உள்ளடக்கத்துக்குச் செல்

கேர் பூசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேர் பூசை (Ker puja) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். கார்ச்சி பூசை முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு ஆகத்து மாதத்தில் கேர் பூசை கொண்டாடப்படுகிறது.[1] வாசுத்து தேவதையை வழிபடும் பழங்குடியினர் முக்கியமாக இத்திருவிழாவாவைக் கொண்டாடுகின்றனர். பூசையில் இதில் காணிக்கைகள், பலிகள் ஆகியவையும் அடங்கும். மாநில மக்களின் பொது நலம்[2] மற்றும் நல்வாழ்வுக்காக முன்னாள் ஆட்சியாளர்கள் இந்த பூசையை செய்ததாக நம்பப்படுகிறது.[3]

பூசையை திரிபுராவின் அரசர்கள் தொடங்கி வைத்தனர். அலாம் பழங்குடியினர் பூசையில் பங்கேற்பது அவசியமாகும். திருவிழாவின் போது 2.5 நாட்களுக்கு, தலைநகரின் நுழைவாயில்கள் மூடப்படும். ஆளும் இறையாண்மை மக்கள் உட்பட பங்கேற்பாளர்கள், காலணிகள் அணியவோ, தீ மூட்டவோ, ஆடவோ, பாடவோ அனுமதிக்கப்படுவதில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ker puja". Assam Tribune. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2013.
  2. Barthakur, Dilip Ranjan (2003). The Music And Musical Instruments Of North Eastern India. Mittal Publications. pp. 57–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-881-5. பார்க்கப்பட்ட நாள் 28 April 2013.
  3. Sharma, A. P. (8 May 2010). Famous Festivals of India. Pinnacle Technology. pp. 188–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61820-288-8. பார்க்கப்பட்ட நாள் 28 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்_பூசை&oldid=3408613" இலிருந்து மீள்விக்கப்பட்டது