ஐதரசன் தயோபெராக்சைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சல்பெனிக்கு அமிலம்
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
தயோபெராக்சால் | |||
வேறு பெயர்கள்
சல்பெனிக்கு அமிலம்
ஆக்சாயிருசல்பேன் கந்தக ஐதரைடு ஐதராக்சைடு சல்போனோல் சல்பானோல் | |||
இனங்காட்டிகள் | |||
62607-44-7 | |||
ChEBI | CHEBI:37858 | ||
ChemSpider | 394637 | ||
Gmelin Reference
|
672 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 447587 | ||
வே.ந.வி.ப எண் | WP4100000 | ||
| |||
பண்புகள் | |||
H2OS | |||
வாய்ப்பாட்டு எடை | 50.08 g·mol−1 | ||
அடர்த்தி | 1.249 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.484 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஐதரசன் தயோபெராக்சைடு (Hydrogen thioperoxide) H2OS என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். ஆக்சாயிருசல்பேன் அல்லது சல்பனால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. H-S-O-H என்ற கட்டமைப்பைக் கொண்ட இச்சேர்மம் பொதுவான ஐதரசன் பெராக்சைடின் (H-O-O-H) கந்தகம் பதிலீடு செய்யப்பட்ட ஒப்புமையாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட வகை சால்கோசனைக் கொண்ட எளிய ஐதரசன் சால்கோசனைடாகவும் கருதப்படுகிறது. ஐதரசன் பெராக்சைடு மற்றும் ஐதரசன் இருசல்பைடு (H-S-S-H) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கற்பனையான இடைநிலை வேதிப்பொருள் எனவும் ஐதரசன் தயோபெராக்சைடு சேர்மம் விவரிக்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் இது மற்ற இரண்டில் ஒன்றை விட கணிசமாக குறைவான நிலைப்புத் தன்மை கொண்டுள்ளது. கரிம சேர்மங்களின் (R-S-O-H) சல்பெனிக் அமில வகுப்பின் கனிம வேதியியல் அமைப்பாகவும் இது அறியப்படுகிறது. மேலும் இங்குள்ள "R" என்பது எந்தவொரு கரிம அமைப்பாகவும் இருக்கலாம். சேர்மத்தில் கந்தகம் 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கிறது.
தயாரிப்பு
[தொகு]8 கெல்வின் வெப்பநிலையில் ஆர்கானில் உறைந்த ஓசோன் மற்றும் ஐதரசன் சல்பைடு கலவையின் ஒளியாற் பகுப்பு மூலம் ஆய்வகங்களில் ஐதரசன் தயோபெராக்சைடு தயாரிக்கப்பட்டது.[2] இரு-மூவிணைய-பியூட்டைல் சல்பாக்சைடை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். நீர் மற்றும் கந்தகக் கல்வையில் மின்சாரத்தைச் செலுத்தியும் இதை தயாரிக்க இயலும்.[1][3]
விண்மீன்களிடை ஊடகத்தில் மூவைதரசன் நேர்மின் அயனி, ஈரைதரசன் மற்றும் எலக்ட்ரான் ஆகியவற்றுடன் கந்தக மோனாக்சைடுடன் நிகழும் வினையில் ஐதரசன் தயோபெராக்சைடு உருவாகிறது என்று ஒரு கருதுகோள் உள்ளது. கந்தக மோனாக்சைடு அணுநிலை ஐதரசனுடன் வினைபுரிந்து HOS மற்றும் HSO பிணைப்புகளை உருவாக்குகிறது என்பது மற்றொரு சாத்தியமான வழியாகும். இது மற்றொரு ஐதரசன் அணுவையும் சேர்த்துக் கொள்ளும். இவ்வினைக்கான பொறிமுறையில் அதிகப்படியான ஆற்றலை எடுத்துச் செல்ல ஒரு தூசி துகள் தேவைப்படலாம்.[4]
பண்புகள்
