க. இராசாராம் நாயுடு
Appearance
இராசாராம் நாயுடு | |
---|---|
உள்ளாட்சித் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 9 அக்டோபர் 1953 – 12 ஏப்ரல் 1954 | |
முதன்மை அமைச்சர் | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி |
முன்னையவர் | என். சங்கர ரெட்டி |
தமிழ்நாடு சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 1968–1975 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருமங்கலம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
கே. இராசாராம் நாயுடு (K. Rajaram Naidu) தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார்.
இளமைப்பருவம்
[தொகு]இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணம நாயுடு திருமாலம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் 1909 பெப்ரவரி 8-இல் பிறந்தார்.
பதவிகள்
[தொகு]1952 ஆண்டு திருமங்கலம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆன இவர் ராஜாஜியின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.[1][2] இவர் 1957 முதல் 1960 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார்.[3] தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[4][5] இவர் 28 சனவரி 1985 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Subodh Chandra Sarkar, ed. (1954). Hindustan Year-book and Who's who. Vol. 22. M. C. Sarkar. p. 635.
- ↑ Jawaharlal Nehru, ed. (1984). Selected Works of Jawaharlal Nehru: Second series. Vol. 24. Jawaharlal Nehru Memorial Fund. p. 287.
- ↑ லேனா தமிழ்வாணன், ed. (1988). தமிழக மாவட்ட நூல் வரிசை : மதுரை மாவட்டம். மணிமேகலைப் பிரசுரம். p. 161.
கே . இராஜாராம் நாயுடு திருமங்கலம் ஊரினரான இவர் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றியவர் .தமிழ் நாடு காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று , மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.
- ↑ கலைஞர் மு. கருணாநிதி, ed. (1975). நெஞ்சுக்கு நீதி. Vol. இரண்டாம் பாகம். தினமணி கதிர் வெளியீடு. p. 84.
ராஜாராம் நாயுடு அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் , அதற்குரிய வசதிகளையும் ஏற்றுக் கொண்டார் .அப்பொழுதுதான் முதன் முதலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அதற்கு வசதிகள் என்பதும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .
- ↑ A.S. Panneerselvan, ed. (15 March 2021). Karunanidhi: A Life. Penguin Random House India Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789390914548.