உள்ளடக்கத்துக்குச் செல்

சபிதா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபிதா கான்

சபிதா கான் ரோகில்லா இரண்டாம் முகலாய பேரரசர் ஷா ஆலம் காலத்தில் ரோகில்லாக்கள் மக்களின் தலைவராக இருந்தவர். இவர் ரோஹில்லா சர்தார் நஜிப்-உத்-தவ்லாவின் மகனாவார். இவரது தந்தை தான் நஜிபபாத் என்ற நகரத்தை உருவாக்கியவர். சபிதா கான் 1761 ஆம் ஆண்டு நடந்த பானிபட் போரின் போது தனது தந்தையுடன் சண்டையிட்டதாக அறியப்படுகிறது. 1770 ஆம் ஆண்டு அக்டோபர் 30, அன்று இவரது தந்தை இறந்த பிறகு, சபிதா தலைமை பொறுப்பை ஏற்றார். இவரது ஆட்சியின் போது, மராட்டியர்கள் 1771 இல் டெல்லியையும் கைப்பற்றினர். பின்னர் 1772 இல் ரோஹில்கண்டையும் கைப்பற்றினர். [1] இதன் காரணமாக சபிதா கான் அவாத் நவாப், சுஜா-உத்- தவ்லாவின் முகாமுக்கு தப்பி ஓடும் சூழலுக்கு தள்ளபப்ட்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1. N. G. Rathod. The Great Maratha Mahadaji Scindia. pp. 7–8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபிதா_கான்&oldid=3031017" இலிருந்து மீள்விக்கப்பட்டது