கோளகக் கொத்து விண்மீன் கூட்டம்
கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (Globular cluster) எனப்படுவது கோள வடிவில் உருவாகியுள்ள விண்மீன்களின் கூட்டமாகும். ஏறக்குறைய கோள வடிவச் சீர்மையுடன் விண்மீன்கள் அடர்த்தியாக, நெருக்கமாகக் கட்டுண்டு இருக்கும் விண்மீன் கூட்டமாகும். ஒவ்வொரு அண்டத்திலும் விண்மீன்கள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாகவும் வேறிடத்தில் விலகி விரிந்தும் காணப்படுகின்றன. அண்டவெளி வளிமத்திலிருந்து விண்மீன்கள் ஒரே சமயத்தில் உருவாகும் போது அவை யாவும் பொது ஈர்ப்பால் கட்டுண்டு ஒரே மாதிரியான இயக்கத்திற்கு இணைந்து உட்படுகின்றன. இது போன்ற கொத்துக் கொத்தான விண்மீன்களை விண்மீன் கூட்டம் என்பர். கொத்து விண்மீன் கூட்டங்களில் இரு வகைகள் உள்ளன. அவை அண்டவெளி அல்லது அண்டகக் கொத்து விண்மீன் கூட்டம் அல்லது தனிக் கொத்து விண்மீன் கூட்டம் (galactic or open cluster) மற்றும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் எனப்படும். அண்டவெளி அல்லது அண்டகக் கொத்து விண்மீன் கூட்டம் அல்லது தனிக் கொத்து விண்மீன் கூட்டத்தில், சிலவற்றில் பத்து முதல் சில நூறு வரையிலான விண்மீன்கள் ஓரளவு தளர்ச்சியாகக் கட்டுண்டு குறிப்பிடும்படியான கட்டமைப்புச் சீர்மை ஏதுமின்றிக் காணப்படும். பொதுவாக இவை அண்டத்தட்டின் தளத்தில் அமைந்துள்ளன. மாறாகக் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் ஏறக்குறைய கோள வடிவச் சீர்மையுடன் காணப்படுகின்றன. இதில் விண்மீன்கள் அடர்த்தியாக,நெருக்கமாகக் கட்டுண்டு இருக்கின்றன. சராசரியாக பத்தாயிரம் முதல் பத்து இலட்சம் வரை விண்மீன்களைக் கொண்டிருக்கும் இவை பெரும்பாலும் அண்டத்தட்டின் தளத்தில் அமைவதில்லை. அண்ட வட்டத்தில்(halo) அதிகம் உள்ளன.இவை ஒரு கோளின் துணைக் கோள் போல அண்ட மையத்தை(galactic centre) சுற்றி வலம் வருகின்றன[2]. ஈர்ப்பினால் மிகவும் வலுவாக இணைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாக இருப்பதால், இது பொதுவாக கோள வடிவிலும்,அடர்த்தி மிக்கதாகவும் விளங்குகின்றது.
பெயர் காரணம்
[தொகு]இலத்தீன் மொழியில் குளோபுளஸ் என்றால் சிறிய கோளம் என்று பொருள்.
உற்று நோக்கல்
[தொகு]விண்மீன் கூட்டம் | கண்டறிந்தவர் | ஆண்டு |
---|---|---|
மெசியர் 22[3] | ஆபிரகாம் ஐலே (Abraham Ihle) | 1665 |
ஒமேகா செண்டாரி | எட்மண்ட் ஹாலி(Edmond Halley) | 1677 |
மெசியர் 5 | காட்பிரீட் கிர்ச் (Gottfried Kirch]] | 1702 |
மெசியர் 13 | எட்மண்ட் ஹாலி]] | 1714 |
மெசியர் 71 | பிலிப் லொய்ஸ் டி செசாக்ஸ் | 1745 |
மெசியர் 4[4] | பிலிப் லொய்ஸ் டி செசாக்ஸ் | 1746 |
மெசியர் 15 | சான் டொமினிக் மரால்டி | 1746 |
மெசியர்2 | சான் டொமினிக் மரால்டி | 1746 |
அமைவிடம்
[தொகு]கொத்துக் கொத்தாய் காணப்படும் விண்மீன் கூட்டம் அண்டத்தின் கட்டமைப்பிற்கு வெளியே உள்ள அண்டவெளியில் மட்டுமின்றி, அண்டத்தின் கட்டமைப்பிலும் இடம் பெறுவதுண்டு.
