கத்தார் பல்கலைக்கழக நூலகம்
கத்தார் பல்கலைக்கழக நூலகம் Qatar University Library | |
---|---|
கத்தார் பல்கலைக்கழக நூலகம் | |
நாடு | கத்தார் |
வகை | கல்வி நூல்நிலையம் |
தொடக்கம் | 1973 |
அமைவிடம் | தோகா |
அமைவிடம் | 25°22′38″N 51°29′26″E / 25.377172906619187°N 51.49057033181318°E |
ஏனைய தகவல்கள் | |
Affiliation | கத்தார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.qu.edu.qa/library/ |
Map | |
கத்தார் பல்கலைக்கழக நூலகம் (Qatar University Library) கத்தார் நாட்டில் 1973 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1] கத்தார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூலகம் பயன்படுகிறது.
பெண்களுக்கான நூலகம், ஆண்களுக்கான நூலகம் என்று இருபிரிவுகளாக நூலகம் இயங்குகிறது. பெண்கள் நூலகம் 1200 சதுரமீட்டர் பரப்பளவில் நான்கு அடுக்குகளாகவும், ஆண்கள் நூலகம் 3000 சதுரமீட்டர்கள் பரப்பளவில் இரண்டு அடுக்குகளாகவும் செயல்படுகிறது.[1] நூலகத்தில் இரண்டு அமெரிக்க மூலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டு வரை, நூலகத்தின் இயக்குநராக இமாத் பெச்சிர் பணியாற்றினார்.[2]
கத்தார் பல்கலைக்கழக நூலகம் அனைத்து கத்தார் சமூகத்திற்கும் உயர்தர தகவல் சேவைகளை வழங்குகிறது. அச்சு மற்றும் எண்ணிம வடிவத்தில் விரிவான புத்தக சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. இது கத்தார் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் அனைத்து பகுதிகளிலும் உள்ள அறிவார்ந்த தரவுத்தளங்களிலும் உறுப்பினராக உள்ளது. ஆராய்ச்சி நுட்பங்கள் மற்றும் தகவல் அறிவாற்றல் பற்றிய பயிற்சிகளையும் நூலகம் வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "History". Qatar University. Archived from the original on 14 December 2019. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.
- ↑ "Ambassador Ziadeh visits the American Corners in Qatar University Library". Embassy of the United States in Doha. 2013. Archived from the original on 11 January 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.