thirst for Speed". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  4. PRINCE, FREDERICK. "She's shifted gears — and how". www.thehindu.com. www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  5. Fredrick, Prince. "Fast track to fame". The Hindu. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  6. Jayachander, Neeti. "Around the World on a Bike". Femina. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  7. Mande, Abhishek. "India's ONLY female rider to cover 1600 km in 24 hrs". Rediff.com. www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
  8. Team, The Guide. "Celebrate International Female Ride Day". Mid-Day.com. Mid-Day.com. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  9. Juie Merchant (17 April 2015). "The Bikerni - An All Female Motorcycle Club". Archived from the original on 6 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 22 Jul 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "MOTORESS".
  11. Team, The Guide. "Celebrate International Female Ride Day". Mid-Day.com. Mid-Day.com. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  12. Staff Reporter. "International Female Ride Day is May 2".
  13. "Chithra Priya is India's ONLY female rider to cover 1600 km in 24 hrs". http://www.rediff.com/getahead/slide-show/slide-show-1-achievers-chithra-priya-is-indias-only-female-rider-to-cover-1600-km-in-24-hrs/20130604.htm. பார்த்த நாள்: 2018-03-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_பிரியா&oldid=3929824" இலிருந்து மீள்விக்கப்பட்டது