எலிசபெத் தாசுக்கர்
எலிசபெத் தாசுக்கர் Elizabeth Tasker | |
---|---|
பிறப்பு | எலிசபெத் ஜே, தாசுக்கர் 12 சூலை 1980 |
பணியிடங்கள் | புளோரிடா பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மெக்மாசுட்டர் பல்கலைக்கழகம் கோக்கைதோ பல்கலைக்கழகம் ஜாக்சா(JAXA) |
கல்வி கற்ற இடங்கள் | தர்காம் பல்கலைக்கழகம் (மூதறிவியல்) ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முதுமுனைவர்) |
ஆய்வேடு | பால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும் எண்ணியற் படிமங்கள் (2005) |
இணையதளம் elizabethtasker |
எலிசபெத் ஜே, தாசுக்கர் (Elizabeth J. Tasker) (பிறப்பு: 12 ஜூலை 1980) ஒரு வானியற்பியலாளரும் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். இவர் யப்பான் வான், விண்வெளித் தேட்ட முகமையின் இணைப்பேராசிரியர் ஆவார். இவர் கோள் தொழிலகம்(The Planet Factory) எனும் நூலை எழுதினார். இந்நூலை 2017 இல் புளூம்சுபரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கல்வி
[தொகு]இவர் தர்காம் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலில் படித்து 2002 இல் மூதறிவியல் பட்டம் பெற்றார்.[1] இவர் முனைவர் ஆய்வு செய்ய ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் சென்றார். அங்கு இவர் கிரெகு பிறையான் வழிகாட்டுதலில் ஆய்வை செய்துள்ளார்.[2] இவர் 2005 இல் பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் பற்றிய எண்ணியல் படிமமாக்கம் எனும் தலைப்பில் தன் முனைவர் ஆய்வை முடித்தார்.[2]
வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்
[தொகு]தாசுக்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்ட ஆய்வு உதவியாளராகச் சேர்ந்து அங்கு இவர் விண்மீன் உருவாக்க ஒப்புருவாக்கத்தில்(பாவனையாக்கத்தில்) ஆய்வு செய்தார் இந்த ஆய்வில் ஒண்முகில்களில் இருந்தான பின்னூட்டமும் உள்ளடக்கப்பட்டது.[3] இந்தப் பின்னூட்டத்தால் அந்தப் பேரளவு மூலக்கூற்று முகில்கள் மறைகின்றனவா என்பதையும் இவர் புலனாய்வு செய்தார்.[4] இவர் கோட்பாட்டு வானியற்பியல் முதுமுனைவர் ஆய்வாளராக மூன்றாண்டுக்ள் புளோரிடா பல்கலைக்கழகத்தில் செலவிட்டார். பின்னர் இவர்2009 ஆம் ஆண்டில் சிட்டா தேசிய ஆய்வாளராக மெக்மாசுட்டர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[5]
இவர் பால்வெளி வட்டுகளில் நிகழும் விண்மீன் உருவாக்கத்தை கணினிப் படிமங்கள்(ஒப்புருவாக்கங்கள்) ஊடாகப் புலனாய்வு செய்தார்.[6] இவர் பால்வெளிக் கட்டமைப்பு விண்மீனாக்கத்தில் தாக்கம் விளைவிக்கிறது என்பதையும் அதேபோல, விண்மீனாக்கம் ப்ல்வெளிப் படிமலர்ச்சியை முடுக்குகிறது என்பதையும் காண முயன்றார்.[6] இவர் புறவெளிக்கோள்களின் தரமீட்டு அளவியல் மொழிவை மதிப்பீட்டுக்கு ஆட்படுத்தவேண்டிய தேவை உள்ளது என வாதிட்டார்.[7] இவர் ஒக்கைதோ பல்க்லைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காலத் திட்டமீட்டுக் கல்வியாளராகச் சேர்ந்தார்.[6] இவர் 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஒக்கைதோ பல்கலைக்கழகத்தின் தலைவர் விருதை வென்றார்.[சான்று தேவை] இவர் ஜாக்சா எனும் யப்பனிய வான்,விண்வெளித் தேட்ட முகமையில் இணைப்பேராசிரியராக 2016 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.[8][9] அப்போது இவர் விண்மீன், கோள்கள் உருவாக்கம் சார்ந்த நீர்ம இயங்கியல் படிமங்களைப் பற்றி ஆய்வு செய்தார்.[9][10]
அறிவியல் தொடர்பாடல்
[தொகு]இவர் ஒரு மக்கள் அறிவியல் எழுத்தாளர் ஆவார். இவர்1999 இல் அன்றாடத் தொலைவரை இதழின் இளம் அறிவியல் எழுத்தாளர் விருதைப் பெற்றார்.[8] இவர் அமெரிக்க அறிவியல், இது எப்படி வேலை செய்கிறது, விண்வெளி.காம், உரையாடல் வானியல் எனப் பல அறிவியல் இதழ்களில் மக்கள் அறிவியல் கட்டுரைகள் எழுதிவந்துள்ளார்.[11][12][13][14] இவர் மக்களுக்கான வானியல் தொடர்பாடல் கருத்தரங்கிலும் அரசு நிறுவனம், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகிய நிறுவனங்களிலும் மக்களுக்கான அறிவியல் உரைகள் ஆற்றியுள்ளார்.[15][16][17] இவர் 2015 இல் கோக்கைதோ பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த TED கருத்தரங்கில் நாம் எப்படி தோன்றினோம் என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.[18] இவர் புவி-உயிர் அறிவியல் நிறுவனம் பற்றியொரு உரையை பொதுமக்களிடையே ஆற்றியுள்ளார்.[19]
கோள் தொழிலகம் நூல்
