சிதம்பரபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிதம்பரபுரம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
அமைவிடம் | 8°41′23″N 80°31′43″E / 8.689667°N 80.528504°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
8°41′23″N 80°31′43″E / 8.68972°N 80.52861°E வவுனியா மாவட்டத்தில் உள்ள சிதம்பரபுரம் இலங்கையில் மிகவும் நீண்டகாலமான நலன்புரிநிலையம் (அகதி முகாம்) உள்ள ஓர் இடம் ஆகும்.சிதம்பர புரத்தில் உள்ள நலன்புரி நிலையத்தை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானியம் பராமரித்து வருகின்றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் இந்நலன்புரி நிலையத்தை மூடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் நலன்புரிநிலையத்தில் உள்ளோர்களின் இருப்பிடப் பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிப்பிரச்சினை, அதியுயர் பாதுகாப்பு நிலையம் போன்ற பல பிரச்சினையால் கைகூடவில்லை. தவிர சிதம்பரபுர நலன்புரி நிலையத்தில் இருந்த ஒருவர் இலங்கை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கம் செய்ததினால் அப்போது இலங்கை இராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட இராணுவ அனுமதிப்பத்திரம் (பாஸ்) நடைமுறை அடிப்படை மனித உரிமை மீறல் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அந்நடைமுறை இரத்துச் செய்யப்பட்டது.