சாதி ஒழிப்பு (நூல்)
சாதி ஒழிப்பு நூலின் அட்டைப்படம் | |
நூலாசிரியர் | அம்பேத்கர் |
---|---|
நாடு | India |
வெளியிடப்பட்ட நாள் | 1936 |
ISBN | 978-8189059637 |
சாதி ஒழிப்பு (Annihilation of Caste) இந்தியாவில் தீண்டாமை மற்றும் சாதி அமைப்புகளை ஒழிப்பதற்காக, அம்பேத்கர் எழுதிய கட்டுரையைத் தொகுத்து, 1936ல் இந்நூல் வெளியிடப்பட்டது. [1] இந்நூலை அம்பேத்கர் வெளியிட்டார்.
பின்னணி
[தொகு]பிரித்தானிய இந்தியா ஆட்சியில், லாகூரில் செயல்பட்டுக் கொண்டிருந்த சாதிய அமைப்பு ஒழிப்புச் சங்கத்தின் (Society for the Abolition of Caste system) செயலாளர், அம்பேத்கருக்கு 12 டிசம்பர் 1935ல் எழுதிய கடிதத்தில், 1936ல் சாதிய அமைப்பு ஒழிப்புச் சங்கத்தின், லாகூர் மாநாட்டில், இந்தியாவில் சாதிய அமைப்பு எனும் தலைப்பில் அம்பேத்கரை உரையாற்ற வேண்டினர்.[2] லாகூர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்ற வேண்டிய உரையை முன்னதாக சாதிய ஒழிப்பு எனும் தலைப்பில் கட்டுரையாக எழுதி மாநாட்டு அமைப்பாளர்களுக்கு முன்னதாக அனுப்பிவைத்தார்.[1]
அம்பேத்கரின் கட்டுரையில் இந்து சமயத்திற்கு எதிராக அதிக அளவில் கடுமையான விமர்சனங்களும்; வெறுப்பு நிறைந்த உள்ளடக்கங்களும் இருப்பதாக மாநாட்டு அமைப்பாளர்கள் சிலர் கருதினர். [2] எனவே மாநாட்டு விழாக் குழுவினர், அம்பேத்கரிடம், கட்டுரையில் இந்து சமயம் குறித்து சகித்துக் கொள்ள முடியாத அளவில் விமர்சனங்கள் உள்ளதால் அவற்றை நீக்கி விடுமாறு கேட்டு கடிதம் எழுதினர்.[2]
ஆனால் அம்பேத்கர் தனது கட்டுரையில் ஒரு சொல்லைக் கூட மாற்ற இயலாது என பதில் கடிதம் அனுப்பினார். இதனை கவனமாக கருத்தில் கொண்ட, மாநாட்டு விழாக் குழுவினர், சாதிய அமைப்பு ஒழிப்பு மாநாட்டையே ரத்து செய்து விட்டு, அம்பேத்கருக்கு அனுப்பட்ட, அழைப்புக் கடிதத்தையும் திரும்பப் பெற்றனர். [2] இருப்பினும் அம்பேத்கர் தான் லாகூர் மாநாட்டில் உரையாற்றுவதற்கு எழுதி வைத்திருந்த சாதிய ஒழிப்பு உரையை, தன் சொந்த செலவில், 15 மே 1936ல் ஆங்கில மொழியில் Annihilation of Caste எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். [3][4]
இந்நூலில் அம்பேத்கர், இந்து சமயத்தில் காலம்காலமாக வழக்கத்தில் உள்ள வர்ணாசிரம தர்மத்தையும்; பழமையான இந்து சாத்திரங்களையும் மிகக் கடுமையாக சாடியிருந்தார்.[2] சமபந்தி உணவு உண்ணும் முறை மற்றும் சாதிக்கலப்பு திருமணங்கள் முறைகள், சாதிய அமைப்புகளை ஒழிக்க போதுமானதல்ல என்றும், இந்து சமயத்தில் வர்ணங்களை வலியுறுத்தும் சாத்திரங்களையும்; சாதிய முறைகளையும் சட்டப்படி ஒழிக்க வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார்.[5]
நூல் குறித்த காந்தியின் விமர்சனம்
[தொகு]அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு நூலுக்கு, சூலை 1936ல், ஹரிஜன் எனும் வாரந்திர செய்தி இதழில் நியாய நிருபணம் எனும் தலைப்பில், அம்பேத்கருக்கு மறுப்புக் கடிதம் எழுதியிருந்தார்.[6]
The readers will recall the fact that Dr. Ambedkar was to have presided last May at the annual conference of the Jat-Pat-Todak Mandal of Lahore. But the conference itself was cancelled because Dr. Ambedkar's address was found by the Reception Committee to be unacceptable. How far a Reception Committee is justified in rejecting a President of its choice because of his address that may be objectionable to it is open to question. The Committee knew Dr. Ambedkar's views on caste and the Hindu scriptures. They knew also that he had in unequivocal terms decided to give up Hinduism. Nothing less than the address that Dr. Ambedkar had prepared was to be expected from him. The committee appears to have deprived the public of an opportunity of listening to the original views of a man, who has carved out for himself a unique position in society. Whatever label he wears in future, Dr. Ambedkar is not the man to allow himself to be forgotten.
அம்பேத்கர் எழுதிய Annihilation of Caste எனும் நூலை ஈ. வெ. இராமசாமி 1937ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட உதவினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Arundhati Roy. "The Doctor and the Saint". caravanmagazine.in. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Annihilating caste". Frontline. 16 July 2011. http://www.frontline.in/static/html/fl2815/stories/20110729281509500.htm. பார்த்த நாள்: 22 March 2014.
- ↑ Deepak Mahadeo Rao Wankhede (2009). Geographical Thought of Doctor B.R. Ambedkar. Gautam Book Center. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87733-88-1.
- ↑ "We Need Ambedkar--Now, Urgently..." Outlook. The Outlook Group. பார்க்கப்பட்ட நாள் 5 April 2014.
- ↑ Timothy Fitzgerald. சA124 The Ideology of Religious Studies. Oxford University Press. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195167696.
{{cite book}}
: Check|url=
value (help) - ↑ "A Vindication Of Caste By Mahatma Gandhi". Columbia University. Harijan. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.