உள்ளடக்கத்துக்குச் செல்

சமிலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிலோ
உருவாக்குனர்சமிலோ சமூக உருப்பினர்கள், தொழில்முறை பங்குதாரர்கள்
அண்மை வெளியீடுLMS 1.11.28 / 21 அக்டோபர் 2024; 57 நாட்கள் முன்னர் (2024-10-21)
மொழிபிஎச்பி
இயக்கு முறைமைபன்னியக்குதளம்
மென்பொருள் வகைமைகற்றல் மேலாண்மை அமைப்பு
உரிமம்குனூv3 or superior
இணையத்தளம்chamilo.org

சமிலோ (Chamilo) ஒரு கட்டற்ற மென்பொருள் ( குனூ உரிமத்தின் கீழ்) ஆகும். மின் கற்றல் மற்றும் உள்ளடக்க மேலாண்மை அமைப்பான இது உலகளவில் கல்வி மற்றும் அறிவுப் பகிர்விற்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமிலோ சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இந்த அமைப்பு மென்பொருளை மேம்படுத்துதல், தெளிவான தகவல்தொடர்பு அலைவரிசைகளைப் பராமரித்தல் மற்றும் சேவை வழங்குநர்கள் மற்றும் மென்பொருள் பங்களிப்பாளர்களுக்கான வலையமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.

சமிலோ திட்டம் அதன் மென்பொருளை இலவசமாக விநியோகிப்பதன் மூலம், குறைந்த செலவில் தரமான கல்வி கிடைப்பதனையும் ,மூன்றாவது உலக நாடுகளின் சாதனங்களின் பெயர்வுத்திறனுக்கான இடைமுகத்தை மேம்படுத்துதல் [1] மற்றும் இலவசமாக வழங்குதல் பொது மின் கற்றல் வளாகத்தை அணுகுதல் [2] ஆகியனவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, [3]

சாமிலோ எல்.எம்.எஸ்ஸின் முக்கிய அம்சங்கள்

[தொகு]
  • படிப்புகள், பயனர்கள் மற்றும் பயிற்சி சுழற்சிகள் (தொலைவிலிருந்து நிர்வகிக்க SOAP வலை சேவைகள் உட்பட)
  • கற்றலுக்கான சமூக வலைப்பின்னல்
  • SCORM 1.2 பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நிர்வகிக்கும் கருவி
  • எல்.டி.ஐ 1.1 ஆதரவு
  • பல நிறுவன முறை (மத்திய மேலாண்மை தளத்துடன்)
  • நேர கட்டுப்பாட்டு தேர்வுகள்
  • சர்வதேச எழுத்துக்கள் (யுடிஎஃப் -8)
  • தானியங்கு முறையில் சான்றிதழ்களை தோன்றச் செய்தல்
  • பயனர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல்
  • மொஸில்லா ஓபன் பேட்ஜ்களுடன் ஒருங்கிணைந்த திறன் அடிப்படையிலான பயிற்சி (சிபிடி)
  • பல நேர மண்டலங்கள்
  • ஒரே தளம் மற்றும் வழகி மூலமாக சுமார் 700,000 க்கும் அதிகமான பயனர்களுக்கு ஆதரவு அளித்தல்

சான்றுகள்

[தொகு]
  1. http://livestre.am/wKs0
  2. "Campus Libre de Chamilo".
  3. http://www.chamilo.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிலோ&oldid=4124478" இலிருந்து மீள்விக்கப்பட்டது