கோ. சாரங்கபாணி (எழுத்தாளர்)
|
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கோ. சாரங்கபாணி | |
---|---|
படிமம்:Pulavar.G.Sarangabany.jpg புலவர் கோ. சாரங்கபாணி | |
பிறப்பு | காரைக்கால், புதுச்சேரி | 18 திசம்பர் 1939
இறப்பு | ஆகத்து 20, 2020 காரைக்கால், புதுச்சேரி | (அகவை 80)
இறப்பிற்கான காரணம் | கொரோனா தொற்று, மாரடைப்பு |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | கோ. சா |
கல்வி | முதுகலை, BEd |
பணி | தமிழாசிரியர், தமிழ் பேராசிரியர் |
அறியப்படுவது | பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | நவநீதம் |
பிள்ளைகள் | கலைக்குமரன் (மகன்), உமையாள் (மகள்) |
விருதுகள் | தமிழ்மாமணி விருது |
கோ. சாரங்கபாணி (18 திசம்பர் 1939 - 20 ஆகத்து 2020), தமிழக எழுத்தாளரும், புலவரும், சமய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவாளரும் ஆவார். இவர் பட்டிமன்றங்களிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகமாகப் பங்கேற்றவர். அருட்கதை நம்பி, முத்தமிழ் வித்தகர், நடிப்பிசை நாவலர், காரையின் கம்பர் என இலக்கிய உலகில் போற்றப்பட்டவர். பைந்தமிழ்ப் பேரவையின் நிறுவனத் தலைவர். இவர் புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது பெற்றவர்.
கோ. சாரங்கபாணி புதுவை அரசு பள்ளியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். காரைக்கால் அம்மையார் திருக்கோவிலில் 55 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியப் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். 1993 ஆம் ஆண்டு முதல் பைந்தமிழ்ப் பேரவை என்ற அமைப்பை தோற்றுவித்து 2020 வரை பைந்தமிழ்ப் பேரவையின் பெயரில் இலக்கியப் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். காரை பாரதி தமிழ் சங்கத்தை 2016-ஆம் ஆண்டு தோற்றுவித்து 2020 வரை நான்காண்டு காலங்கள் தலைவராக செயல்பட்டார். இவர் புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது பெற்றவர்.[சான்று தேவை] காரைக்காலில் பிறந்த கோ. சாரங்கபாணி 30 ஆண்டு காலம் புதுச்சேரியில் வசித்து வந்தார்.
எழுதிய நூல்கள்
[தொகு]- கம்ப மகரந்தம்
- சங்கமம்
- வாழ்வியல் சிந்தனைகள்
- பிள்ளைநிலா
- இதிகாச நதிகள்
- கம்பன் காட்சி அமுதம்
- கம்பமேகம்
- பிதிர் வாக்கியம்
- கலைஞர் 87-87
- காயும் கனியும்
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[சான்று தேவை]
[தொகு]- முத்தமிழ் வித்தகர்
- நடிப்பிசை நாவலர்
- அருட்கதை நம்பி
- தமிழ்மாமணி
- காரையின் கம்பர்
உசாத்துணை
[தொகு]- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011