அண்டவெளியில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் விண்மீன்கள் உள்ளன. இவை மிகவும் கூடுதலான வயதுடையனவாகவும் இருக்கின்றன. அண்டத் தட்டில் காணப்படும் அண்டகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் அல்லது தனிக்கொத்து விண்மீன் கூட்டங்கள் செறிவு தாழ்ந்தனவாக உள்ளன. கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் என்பது மிகவும் பரவலாக அண்ட வெளியில் எங்கும் காணப்படுகின்றன. பால்வழி மண்டலத்தில் 150 -158 கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களை இனமறிந்துள்ளனர்.[7][8] பெரிய அண்டங்களில் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் இருக்கலாம்.[9] நமக்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமெடா(Andromeda) என்னும் அண்டத்தில் 500 கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களைக் கண்டறிந்துள்ளனர்.[10] M .87 என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய நீள்கோள வடிவ அண்டத்தில் 13000 கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.[2] இவை 131,000 ஒளி ஆண்டுகள் ஆரமுள்ள வட்டப்பாதையில் அண்டத்தைச் சுற்றி வலம் வருகின்றன.[11]
வட்டார வரம்புக்கு உட்பட்ட பகுதியில் போதிய நிறையுடைய ஒவ்வொரு அண்டமும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களின் குழுமத்தோடு தொடர்புடையனவாக இருக்கின்றன.[12] சகிட்டாரியஸ் குறு அண்டம் (Sagittarius dwarf), கானிஸ் மேஜர் (Canis Major )குறு அண்டம் போன்ற அண்டங்கள் போலோமர் 12 (Polomer 12 ) என்பது போன்ற கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களை பால் வழி மண்டலத்திற்கு அளிக்கும் வழி முறையில் உள்ளன[13]. இது கடந்த காலத்தில் அண்டங்களிலிருந்து எவ்வளவு கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை விவரிக்கக் கூடியதாக இருக்கின்றது.
உருவாக்கம்
[தொகு]அண்டத்தில் முதன் முதலாக உருவான சில விண்மீன்கள் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் காணப்பட்டாலும் அவற்றின் மூலமும் அண்டத்தின் பரிணாம வளர்ச்சியில் அவற்றின் பங்கும் இன்னும் தெளிவாக வரையறுக்கப் படாமலேயே இருக்கின்றது.[15] கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் பொதுவாக 100 - 1000 வரையில் உலோகச் செறிவு தாழ்ந்த, பழமையான விண்மீன்களைக் கொண்டுள்ளன[16]. கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் காணப்படும் இந்த வகை விண்மீன்கள், சுருள்புய அண்டங்களின் (Spiral galaxy) மையக் கருப் பகுதியில் இருக்கும் விண்மீன்களைப் போல இருக்கின்றன. எனினும் மிகக் குறுகிய விண்வெளிப் பகுதிக்குள் அடங்கியிருக்கின்றன. இவற்றுள் வளிமமோ, தூசிப் படலமா காணப்படவில்லை. இது வெகு காலத்திற்கு முன்பே கவரப்பட்டு விண்மீனாகத் திரண்டிருக்கலாம் என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது.[17]
ஒரு கன பார்செக்(Cubic parsec ) பரும வெளியில் 0௦.4 விண்மீன்கள் என்ற வீதத்தில் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் விண்மீன்கள் செறிவாக அடங்கி இருக்கின்றன.[16][18] எனினும் இக்கட்டமைப்பு விண்மீன்-கோள் அமைப்பிற்கு அனுகூலமிக்கதாக இல்லை. நெருக்கமாக உள்ள விண்மீன்களின் கூட்டத்தில் கோள்களின் சுற்றுப்பாதை இயக்கம் தாய் விண்மீனின் ஈர்ப்புக்கு மட்டும் கட்டுப்படாமல் பிற விண்மீன்களினாலும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.[15] இத்தகைய கட்டமைப்பில் கோள்களின் சுற்றுப்பாதை இயக்கம் நிலையற்றதாக இருப்பதால் அவற்றின் வாழ்வுக் காலம் மிகவும் குறுகியதாக இருக்கும். பெரும்பாலும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் உள்ள விண்மீன்கள் யாவும் பரிமாண வளர்ச்சிப் படியில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் உள்ளன.[19] இது ஒரு கோளகக்கொத்து விண்மீன் கூட்டத்திலுள்ள விண்மீன்கள் எல்லாம் சற்றேறக்குறைய ஒரே சமயத்தில் ஒரே மூலத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.[20]
பால் வழி மண்டலத்திலுள்ள ஒமேகா செண்டாரி, M 31 ல் உள்ள G 1 என்ற கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் போன்றவை மாபெரும் நிறை கொண்டவை. இவற்றின் நிறை பல மில்லியன் சூரிய நிறையாக உள்ளது. மாபெரும் நிறையுடைய கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் உண்மையில் அவ்வட்டாரத்தில் உள்ள பெரிய அண்டங்களால் உட்கவரப்படும் குறு அண்டங்களின் (dwarf galaxy) உள்ளகமாக உள்ளன. என்பதற்கு இவை இரண்டும் சான்றாக உள்ளன. பால் வழி மண்டலத்தில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 25 விழுக்காடு குறு அண்டத்துடன் உட்கவரப்பட்டவைகளாக உள்ளன. நிறைமிக்க பல கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் மையக் கருப் பகுதிகளில் கருந்துளை விண்மீன்கள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.[21]
