குடுமியான்மலை சிகாகிரீசுவரர் கோவில்
சிகாகிரீஷ்வரர் கோவில் என்பது இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், குடுமியான்மலையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் சிகாநாதர் என அழைப்படுகிறார்.[1] இவருக்கு குடுமிநாதர் என்றொரு பெயரும் உண்டு.
நிர்வாகம்
[தொகு]இக்கோவில் இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
தெய்வங்கள்
[தொகு]இக்கோவிலில் சொர்ணாம்பிகை அம்மன், விநாயகர், ஹனுமன், தெட்சிணாமூர்த்தி, பைரவர், பெருமாள் மற்றும் மலையின் உச்சியில் முருகக்கடவுள் போன்ற தெய்வங்கள் உள்ளது.
இசைக்கல்வெட்டு
[தொகு]மகேந்திரவர்ம பல்லவனுடைய இசைக்கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. [1] சரிகமபதநி குறித்த குறிப்புகள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.
குடவரைக்கோவில்
[தொகு]மலையினைக் குடைந்து, குடவரைக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடவரை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இங்கு ஆயக்கலைகள் 63ஐயும் விளக்கக்கூடிய கற்சிற்பங்கள் இக்கோவிலில் இடம்பெற்றுள்ளது.
பங்குனி உத்திர திருவிழா
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுகிறது. [1]