[தொகு]ஐதரசன் தயோபெராக்சைடு மூலக்கூறுகளின் இரண்டு அணுக்கள் அல்லது குழுக்களுக்கு இடையேயான உறவு 0 பாகை கோணத்தை விட அதிகமாகவும் 120 பாகை கோணத்தை விட குறைவானதாகவும் கொண்ட கிரகண இணக்க இடைநிலையாக உள்ளது.[5] ஐதரசன் தயோபெராக்சைடு சேர்மத்தில் உள்ள பிணைப்பு நீளங்களின் அளவீடுகள் H-S 1.3420 Å, S-O 1.6616 Å, O-H 0.9606 Å. என்பதாகவும் பிணைப்பு கோணங்கள் H-S-O 98.57°, S-O-H 107.19° என்பதாகவும் அளவிடப்பட்டுள்ளன. H-S மற்றும் O-H பிணைப்புகள் 90.41° என்ற கோண அளவுகளில் முறுக்கப்பட்டுள்ளன.[6]
வினைகள்
[தொகு]ஐதரசன் தயோபெராக்சைடு சேர்மத்தின் இரண்டு மூலக்கூறுகள் சல்பினோதயோயிக்கு அமிலம் HS(=O)SH மற்றும் நீரை உருவாக்குவதற்காக வளைய ஒடுக்கம் அடைகின்றன.[7]
ஐதரோசல்பைடு HS− அயனி HSOH உடன் வினைபுரிந்து இருசல்பேன் (HSSH) உருவாகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Winnewisser, G.; Lewen, F.; Thorwirth, S.; Behnke, M.; Hahn, J.; Gauss, J.; Herbst, E. (2003). "Gas-Phase Detection of HSOH: Synthesis by Flash Vacuum Pyrolysis of Di-tert-butyl Sulfoxide and Rotational-Torsional Spectrum". Chem. Eur. J. 9 (22): 5501–5510. doi:10.1002/chem.200305192. பப்மெட்:14639633. Bibcode: 2003CEJ.....9.5501W.
- ↑ Smardzewski1, R.R.; Lin, M.C. (1977). "Matrix reactions of oxygen atoms with H2S molecules". J. Chem. Phys. 66 (7): 3197–3204. doi:10.1063/1.434294. Bibcode: 1977JChPh..66.3197S.
- ↑ Beckers, H.; Esser, S.; Metzroth, T.; Behnke, M.; Willner, H.; Gauss, J.; Hahn, J. (2006). "Low-Pressure Pyrolysis of tBu2SO: Synthesis and IR Spectroscopic Detection of HSOH". Chem. Eur. J. 12 (3): 832–844. doi:10.1002/chem.200500104. பப்மெட்:16240313.
- ↑ Baum 70-73
- ↑ Cárdenas-Jirón, G.I.; Letelier, J.R.; Toro-Labbé, A. (1998). "The Internal Rotation of Hydrogen Thioperoxide: Energy, Chemical Potential, and Hardness Profiles". J. Phys. Chem. A 102 (40): 7864–7871. doi:10.1021/jp981841j. Bibcode: 1998JPCA..102.7864C.
- ↑ Baum, Oliver (2008). HSOH: An Elusive Species with Many Different Traits (PDF) (in ஆங்கிலம்). Cuvillier Verlag. pp. 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783867277907. Archived from the original (PDF) on 2017-03-12. பார்க்கப்பட்ட நாள் 2017-03-11.
- ↑ Freeman, Fillmore; Bui, An; Dinh, Lauren; Hehre, Warren J. (2 August 2012). "Dehydrative Cyclocondensation Mechanisms of Hydrogen Thioperoxide and of Alkanesulfenic Acids". The Journal of Physical Chemistry A 116 (30): 8031–8039. doi:10.1021/jp3024827. பப்மெட்:22724673. Bibcode: 2012JPCA..116.8031F.
- ↑ Kolloru, Gopi K. (25 February 2015). Hydrogen Sulfide in Redox Biology (in ஆங்கிலம்). Academic Press. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780128016237.