விண்மீன் வகைகள்
[தொகு]விண்மீன்களை இரு வகையாகப் பிரித்திருக்கின்றர்கள். ஹைட்ரஜன்,ஹீலியம் தவிர்த்த பிற தனிமங்களின் செழுமை அதிகமாக இருப்பின் அவற்றை இரண்டாம் வகை (Population II ) விண்மீன் என்பர். குறைவான் செழுமை கொண்டவைகளால் ஆனவற்றை முதல் வகை (population I ) என்பர். பொதுவாக கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் உள்ள விண்மீன்கள் எல்லாம் இரண்டாம் வகை விண்மீன்களாக உள்ளன.[22]
விண்மீன் வயது
[தொகு]உலோகத் தனிமங்கள், விண்மீன்களின் பரிமாண வளர்ச்சிப் படியில் உயர் வெப்ப நிலைகளில் நிகழும் அணுக்கருச் சேர்க்கை வினைகளால் ஏற்படுகின்றன. உயர் வெப்ப நிலைகளில் இவை நிகழ்வதால் ஒரு விண்மீனில் இருக்கும் உலோக அணுக்களின் செழுமை அவ விண்மீனின் வயதைக் குறிக்கும் ஒரு காரணியாக விளங்குகிறது.[23]
மேற்கோள்
[தொகு]- ↑ "Hubble Images a Swarm of Ancient Stars". HubbleSite News Desk (Space Telescope Science Institute). 1999-07-01. http://hubblesite.org/newscenter/newsdesk/archive/releases/1999/26/. பார்த்த நாள்: 2006-05-26.
- ↑ 2.0 2.1 McLaughlin, Dean E. ; Harris, William E.; Hanes, David A. (1994). "The spatial structure of the M87 globular cluster system". Astrophysical Journal 422 (2): 486–507. doi:10.1086/173744. Bibcode: 1994ApJ...422..486M.
- ↑ Sharp, N. A. "M22, NGC6656". REU program/NOAO/AURA/NSF. Archived from the original on 2014-10-17. பார்க்கப்பட்ட நாள் 2006-08-16.
- ↑ Boyd, Richard N. (2008). An introduction to nuclear astrophysics. University of Chicago Press. p. 376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-06971-0.
- ↑ "ESA/Hubble Picture of the Week". Engulfed by Stars Near the Milky Way’s Heart. பார்க்கப்பட்ட நாள் 28 June 2011.
- ↑ "Spot the Difference — Hubble spies another globular cluster, but with a secret". Picture of the Week. ESA/Hubble. பார்க்கப்பட்ட நாள் 5 October 2011.
- ↑ Harris, William E. (2003). "CATALOG OF PARAMETERS FOR MILKY WAY GLOBULAR CLUSTERS: THE DATABASE". பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ Frommert, Hartmut (2007). "Milky Way Globular Clusters". SEDS. பார்க்கப்பட்ட நாள் 2008-02-26.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ Ashman, Keith M.; Zepf, Stephen E. (1992). "The formation of globular clusters in merging and interacting galaxies". Astrophysical Journal, Part 1 384: 50–61. doi:10.1086/170850. Bibcode: 1992ApJ...384...50A.
- ↑ Barmby, P.; Huchra, J. P. (2001). "M31 Globular Clusters in the Hubble Space Telescope Archive. I. Cluster Detection and Completeleness". The Astronomical Journal 122 (5): 2458–2468. doi:10.1086/323457. Bibcode: 2001AJ....122.2458B. http://www.journals.uchicago.edu/doi/full/10.1086/323457.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Dauphole, B.; Geffert, M.; Colin, J.; Ducourant, C.; Odenkirchen, M.; Tucholke, H.-J. (1996). "The kinematics of globular clusters, apocentric distances and a halo metallicity gradient". Astronomy and Astrophysics 313: 119–128. Bibcode: 1996A&A...313..119D. https://archive.org/details/sim_astronomy-and-astrophysics_1996-09_313_1/page/119.
- ↑ Harris, William E. (1991). "Globular cluster systems in galaxies beyond the Local Group". Annual Review of Astronomy and Astrophysics 29 (1): 543–579. doi:10.1146/annurev.aa.29.090191.002551. Bibcode: 1991ARA&A..29..543H.
- ↑ Dinescu, D. I.; Majewski, S. R.; Girard, T. M.; Cudworth, K. M. (2000). "The Absolute Proper Motion of Palomar 12: A Case for Tidal Capture from the Sagittarius Dwarf Spheroidal Galaxy". The Astronomical Journal 120 (4): 1892–1905. doi:10.1086/301552. Bibcode: 2000astro.ph..6314D. https://archive.org/details/sim_astronomical-journal_2000-10_120_4/page/1892.
