சி. தாதுலிங்க முதலியார்
ராவ் பகதூர் சின்னகாவனம் தாதுலிங்க முதலியார் (C. Tadulinga Mudaliar) அல்லது சி. தாதுலிங்கம் (1878 – 1954) என்பவர் இந்தியத் தாவரவியலாளர் ஆவர். இவர் சில தென்னிந்தியப் புற்கள் ஒரு கையேடு எனும் புத்தகத்தினை இந்தியத் தாவரவியல் அறிஞர் கா. இரங்காச்சாரியுடன் இணைந்து எழுதினார். இந்த புத்தகம் தாவரவியலில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. முதலியார் 1942-43ல் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1878ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில்[2] பிறந்த முதலியார் கோவையில் உள்ள வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.[3]
முதலியார் 1921ஆம் ஆண்டில் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கே.ரங்காச்சாரியுடன் சேர்ந்து சில தென்னிந்தியப் புற்கள் குறித்த ஒரு கையேட்டை எழுதினார். இது தாவரவியலாளரிடம் பாராட்டைப் பெற்றது.[2] இவர் லின்னியன் சொசைட்டியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு "ராவ்பகதூர்" பட்டம் வழங்கப்பட்டது.
அரசியல்
[தொகு]1942இல் சென்னை மாநகரத் தந்தையாக வி. சக்கரை செட்டியாரை தொடர்ந்து பொறுப்பேற்றார்.[1] இவர் 1943 வரை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இவருக்குப் பிறகு சையத் நியாமத்துல்லா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[1]
இறப்பு
[தொகு]முதலியார் 1954இல் தனது எழுபத்தைந்து வயதில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 S. Muthiah, ed. (2008). "Appendix 2". Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 438.
- ↑ 2.0 2.1 "HUH Botanist Record". Harvard University.
- ↑ Calendar of the University of Madras. University of Madras. 1915. p. 45.
- ↑ The Madras Journal of Co-operation. 46. 1954. p. 192.