உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்
மஞ்சவனப்பதி முருகன் ஆலயம் is located in இலங்கை
மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்
மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°41′49″N 80°00′55″E / 9.6970581°N 80.0152788°E / 9.6970581; 80.0152788
பெயர்
பெயர்:மஞ்சவனப்பதி முருகன் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1910

[1] மஞ்சவனப்பதி முருகன் ஆலயம் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொக்குவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவிலாகும். 1910 ஆம் ஆண்டு இவ் ஆலயம் புதிதாக வடிவமைக்கப்பட்டது.

மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

[தொகு]

கொக்குவில் கிராமத்தில் மஞ்சமருதிகாடு எனும் இடப்பெயருடைய குறிச்சி ஓன்று காணப்பட்டது. அவ்விடம் மேட்டுநிலமாகவும், மருத மரங்கள் நிறைந்த சோலையாகவும் அமபலவான விநாயகமூர்த்தி என்ற பெயருடைய ஆலயமும் இருந்தது. தற்போது பரிவார மூர்த்தியாக விநாயகர் இருக்கும் இடத்தில் இருந்த அந்த விநாயகர் 'மஞ்சமூர்த்தி' என அழைக்கப்பட்டு தற்போது மஞ்சவனப்பதி முருகனாக கர்ப்பக்கிரகத்தில் வள்ளி தெய்வயானை சமேதராக சுப்ரமணிய பெருமான் வீற்றிருக்கிறார் என கர்ணன் பரம்பரைக் கதையாக கூறப்பட்டு வருகிறது.

அங்கு அவ்வாலயமும் அதற்கு முன் ஒரு கொட்டகையும் அமைக்கப்பட்டிருந்தன. இவை யாவும் ஓலையால் வேயப்படடனவாகவும் தரை சாணகத்தால் மெழுகப்பட்டும் வந்ததுடன் அந்தண பரம்பரையை சாராத சைவமரபில் வந்த ஒருவரினால் ஒரு வேளை பூசையும் இடம்பெற்று வந்தது. இவ்வாறு மடாலயமாக இருந்த இவ்வாலயம் 1817ல் கற்கோவிலாக அமைக்கப்பட்டதுடன் அந்தண மரபில் வந்தவர்களே நித்திய நைமித்திய கிரியைகளை மேற்கொண்டு வரலாயினர். ஆரம்பத்தில் சிவஸ்ரீ சின்னப்பா ஐயர் தொடக்கம் தற்போது விக்னேஸ்வர குருக்கள் வரை அவர்களது பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மஞ்சவனப்பதி முருகன் ஆலய அமைப்பு

[தொகு]

இந்துப் பண்பாட்டு மரபில் கட்டிட கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை எனும் நுண் கலைகள் கோயில்களை நிலைகளாக கொண்டு திகழ்கின்றன. ஆலயங்கள் இறைவனின் அருள் சுரக்கும் இடமாக மட்டுமல்லாது நுண் கலைகளின் உறைவிடமாகவும் திகழ்கின்றன. இவ்வாலயத்தில் ஆகம முறைப்படி திராவிட பாணியில் கர்ப்பகிரகமும் ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயமும், கிழக்கே பஞ்ச தளங்களை உடைய கோபுரமும் அதற்கு இரு மருங்கிலும் மணிக்கூட்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இதில் கந்தபுராண, பெரியபுராண கதைகளை சித்தரிக்கும் வள்ளி திருமணம், சுந்தரர் கயிலைக்கு செல்லும் காட்சி , நாயன்மார்கள், முருகன் சிவனுக்கு உபதேசம்செய்யும் காட்சிகள் கலை அம்சத்தை வெளிப்படுத்துவனவாக உள்ளன. இவற்றுடன் தேரில் காணப்படும் சிற்பங்கள் விமானம் போன்றவை இறைவனின் அற்புதங்களை வடித்துள்ளன

ஆலயத்தின் மூல மூர்த்தியாக வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலையானது கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளதுடன் பரிவார மோர்த்திகளாக பிள்ளையார் கிருஷ்ணர் லட்சுமி மற்றும் நடராஜர் ஆகியவை காணப்படுவதுடன் உள் மற்றும் வெளி வீதிகளுடன் தெற்கு புறத்தில் தீர்த்தவாரியும் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் மண்டபங்களும் கொண்டுள்ளது. ஆலயத்தின் தல விருட்சமாக கடம்பமரம் அமைந்துள்ளது

பூசைகளும் கிரியைகளும்

[தொகு]

ஆதி காலத்தில் ஒரு வேளை பூசை மட்டுமே செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆறுகால பூசைகள் இடம்பெறுவதுடன் மகோற்சவ காலத்து பதினைந்து தினங்களும் விசேட கிரியை வழிபாடுகள் வெகு விமரிசையாக இடம் பெறுகின்றன. ஆடிவேல் விழா, கார்த்திகை, சதுர்த்தி, திருவெம்பாவை, கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களும் இடம்பெறுகின்றன. ஆகம மரபு சாரதா வழிபாடுகளான பிள்ளை விற்று வாங்கல், முடி இறக்கல், திருமண விழா போன்றவற்றையும் இறையடியார்கள் நிறைவேற்றி இறை அருளை வேண்டி நிற்கின்றனர்.

ஆலயத்தின் சிறப்பம்சங்கள்

[தொகு]

நூறு வருடங்களுக்குமேலான பூர்வீகத்தைக்கொண்ட இவ் ஆலயமானது இந்திய வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்படட திருத்தேர். மேலும் அதில் நுட்பமாக வடிக்கப்படட கலை அம்சங்களையும் மரபு சார்ந்த விடயங்களும் கொண்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

முருகன் மீது பாடல்கள்

[தொகு]

குமாரசாமிப் புலவர் மஞ்சவனப்பதி முருகன் மீது மஞ்சவனபதிகம், திருவூஞ்சல், ஏசல் என்பன பாடியுள்ளார்.

உசாத்துணை

[தொகு]
  • மஞ்சவனப்பதி கும்பாபிஷேக சிறப்பு மலர்
  1. 'Temple website'