உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கீதா பாரூவா பிசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா பாரூவா பிசாரதி
தொழில்எழுத்தாளர்,பத்திரிகையாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள்ராம்நாத் கோயங்கா

சங்கீதா பாரூவா பிசாரதி (Sangeeta Barooah Pisharoty) ஓர் இந்திய பத்திரிகையாளர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்,[1] தற்போது இவர் நவீன செய்தி ஊடகமான தி வயரில் துணை ஆசிரியராக உள்ளார்.[2] முன்பாக இவர் தேசிய ஆங்கில இதழான தி இந்துவில்ஏழு சகோதரி மாநிலங்களுக்கான நிருபராக இருந்தார்.[3] அசாம் இயக்கம், அசாம் உடன்படிக்கை மற்றும் அசாமில் நடந்த கிளர்ச்சிகள் பற்றிய அசாம்: தி அக்கார்டு, தி டிஸ்கார்ட் எனும் தனது முதல் நூலுக்காகப் பரவலாக அறியப்படுகிரார்.[4][5]

அசாமின் மாஜூலி தீவில் மண் அரிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழப்பது குறித்த தொடர் செய்திகளுக்காக 2011 ஆம் ஆண்டு முதல் பரோவா அபிவிருத்தி ஆய்வுகள் மையத்திலிருந்து ஆய்வுதவித் தொகைப் பெற்று வருகிறார். [சான்று தேவை] டெல்லி நகரத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே வீட்டுவசதி பிரிப்பது குறித்த இவரது அறிக்கைக்காக 2017 ஆம் ஆண்டில், பத்திரிக்கைத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ராம்நாத் கோயங்கா விருது பெற்றார்.[6][7]

இவர் குவகாத்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு இவர் 1995 இல் பட்டம் பெற்றார். பரோவா தனது தொழில் வாழ்க்கையை தேசிய செய்தி நிறுவனமான யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியாவில் இருந்து தொடங்கினார்.இதன்மூலம் வடகிழக்கு இந்தியாவில் இருந்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முதல் பெண்மணி எனும் பெருமை பெற்றார்.[8]

சான்றுகள்

[தொகு]
  1. Agarwal, Aarushi (2019-09-01). "Books of the week — From Salman Rushdie's Quichotte to Assam: The Accord, The Discord, our picks". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  2. Saigal, Sonam (2020-02-02). "NRC, NPR will create huge chaos, say lawyers, activists" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/cities/mumbai/nrc-npr-will-create-huge-chaos-say-lawyers-activists/article30716741.ece. 
  3. Gani, Abdul (2019-08-31). "Journalist Sangeeta Barooah Pisharoty's book reveals interesting facts about Assam". The News Mill (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  4. Medhi, Hemjyoti (30 January 2020). "Old anxieties of identity". Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  5. Ngaihte, Thangkhanlal (2019-12-13). "Review: Assam: The Accord, The Discord by Sangeeta Barooah Pisharoty". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  6. "The Wire's Sangeeta Barooah Pisharoty Wins Ramnath Goenka Award for Feature Writing". The Wire. 20 December 2017.
  7. "Ramnath Goenka Award for Excellence in Journalism: Winners all". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 2018-06-26.
  8. "Sangeeta Barooah Pisharoty". Penguin Books. https://penguin.co.in/book_author/sangeeta-barooah-pisharoty/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_பாரூவா_பிசாரதி&oldid=3742797" இலிருந்து மீள்விக்கப்பட்டது