சபித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபித்
Zabid
சபித் மசூதி
நாடு யேமன்
நேர வலயம்ஏமன் சீர் நேரம் (ஒசநே+3)
அலுவல் பெயர்வரலாற்று முக்கியத்துவ நகரம்
வகைபண்பாடு
வரன்முறைii, iv, vi
தெரியப்பட்டது1993 (17 ஆவது உலகப் பாரம்பரிய களம் குழு]])
உசாவு எண்611
State Party யேமன்
Regionஅரபு நாடு
Endangered2000–present

சபித் (ஆங்கிலம்: Zabid, அரபு: زبيد) நகரம் ஏமனின் மேற்கு கடற்கரை சமவெளியில் 52.590 நபர்கள் என்ற நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நகரம் ஆகும். சாபித் மற்றும் செபித் என்ற பெயர்களாலும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. ஏமன் நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும், மற்றும் 1993 ஆம் ஆண்டு முதல் இந்நகரம் யுனெசுகோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனினும், 2000 ஆம் ஆண்டில், இந்நகரம் அபாய நிலையில் உள்ள உலக பாரம்பரிய களங்கள் பட்டியலில் வைக்கப்பட்டது. இங்குள்ள பெரிய பள்ளிவாசல், முகம்மது நபியைப் பின் தொடர்பவர்களில் ஒருவரான அபூ மூசா அசாரியால் கி.பி 628 இல் கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை ஏமனின் தலைநகராகவும் சபித் நகரம் இருந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்நகரின் தென்பகுதியில் வாடி என்ற மிகப்பழமையான ஒரு ஏமன் நகரம் இருந்ததால், இந்நகரை வாடி சபித் என்று அழைக்கிறார்கள். நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்களுள் ஒருவரான அபூ மூசா அசாரி சபித் நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார், கி.பி 628 இல் இவர் கட்டிய பெரிய பள்ளிவாசல் இன்னும் அவருடைய வாழ்க்கைக்குச் சான்றாக இருக்கிறது. பாரம்பரியத் தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டால் இப்பள்ளிவாசல் இசுலாமியரின் வரலாற்றில் ஐந்தாவதாக கட்டப்பட்ட மசூதியாக இது கருதப்படுகிறது. 13 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை ஏமனின் தலைநகராக விளங்கிய இந்நகரம், பிரசித்தி பெற்ற இசுலாமியக் கல்வி மையாமான சபித் பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாகவும் இருந்தது. 819 முதல் 1018 வரை சியாதித்து வம்சத்தின் தலைநகராகவும், 1022 முதல் 1158 [1] வரை நயாகித் வம்சத்தின் தலைநகராகவும் விளங்கியது. இன்று, சபித் நகரம், நவீன ஏமன் [2] நாட்டின் அறிவார்ந்த மற்றும் பொருளாதார எல்லைகளுடன் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகிறது.

புவியியல்[தொகு]

14°12′வடக்கு 43°19′கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ஏமன் நாட்டின் மேற்கு கடற்கரைச் சமவெளியில் [3]அமைந்துள்ள சபித் நகரின் மக்கள் தொகை 52,590 நபர்களாகும்.

உலகப் பாரம்பரியக களம்[தொகு]

சபித்

1993 [4] ஆம் ஆண்டு முதல் சபித் நகரம் உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக யுனெசுகோவில் அறிவிக்கப்பட்டது. நகரத்தின் முக்கியமான பகுதியாக இங்கு கட்டப்பட்டுள்ள பெரிய பள்ளிவாசல் கருதப்படுகிறது. இம்மசூதியில் இயங்கியதாக அறியப்படும் பல்கலைக் கழகத்தின் எச்சங்கள் பலராலும் பார்வையிடப்படுகின்றன.

ஏமன் அரசாங்கம் இந்நகரத்திற்கு முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படாமல் புறக்கணித்ததைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் யுனெசுகோ இந்நகரை அபாய நிலையில் உள்ள உலக பாரம்பரிய களங்கள் பட்டியலில் வைத்துள்ளது. யுனெசுகோவின் அறிக்கையின்படி, இந்நகரில் சுமார் 40% வீடுகள் கற்காரை கட்டிடங்களாக மாற்றப்பட்டு விட்டன. மேலும் எஞ்சியுள்ள இதர வீடுகள் மற்றும் பண்டைய கடைவீதிகள் [5]மோசமடைந்து நிலையில் உள்ளன மூலம் மாற்றப்பட்டுள்ளது.

சபித் ஓர் உலக பாரம்பரியத் களம் என்று யுனெசுகோவின் அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், இந்நகரின் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்த நகரம் அப்பெருமையை இழந்துவிடும் அபாயம் இருந்தது. [6].

பொருளாதாரம்[தொகு]

1920 ஆம் ஆண்டின்படி அரேபியாவில் இண்டிகோ பயிரிடும் இரண்டு இடங்களில் அபித் நகரமும் ஒன்றாகும். மேலும், இங்கு பருத்தியும் [7] பயிரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சபித் நகரில் இருந்த பழங்குடியினர் சர்ச்சையால், பொருளாதாரத்தில் ஒரு பின்னடைவு நிலை இருந்ததாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது [8].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Najahid Dynasty." Encyclopædia Britannica Online, 14 April 2006.
  2. Eickelman, Dale F. "The Middle East and Central Asia." (Prentice Hall, Upper Saddle River: 2002)
  3. population of Zabid
  4. "Decision : CONF 002 XI Inscription: Historic Town of Zabid (Yemen)". unesco.org. 1993.
  5. UNESCO World Heritage Site in Danger 2000: Historic Town of Zabid
  6. Ahmad al-Aghbari and Mohammad al-Ulofi (February 15, 2009). "Is Yemen Able to Keep Zabid Listed in World Heritage?". Saba News. http://www.sabanews.net/en/news176233.htm. 
  7. Prothero, G.W. (1920). Arabia. London: H.M. Stationery Office. பக். 85. http://www.wdl.org/en/item/11767/view/1/85/. 
  8. Prothero, G.W. (1920). Arabia. London: H.M. Stationery Office. பக். 103. http://www.wdl.org/en/item/11767/view/1/103/. 

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zabid
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபித்&oldid=2139951" இலிருந்து மீள்விக்கப்பட்டது