உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்பது ரூபாய் நோட்டு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்பது ரூபாய் நோட்டு
நூலாசிரியர்தங்கர் பச்சான்
அட்டைப்பட ஓவியர்முன்னட்டை ஓவியம் : ஓவியர் கே.எம்.ஆதிமூலம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்செம்புலம், எண் 2சி, நான்காவது குறுக்குத் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600097
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு : அக்டோபர் 1996
பக்கங்கள்192

ஒன்பது ரூபாய் நோட்டு (ஆங்கிலம்:Onbathu Rupai Nottu) என்பது தங்கர் பச்சான் எழுதிய முதல் தமிழ்ப் புதினம் ஆகும்.[1] மேலும் இந்நூலுக்கு த. ஜெயகாந்தன் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

வரலாறு

[தொகு]

ஒன்பது ரூபாய் நோட்டும் இரண்டு - பத்து - தொண்ணூற்று ஆறும் என்ற தலைப்பில் பேராசிரியர் த. பழமலய் இந் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையின் பகுதி:

"...மண்ணை ஏமாற்ற முடியாது என்பதால் ஏமாற்றுவதில் நம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள். இவர்களால் ஏமாற்ற முடியாது. கொள்ளை வணிகர்களைப் போல தொழிற்கல்விக் கயவர்களைப் போல இவர்களால் முன்னேற முடியாதுதான். இங்குதான் உண்மையிலேயே முன்னேற்றம் என்பது எது என்பதை மனித சமுதாயம் சந்திக்கவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது."

1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நூலாசிரியர், தனது தந்தையின் இறப்புக்காக தனது கிராமத்திற்குப் போயிருந்தபோது எழுந்த எண்ணங்களால் எழுத ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புதினம் முடிய பதினொரு ஆண்டுகள் ஆனது. பலாவும், முந்திரியும், மாவும் நெடிவீசும் மண்ணின் மணத்துடன் ’வறுமையில் செம்மை’ எனும் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

திரைப்பட வடிவம்

[தொகு]

இந்தப் புதினம் தங்கர் பச்சானால் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற பெயரிலேயே திரைப்படமாக இயக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தங்கர் பச்சானின் முதல் தமிழ்ப் புதினம்" (in தமிழ்). ஒன் இந்தியா. 15 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "ஒன்பது ரூபாய் நாட்டு திரை வசனம்" (in ஆங்கிலம்). Indiaglitz.com. 28 நவம்பர் 2007. Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் சூலை 6, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

[தொகு]