கூம்பலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூம்பலகன்
இந்தியாவின் உத்ரகாண்ட் மாநிலத்தில் ஒரு பெண் பறவை(♀)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. erythrinus
இருசொற் பெயரீடு
Carpodacus erythrinus
(Pallas, 1770)
Distribution map
வேறு பெயர்கள்

Erythrina erythrina

ஆண் பறவை

கூம்பலகன் அல்லது சாதா கூம்பலகுச் சில்லை (common rosefinch) என்பது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் வாழக்கூடிய ஒரு பறவையாகும். பொதுவாக இப்பறவை மழைக் காலத்தில் இந்தியாவுக்கு வலசை வரக்கூடியது. சிறு கூட்டமாக திரியக்கூடியது.

பெயர்கள்[தொகு]

தமிழில்  :கூம்பலகன்

ஆங்கிலப்பெயர்  :Common Rosefinch

அறிவியல் பெயர்  :Carpodacus erythrinus

விளக்கம்[தொகு]

15 செ.மீ. அளவு உடைய, இப்பறவைகளில் ஆண்பறவை அழகான ரோசா நிறத்தில் தலை, நெஞ்சு, முதுகு, தோள் ஆகியவை கொண்டிருக்கும். பெண்பறவை பசுமை கலந்த தவிட்டு நிறம் கொண்டது. இரு பாலினத்திற்கும் அலகு ஒன்று போல இருக்கும். வால் பிளவு பட்டிருக்கும்.

உணவு[தொகு]

பயிர்களின் தானியங்களை கொத்தித் தின்னும். அரசு, ஆல், உன்னி போன்றவற்றின் பழங்களையும் முள் முருங்கை போன்ற சில பூக்களின் தேனையும் உண்ணும்.டிவீஇ. டிவீஇ டிவீஇயு என்றோ டி.டி.யூ எனவோ குரல் கொடுக்கும். [2]

கூம்பலகன் பறவையின் முட்டைகள்

மேற்கோள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Carpodacus erythrinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:150
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூம்பலகன்&oldid=3762430" இலிருந்து மீள்விக்கப்பட்டது