கூம்பலகன்
| கூம்பலகன் | |
|---|---|
| இந்தியாவின் உத்ரகாண்ட் மாநிலத்தில் ஒரு பெண் பறவை(♀) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | Passeriformes |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | C. erythrinus |
| இருசொற் பெயரீடு | |
| Carpodacus erythrinus (Pallas, 1770) | |
| Distribution map | |
| வேறு பெயர்கள் | |
|
Erythrina erythrina | |

கூம்பலகன் அல்லது சாதா கூம்பலகுச் சில்லை (common rosefinch) என்பது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் வாழக்கூடிய ஒரு பறவையாகும். பொதுவாக இப்பறவை மழைக் காலத்தில் இந்தியாவுக்கு வலசை வரக்கூடியது. சிறு கூட்டமாக திரியக்கூடியது.
பெயர்கள்
[தொகு]தமிழில் :கூம்பலகன்
ஆங்கிலப்பெயர் :Common Rosefinch
அறிவியல் பெயர் :Carpodacus erythrinus
விளக்கம்
[தொகு]15 செ.மீ. அளவு உடைய, இப்பறவைகளில் ஆண்பறவை அழகான ரோசா நிறத்தில் தலை, நெஞ்சு, முதுகு, தோள் ஆகியவை கொண்டிருக்கும். பெண்பறவை பசுமை கலந்த தவிட்டு நிறம் கொண்டது. இரு பாலினத்திற்கும் அலகு ஒன்று போல இருக்கும். வால் பிளவு பட்டிருக்கும்.
உணவு
[தொகு]பயிர்களின் தானியங்களை கொத்தித் தின்னும். அரசு, ஆல், உன்னி போன்றவற்றின் பழங்களையும் முள் முருங்கை போன்ற சில பூக்களின் தேனையும் உண்ணும்.டிவீஇ. டிவீஇ டிவீஇயு என்றோ டி.டி.யூ எனவோ குரல் கொடுக்கும். [2]

மேற்கோள்
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Carpodacus erythrinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013.
{{cite cite web}}: Invalid|ref=harv(help) - ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:150