கிறித்தைன் கிர்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தைன் கிர்ச் (Christine Kirch) (1696 கியூபென், செருமனி – 6 மே 1782) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் வானியலாளர்களாகிய கோட்பிரீடு கிர்ச், மரியா மார்கரித்தா கிர்ச் ஆகியோரின் மகளாவார். இவர் கிறித்திபிரீடு கிர்ச்சின் உடன்பிறப்பும் ஆவார். இவரும் இவரது உடன்பிறப்பாகிய மார்கரித்தா கிர்ச்சும் தம் பத்தாம் அகவை முதலே வானியல் கல்வி கற்றனர்.[1] சிறுமியாக இருந்தபோதே இவர் தம் பெற்றோருக்கு வானியல் நோக்கீடுகளில் உதவிபுரிந்துள்ளார். இளங்கிர்ச் நோக்கிடுகளின் நேரத்தைத் தனி ஊசல் உதவியால் அளந்தார். இவர் வளர்ந்ததும் நாட்காட்டிக் கணக்கீடுகளைச் செய்ய பயிற்றுவிக்கப்பட்டார். இவர் முதலில் தன் தாய்க்கும் பிறகு தன் அண்ணனுக்கும் பல்வேறு நாட்காட்டிக் கணக்கீடுகளில் உதவி செய்தார்.[2]

இவர் 1740 வரை தன் பங்களிப்புகளுக்காக ஊதியம் ஏதும் பெறவில்லை. ஆனால், பிரசிய அறிவியல் கல்விக்கழகம் சிறுசிறு கொடைகளை வழங்கியது. இவரது உடன்பிறப்பு கிறித்திபிரீடு கிர்ச் இறந்ததும் அக்கல்விக்கழகம் நாட்காட்டிக் கணக்கீடுகளுக்கு இவரது உதவியை நாடியது. இவர் சிலேசியா மாகாணத்தின் நாட்காட்டிக் கணக்கீடுகளுக்குப் பொறுப்பேற்றார். இது 1740 களின் தொடக்கத்தில் பிரசியா வென்ற பகுதியாகும். இந்தக் கல்விக்கழகம் மட்டுமே நாட்காட்டி உருவாக்கத்தில் தனிக்கோலோச்சியது. சிலேசியா நாட்காட்டி இக்கல்விக்கழகத்துக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தந்தது. எனவே 1776 இல் கிர்ச் இக்கல்விக்கழகத்தால் 400 தாளேர் அளவுக்கு பேரூதியம் வழங்கப்பட்டார்.[2]

இவர் தன் முதுமை வரை தொடர்ந்து இக்கல்விக்கழகத்துக்கு நாட்காட்டிப் பணியைச் செய்து வந்தார். இவரது 77 அகவையில் கல்விக்கழகம் இவருக்குத் தனித்தகைமைநிலையைத் தந்து பணியேதும் தராமலே இவருக்குத் தொடர்ந்து ஊதியம் வழங்கிவந்தது. இவர் வானியலாளர் யோகன் போடவுக்கு நாட்காட்டி தயாரிக்கும் வேலையை அறிமுகப்படுத்தினார்.[2] இவர் 1782 இல் மதிப்புமிக்க வானியலாளராக இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bernardi, Gabriella (2016-01-01) (in en). The Unforgotten Sisters. Springer Praxis Books. Springer International Publishing. பக். 103–106. doi:10.1007/978-3-319-26127-0_16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319261256. https://link.springer.com/chapter/10.1007/978-3-319-26127-0_16. 
  2. 2.0 2.1 2.2 Virginia Trimble, Thomas R. Williams, Katherine Bracher, Richard Jarrell, Jordan D. Marché & F. Jamil Ragep (2007). Biographical Encyclopedia of Astronomers. Springer Science & Business Media. பக். 637. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780387304007. 
  3. Virginia Trimble, Thomas R. Williams, Katherine Bracher, Richard Jarrell, Jordan D. Marché & F. Jamil Ragep (2007). Biographical Encyclopedia of Astronomers. Springer Science & Business Media. பக். 638. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780387304007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தைன்_கிர்ச்&oldid=3048873" இலிருந்து மீள்விக்கப்பட்டது