உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்னி ஆல்ட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்னி ஆல்ட்மன் (2012)

சிட்னி ஆல்ட்மன் ( Sidney Altman பிறப்பு: மே 7, 1939) ஒரு கனேடிய மற்றும் அமெரிக்க [1]மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு, செல்லுலார் மற்றும் மேம்பாட்டு உயிரியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளின் பேராசிரியராக உள்ளார். இரைபோ கருவமிலத்தின் வினையூக்க பண்புகள் குறித்த இவர்களின் பணிக்காக 1989 ஆம் ஆண்டில் அவர் வேதியியலுக்கான நோபல் பரிசை தாமஸ் ஆர். செக் எனவருடன் இணைந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.

குடும்பம் மற்றும் கல்வி

[தொகு]

ஆல்ட்மன் மே 7, 1939 அன்று கனடாவின் கியூபெக்கிலுள்ள மொண்ட்ட்ரியாலில் பிறந்தார். இவரது தாய் ரே (ஆர்லின்) ஒரு ஜவுளித் தொழிலாளி ஆவார். இவரது தந்தை விக்டர் ஆல்ட்மன் ஒரு மளிகைக் கடைக்காரராகப் பணிபுரிந்தார். [2] இவர்கள் கனடாவுக்கு குடியேறினார்கள். இவர்கள் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 1920 ஆம் ஆண்டில் இங்கு குடியேறினர். ஆல்ட்மனின் தாய் போலந்தில் உள்ள பியாஸ்டோக்கிலிருந்து வந்தவர்.தனது பதினெட்டாம் வயதில் தனது சகோதரியுடன் கனடா வந்து, ஆங்கிலம் கற்றுக் கொண்டு, ஒரு ஜவுளி தொழிற்சாலையில் வேலைசெய்தார். தங்கள் குடும்பத்தின் மற்றவர்களை கியூபெக்கிற்கு அழைத்து வருவதற்காக இவர் வேலையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தார். உக்ரேனில் பிறந்த ஆல்ட்மனின் தந்தை சோவியத் யூனியனில் ஒரு கூட்டு பண்ணையில் தொழிலாளியாக இருந்தார். அவர் ஒரு விவசாயத் தொழிலாளராக கனடாவில் பணிபுரிவதற்கு நிதியுதவி பெற்றார்.பின்னர், ரேவைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களின் தந்தையாக, மாண்ட்ரீலில் ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி குடும்பத்தை கவனித்து வந்தார்.[3] சிட்னி ஆல்ட்மன் : "நிலையான சூழலில் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெகுமதிகளைப் முடியும் என்பதை நான் எனது குடும்பத்திடம் இருந்து தான் அறிந்தேன். அது நமக்கு சிறிய அளவிலான ஊதியமாக இருந்தாலும் அது நமக்கு மகிழ்ச்சியினைத் தரும் எனக் கூறினார் [4]

ஆல்ட்மன் இளமைப் பருவத்தில், அவர்களது குடும்பத்தின் நிதி போதுமானதாக இருந்ததால் இவரால் கல்லூரிக் கல்வியைத் தொடர முடிந்தது. மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற அமெரிக்கா சென்றார். எம்ஐடியில் இருந்தபோது, அவர் ஐஸ் ஹாக்கி அணியில் உறுப்பினராக இருந்தார். 1960 இல் எம்ஐடியிலிருந்து இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் சேர்ந்தார். அங்கு 18 மாதங்கள் கல்வி கற்றார். தனிப்பட்ட கவலைகள் மற்றும் தொடக்க பட்டதாரி மாணவர்கள் ஆய்வகப் பணிகளில் பங்கேற்க வாய்ப்பு இல்லாததால், அவர் பட்டப்படிப்பை முடிக்காமல் வெளியேறினார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் கொலராடோ பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உயிர் இயற்பியலில் பட்டதாரி மாணவராக சேர்ந்தார்.

ஆல்ட்மன் 1972 இல் ஆன் எம். கோர்னரை ( ஸ்டீபன் கோர்னரின் மகள்) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டேனியல் மற்றும் லியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். [4] 1958 இல் எம்ஐடியில் கலந்து கொள்ள மாண்ட்ரீலில் இருந்து புறப்பட்டதிலிருந்து இவர் பெரும்பான்மையாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். ஆல்ட்மன் 1984 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். கனேடிய குடிமகனாகவும் இரட்டை குடியுரிமையை பெற்றுள்ளார். [5]

குறிப்புகள்

[தொகு]
  1. James, Laylin K., ed. (1994). Nobel Laureates in Chemistry, 1901–1992. American Chemical Society and Chemical Heritage Foundation. p. 737. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8412-2459-5. பார்க்கப்பட்ட நாள் 2011-09-11.
  2. "science.ca : Sid Altman". www.science.ca. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  3. James, Laylin K., ed. (1994). Nobel Laureates in Chemistry, 1901–1992. American Chemical Society and Chemical Heritage Foundation. p. 737. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8412-2459-5. பார்க்கப்பட்ட நாள் 2011-09-11.
  4. 4.0 4.1 Altman, Sidney; Karl Grandin, ed. (1989). "Sidney Altman Autobiography". Les Prix Nobel. The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-09-10. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. James, Laylin K., ed. (1994). Nobel Laureates in Chemistry, 1901–1992. American Chemical Society and Chemical Heritage Foundation. p. 737. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8412-2459-5. பார்க்கப்பட்ட நாள் 2011-09-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_ஆல்ட்மன்&oldid=3020696" இலிருந்து மீள்விக்கப்பட்டது