சாடோவைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாடோவைட்டு
Zadovite
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBaCa6[(SiO4)(PO4)](PO4)2F
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக அமைப்புமுக்கோணம்
முறிவுஒழுங்கற்றது/சமமற்றது
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
மேற்கோள்கள்[1]

சாடோவைட்டு (Zadovite) BaCa6[(SiO4)(PO4)](PO4)2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும். அராடைட்டு என்ற வனேடியம் வரிசையொத்த கனிமத்துடன் சேர்ந்து சாடோவைட்டும் பரலவாசு எனப்படும் வெப்ப உருமாறிய பாறை வகைகளில் தோன்றுகின்றன. இவ்விரண்டு கனிமங்களின் கட்டமைப்பும் மற்றொரு அரியவகை கனிம்மான நபிமுசாயிட்டு கனிமத்தின் கட்டமைப்பை ஒத்து இருக்கின்றன. இக்கட்டமைப்பு ஆட்ரூரைட்டு கனிமத்தின் கட்டமைப்புடன் தொடர்பு கொண்டதாக கருதப்படுகிறது. இசுரேலின் பல்லம்ச தோற்ற மண்டலத்தில் இம்மூன்று கனிமங்களும் காணப்படுகின்றன. பேரியம், பாசுபரசு மற்றும் சிலிக்கன் தனிமங்களின் கனிமங்கள் இணைந்திருப்பது மிகவும் அபூர்வமானது ஆகும்[2][3][1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Aradite: Aradite mineral information and data". Mindat.org. 2016-03-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. Galuskin, E.V., Gfeller, F., Galuskina, I.O., Pakhomova, A., Armbruster, T., Vapnik, Y., Włodyka, R., Dzierżanowski, P., and Murashko, M., 2015. New minerals with a modular structure derived from hatrurite from the pyrometamorphic Hatrurim Complex. Part II. Zadovite, BaCa6[(SiO4)(PO4)](PO4)2F and aradite, BaCa6[(SiO4)(VO4)](VO4)2F, from paralavas of the Hatrurim Basin, Negev Desert, Israel. Mineralogical Magazine 79(5), 1073-1087
  3. Galuskin, E.V., Gfeller, F., Armbruster, T., Galuskina, I.O., Vapnik, Y., Murashko, M., Włodyka, R., and Dzierżanowski, P., 2015. New minerals with a modular structure derived from hatrurite from the pyrometamorphic Hatrurim Complex. Part I. Nabimusaite, KCa12(SiO4)4(SO4)2O2F, from larnite rocks of Jabel Harmun, Palestinian Autonomy, Israel. Mineralogical Magazine 79(5), 1061-1072




"https://ta.wikipedia.org/w/index.php?title=சாடோவைட்டு&oldid=2626703" இருந்து மீள்விக்கப்பட்டது