- ↑ Piotto, G.; et al. (May 2007). "A Triple Main Sequence in the Globular Cluster NGC 2808". The Astrophysical Journal 661 (1): L53–L56. doi:10.1086/518503. Bibcode: 2007ApJ...661L..53P.
- ↑ 15.0 15.1 Lotz, Jennifer M.; Miller, Bryan W.; Ferguson, Henry C. (September 2004). "The Colors of Dwarf Elliptical Galaxy Globular Cluster Systems, Nuclei, and Stellar Halos". The Astrophysical Journal 613 (1): 262–278. doi:10.1086/422871. Bibcode: 2004ApJ...613..262L.
- ↑ 16.0 16.1 Elmegreen, B. G.; Efremov, Y. N. (1999). "A Universal Formation Mechanism for Open and Globular Clusters in Turbulent Gas". Astrophysical Journal 480 (2): 235. doi:10.1086/303966. Bibcode: 1997ApJ...480..235E.
- ↑ (2001-03-01). "Ashes from the Elder Brethren — UVES Observes Stellar Abundance Anomalies in Globular Clusters". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2006-05-26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-15. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
- ↑ Talpur, Jon (1997). "A Guide to Globular Clusters". Keele University. பார்க்கப்பட்ட நாள் 2007-04-25.
- ↑ Weaver, D.; Villard, R.; Christensen, L. L.; Piotto, G.; Bedin, L. (2007-05-02). "Hubble Finds Multiple Stellar 'Baby Booms' in a Globular Cluster". Hubble News Desk. http://hubblesite.org/newscenter/archive/releases/2007/18/full/. பார்த்த நாள்: 2007-05-01.
- ↑ Chaboyer, B.. "Globular Cluster Age Dating". Astrophysical Ages and Times Scales, ASP Conference Series, 162–172.
- ↑ Burkert, Andreas; Tremaine, Scott (April 1, 2010). "A correlation between central supermassive black holes and the globular cluster systems of early-type galaxies". arXiv:1004.0137 [astro-ph.CO]. "A possible explanation is that both large black-hole masses and large globular cluster populations are associated with recent major mergers.".
- ↑ Green, Simon F.; Jones, Mark H.; Burnell, S. Jocelyn (2004). An introduction to the sun and stars. Cambridge University Press. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-54622-2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Harris, W. E. (1976). "Spatial structure of the globular cluster system and the distance to the galactic center". Astronomical Journal 81: 1095–1116. doi:10.1086/111991. Bibcode: 1976AJ.....81.1095H.
உசாத்துணை
[தொகு]- NASA Astrophysics Data System has a collection of past articles, from all major astrophysics journals and many conference proceedings.
- SCYON பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம் is a newsletter dedicated to star clusters.
- MODEST is a loose collaboration of scientists working on star clusters.
நூல்கள்
[தொகு]- Binney, James; Tremaine, Scott (1987). Galactic Dynamics (First ed.). Princeton, New Jersey: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-08444-0.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Heggie, Douglas; Hut, Piet (2003). The Gravitational Million-Body Problem: A Multidisciplinary Approach to Star Cluster Dynamics. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-77486-1.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Spitzer, Lyman (1987). Dynamical Evolution of Globular Clusters. Princeton, New Jersey: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-08460-2.
- Elson, Rebecca; Hut, Piet; Inagaki, Shogo (1987). Dynamical evolution of globular clusters. Annual review of astronomy and astrophysics 25 565. Bibcode: 1987ARA&A..25..565E
- Meylan, G.; Heggie, D. C. (1997). Internal dynamics of globular clusters. The Astronomy and Astrophysics Review 8 1. Bibcode: 1997A&ARv...8....1M
வெளியிணைப்புகள்
[தொகு]- Globular Clusters பரணிடப்பட்டது 2008-02-24 at the வந்தவழி இயந்திரம், SEDS Messier pages
- Milky Way Globular Clusters
- Catalogue of Milky Way Globular Cluster Parameters பரணிடப்பட்டது 2006-10-02 at the வந்தவழி இயந்திரம் by William E. Harris, McMaster University, Ontario, Canada
- A galactic globular cluster database by Marco Castellani, Rome Astronomical Observatory, Italy
- Key stars have different birthdays article describes how stars in globular clusters are born in several bursts, rather than all at once
- Globular Clusters Blog News, papers and preprints on Galactic Globular Clusters
- Globular Clusters Group பரணிடப்பட்டது 2012-03-06 at the வந்தவழி இயந்திரம் on CiteULike
- Clickable Messier Object table including globular clusters பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம்