ச. கோபாலாச்சாரி
Appearance
சறுக்கை கோபாலாச்சாரி | |
---|---|
திருவிதாங்கூரின் திவான் | |
பதவியில் 16 ஆகத்து 1906 – 26 அக்டோபர் 1907 | |
ஆட்சியாளர் | மூலம் திருநாள் |
முன்னையவர் | வி. பி. மாதவ ராவ் |
பின்னவர் | பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி |
திவான் பகதூர் சறுக்கை கோபாலாச்சாரி(Sarukkai Gopalachari) (பிறப்பு: 1850 ஆகத்து 16) அல்லது கோபாலாச்சார்யார் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1906 ஆகத்து 16 முதல் 1907 அக்டோபர் 26 வரை திருவிதாங்கூரின் திவானாக பணியாற்றினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கோபாலாச்சாரி 1850 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் சறுக்கையில் ஒரு வைணவ பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் சட்டத்தில் பட்டம் பெற்று, 1885 மார்ச் 21 இல் துணை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மதுரையில் வழக்கறிஞராக சிலகாலம் பணியாற்றினார்.[1] 1903 சூனில் இவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1906 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டபோது கோபாலாச்சாரி திருநெல்வேலியின் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார் .[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Jeffrey, Robin (1976). The decline of Nayar dominance: society and politics in Travancore, 1847-1908. Holmes & Meier Publishers. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0841901848.