எல்லைகள் இல்லாத பெண்கள்
Frauen ohne Grenzen | |
சுருக்கம் | WwB |
---|---|
உருவாக்கம் | 2001 |
நிறுவனர் | டாக்டர். எடிட் ஸ்க்லாஃபர் |
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
தலைமையகம் | |
வலைத்தளம் | wwb |
எல்லைகள் இல்லாத பெண்கள் என்பது பெண்களுக்கான சர்வதேச வாதிடும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது ஆஸ்திரியாவின் வியன்னாவில் அமைந்துள்ளது மற்றும் உலகெங்கிலும் உள்ள சர்வதேச கூட்டாளர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. டாக்டர். எடிட் ஸ்க்லாஃபர் 2002 இல் இந்த அமைப்பை நிறுவினார், பெண்களை மாற்றத்தின் முகவர்களாக மேம்படுத்தும் நோக்கத்துடன். [1] எல்லைகள் இல்லாத பெண்கள் நிர்வாகக் குழுவில் ஆஸ்திரிய கலைஞரான செனியா ஹவுஸ்னர் உள்ளார். [2] எல்லைகள் இல்லாத பெண்கள் நிறுவனம் பெரும்பாலும் பல்வேறு ஆஸ்திரிய அமைச்சகங்கள், ஆஸ்திரிய ஆராய்ச்சி நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியவற்றால் நிதியளிக்கப்படுகின்றன.
திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்
[தொகு]இதன் தொடக்கத்தில் இருந்து, தென்கிழக்கு இந்தியாவில் உள்ள சென்னை, ஜரஞ்ச், துருக்கி, சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா உட்பட பல நெருக்கடி மற்றும் மாற்றம் உள்ள நாடுகளில் பல்வேறு திட்டங்களை எல்லைகள் இல்லாத பெண்கள் நிறுவன உறுப்பினர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம், 2003 ஆம் ஆண்டு முதல், எல்லைகளற்ற பெண்கள் மாநாட்டிற்கு ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் இருந்து 18 பெண்களை அழைத்தனர் [3] [4] அப்போதிருந்து, தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடுகளில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் மற்றும் சிவில் சமூகத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். [5]
ஆப்கானிஸ்தானில், 2004 ஆப்கானிஸ்தான் தேர்தலுக்கான தயாரிப்பில், ஆப்கானிய பெண்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், எல்லைகள் இல்லாத பெண்கள் அமைப்பு ஒரு கையேட்டை உருவாக்கினர். [6]
ஆஸ்திரிய ஆராய்ச்சி நிதியத்தின் நிதியுதவியுடன், எல்லைகள் இல்லாத பெண்கள் சவுதி அரேபியாவில் இரண்டு வருட "பிரிட்ஜிங் தி கேப்" ஆய்வை நடத்தினர். [7] எல்லைகள் இல்லாத பெண்கள் அமைப்பு, கிங் சவுத் பல்கலைக்கழகம், கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகம், காசிம் பல்கலைக்கழகம் மற்றும் கிங் பைசல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 4,455 ஆண் மற்றும் பெண் மாணவர்களிடம் பாலினப் பாத்திரங்களை மாற்றுவது, எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் ஆரோக்கியம் குறித்த அவர்களின் கருத்துக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்க ஆய்வு செய்தனர். கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், சவுதி அரேபிய பெண் மாணவர்களுக்கான பட்டறைகளை உருவாக்கியது. [8]
மேலும், இந்த அமைப்பு, குடும்ப வன்முறைக்கு எதிரான திட்டங்களையும் நடத்தினர். பயங்கரவாதத்திற்கு எதிரான பெண்கள் பிரச்சாரம் கடுமையாக தாக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் முன்னோக்குகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது. [9]
விளையாட்டு திட்டங்கள்
[தொகு]எல்லைகள் இல்லாத பெண்கள் நிறுவன உறுப்பினர்கள் பல விளையாட்டு சார்ந்த திட்டங்களை நடத்தியுள்ளனர், அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக,
"நல்லிணக்கத்திற்கான உதை!" கிகாலி, ருவாண்டாவில், காயம், வெறுப்பு மற்றும் மனக்கசப்பைக் கடக்க ஹூட்டு மற்றும் டுட்ஸி பெண்களை ஒன்றிணைக்க கால்பந்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது. [10]
மேலும், சுனாமிக்குப் பிறகு சென்னையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிர்கால நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்கள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க நீச்சல் பயிற்சிகளை நடத்தினர். [11] [12] [13]
சான்றுகள்
[தொகு]- ↑ "Edit Schlaffer PhD" OMEGA
- ↑ "Women-Without-Borders - About Us". Women-Without-Borders. பார்க்கப்பட்ட நாள் October 16, 2012.
- ↑ "Konferenz Women Included! in Wien" ORF.at
- ↑ "Women Included!" APA-OTS
- ↑ "Summary report by UNIS Vienna on IWD 2006" United Nations Information Service
- ↑ Our Country - My Role (PDF) (2nd ed.). Women without Borders. 2005. p. 134.
- ↑ Baxter, Elsa (December 15, 2009). "83% of young Saudi men want women to be able to work". Arabian Business. பார்க்கப்பட்ட நாள் October 16, 2012.
- ↑ "Saudi-US relations information service"
- ↑ ""The Softening of Violence" Boloji.com". Archived from the original on 2010-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
- ↑ ""Keynote Address by Ms. Rachel Mayanja Assistant Secretary-General and Special Adviser on Gender Issues and Advancement of Women" 20-22.05.2010 5th IWG World Conference on Women and Sport" (PDF). Archived from the original (PDF) on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
- ↑ Gautham, S (August 10, 2006). "Teach The Girls To Swim-tsunami, survival and the gender dimension". Countercurrents. http://www.countercurrents.org/gen-gautham100806.htm. பார்த்த நாள்: October 16, 2012.
- ↑ Thomas, Annie (Feb 5, 2006). "Fisherwomen in tsunami-hit areas are now learning to swim". Daily News and Analysis. http://www.dnaindia.com/india/report_fisherwomen-in-tsunami-hit-areas-are-now-learning-to-swim_1011449. பார்த்த நாள்: October 16, 2012.
- ↑ "Empowering women through sports". தி இந்து. Feb 3, 2006 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 23, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080823231416/http://www.hindu.com/2006/02/03/stories/2006020310610400.htm. பார்த்த நாள்: October 16, 2012.