சாடோவைட்டு
Appearance
சாடோவைட்டு Zadovite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுபேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | BaCa6[(SiO4)(PO4)](PO4)2F |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக அமைப்பு | முக்கோணம் |
முறிவு | ஒழுங்கற்றது/சமமற்றது |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
மேற்கோள்கள் | [1] |
சாடோவைட்டு (Zadovite) BaCa6[(SiO4)(PO4)](PO4)2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும். அராடைட்டு என்ற வனேடியம் வரிசையொத்த கனிமத்துடன் சேர்ந்து சாடோவைட்டும் பரலவாசு எனப்படும் வெப்ப உருமாறிய பாறை வகைகளில் தோன்றுகின்றன. இவ்விரண்டு கனிமங்களின் கட்டமைப்பும் மற்றொரு அரியவகை கனிமமான நபிமுசாயிட்டு கனிமத்தின் கட்டமைப்பை ஒத்து இருக்கின்றன. இக்கட்டமைப்பு ஆட்ரூரைட்டு கனிமத்தின் கட்டமைப்புடன் தொடர்பு கொண்டதாக கருதப்படுகிறது. இசுரேலின் பல்லம்ச தோற்ற மண்டலத்தில் இம்மூன்று கனிமங்களும் காணப்படுகின்றன. பேரியம், பாசுபரசு மற்றும் சிலிக்கன் தனிமங்களின் கனிமங்கள் இணைந்திருப்பது மிகவும் அபூர்வமானது ஆகும்[2][3][1].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாடோவைட்டு கனிமத்தை Zad[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Aradite: Aradite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-02.
- ↑ Galuskin, E.V., Gfeller, F., Galuskina, I.O., Pakhomova, A., Armbruster, T., Vapnik, Y., Włodyka, R., Dzierżanowski, P., and Murashko, M., 2015. New minerals with a modular structure derived from hatrurite from the pyrometamorphic Hatrurim Complex. Part II. Zadovite, BaCa6[(SiO4)(PO4)](PO4)2F and aradite, BaCa6[(SiO4)(VO4)](VO4)2F, from paralavas of the Hatrurim Basin, Negev Desert, Israel. Mineralogical Magazine 79(5), 1073-1087
- ↑ Galuskin, E.V., Gfeller, F., Armbruster, T., Galuskina, I.O., Vapnik, Y., Murashko, M., Włodyka, R., and Dzierżanowski, P., 2015. New minerals with a modular structure derived from hatrurite from the pyrometamorphic Hatrurim Complex. Part I. Nabimusaite, KCa12(SiO4)4(SO4)2O2F, from larnite rocks of Jabel Harmun, Palestinian Autonomy, Israel. Mineralogical Magazine 79(5), 1061-1072
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.