உள்ளடக்கத்துக்குச் செல்

சாதிக் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020ல் சாதிக் கான்

சாதிக் கான் (Sadiq Aman Khan) (பிறப்பு: 8 அக்டோபர்1970), பிரித்தானிய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 8 மே 2016 முதல் இலண்டன் நகர மேயராக பதவியேற்ற முதல் இசுலாமியர் ஆவார். இவர் தொடர்ந்து மூன்று முறை இலண்டன் மாநகர மேயராக பதவியில் உள்ளார். [1][2][3][4] இவர் தொழிலாளர் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

இலண்டன் நகரத்தின் பாகிஸ்தான் வம்சவளி பெற்றோருக்கு 8 அக்டோபர் 1970 அன்று பிறந்தவர் சாதிக் கான்[5]

2005 வரை மனித உரிமை வழக்கறிஞராக பணியாற்றிய சாதிக் கான், 2005ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். சூன் 2009ஆம் ஆண்டு முதல் மே 2010 முடிய போக்குவரத்து அமைச்சகத்தின் துணை அமைச்சராக பதவி வகித்தார்.பின்னர் நீதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.[6]

2016 இலண்டன் மாநகராட்சி தேர்தலில் சாதிக் கான் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்டு இலண்டன் நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டார்.[7]6 மே 2016 அன்று நடந்த தேர்தலில் சாதிக் கான் 57% வாக்குகள் பெற்று இலண்டன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] சாதிக் கான்இலண்டன் நகரத்தின் முதல் இசுலாமிய மேயர் என்பது குறிப்பிடத்தக்கது..[8] 8 மே 2016 அன்று இலண்டன் நகர மேயராக பதவியேற்றார்.

2021ஆம் ஆண்டில் நடைபெற்ற இலண்டன் மாநகராட்சி மேயர் தேர்தலில், சாதிக் கான் மூன்றாம் முறையாக 55% வாக்குகள் பெற்றார். [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. London mayor election: How Sadiq Khan won over London for the third time
  2. Sadiq Khan wins a historic third term as London Mayor; Tories suffer major defeats in local elections
  3. Who is Sadiq Khan, the Pakistani-origin Mayor of London now re-elected to the post?
  4. Sadiq Khan
  5. "London mayor Sadiq Khan granted Honorary Fellowship by St George's, University of London". St George's University Hospitals NHS Foundation Trust (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.
  6. "Alan Johnson is shadow chancellor". BBC News. 8 October 2010. https://www.bbc.com/news/uk-politics-11499638. 
  7. Wintour, Patrick (11 September 2015). "Sadiq Khan elected as Labour's candidate for mayor of London". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
  8. 8.0 8.1 "Labour's Khan Wins London Mayoral Election". Sky News. 6 May 2016. http://news.sky.com/story/1691744/labours-khan-wins-london-mayoral-election. பார்த்த நாள்: 6 May 2016. 
  9. 2021 London mayoral election
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிக்_கான்&oldid=4051496" இலிருந்து மீள்விக்கப்பட்டது