[தொகு]புளூம்சுபரி பதிப்பகம் 2017 இல் இவரது முதல் நூலான கோள் தொழிலகம் எனும் நூலை வெளியிட்டது.[20] இந்நூல் புலமை சான்ற முறையில் எழுதப்பட்டுள்ளதாக இயற்பியல் உலகம் இதழ் பாராட்டியுள்ளது.[21] இந்நூல் எளிமையாகப் படிக்க கூடியதாகவும் சான்றாளுமை மிக்கதாகவும் அமைவதாக காலெபு சுகார்ப்பு போற்றியுள்ளார்.[20]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Curriculum Vitae". Elizabeth Tasker. Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Tasker, Elizabeth (2005). Numerical simulations of the formation and evolution of galaxies. researchgate.net (DPhil thesis) (in ஆங்கிலம்). University of Oxford. வார்ப்புரு:EThOS. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ Tasker, Elizabeth J.; Bryan, Greg L. (2006). "Simulating Star Formation and Feedback in Galactic Disk Models". The Astrophysical Journal 641 (2): 878–890. doi:10.1086/500567. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2006ApJ...641..878T.
- ↑ Tasker, Elizabeth J.; Wadsley, James; Pudritz, Ralph (2015). "Star Formation in Disk Galaxies. III. Does stellar feedback result in cloud death?". The Astrophysical Journal 801 (1): 33. doi:10.1088/0004-637X/801/1/33. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357. Bibcode: 2015ApJ...801...33T.
- ↑ "Elizabeth Tasker: The Planet Factory | Ada's Technical Books". seattletechnicalbooks.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ 6.0 6.1 6.2 "Elizabeth TASKER » Office of Promotion and Standardization of the Tenure-Track System | 北海道大学". tenure-track.cris.hokudai.ac.jp. Archived from the original on 2020-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ Tasker, Elizabeth; Tan, Joshua; Heng, Kevin; Kane, Stephen; Spiegel, David; the ELSI Origins Network Planetary Diversity Workshop; Brasser, Ramon; Casey, Andrew et al. (2017). "The language of exoplanet ranking metrics needs to change" (in en). Nature Astronomy 1 (2): 0042. doi:10.1038/s41550-017-0042. பன்னாட்டுத் தர தொடர் எண்:2397-3366. Bibcode: 2017NatAs...1E..42T.
- ↑ 8.0 8.1 "Elizabeth Tasker Bloomsbury profile". bloomsbury.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ 9.0 9.1 宇宙科学専攻, 総合研究大学院大学 物理科学研究科. "Faculty Staff | Solar system science". Department of Space and Astronautical Science, SOKENDAI (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ "タスカー エリザベス | 研究教育職員". 宇宙科学研究所 (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ April 1, Elizabeth Tasker |; ET, 2016 08:00am. "If Hitomi is Lost, What Science is Lost With It? (Op-Ed)". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Tasker, Elizabeth. "Let's Lose the Term "Habitable Zone" for Exoplanets". Scientific American Blog Network (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ Gorman, Christine. "Surprising New Finds from Ancient Egyptian Star Charts [Slide Show]". Scientific American (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ "Elizabeth Tasker". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ "Communicating Astronomy with the Public 2018" (PDF). CAP. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ O'brien, Brendan (2017-03-26). "Astrophiz 30: Dr Elizabeth Tasker debunks 'Earth2.0' in Trappist-1 system + Dr Ian Musgrave 'What's Up Doc?'". Astrophiz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ "A planet not our own". rigb.org (in ஆங்கிலம்). Archived from the original on 2019-01-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ TEDx Talks, How Did We Begin? | Elizabeth Tasker | TEDxHokkaidoU, பார்க்கப்பட்ட நாள் 2019-01-19
- ↑ NASA Astrobiology, Space Dust to Sentience: Dr. Elizabeth Tasker, பார்க்கப்பட்ட நாள் 2019-01-19
- ↑ 20.0 20.1 "The Planet Factory: Exoplanets and the Search for a Second Earth". Bloomsbury. Archived from the original on 2021-01-09. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ "How to build a planet". Physics World (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.