எலிசபெத் தாசுக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் தாசுக்கர்
Elizabeth Tasker
பிறப்புஎலிசபெத் ஜே, தாசுக்கர்
12 சூலை 1980 (1980-07-12) (அகவை 43)
பணியிடங்கள்புளோரிடா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
மெக்மாசுட்டர் பல்கலைக்கழகம்
கோக்கைதோ பல்கலைக்கழகம்
ஜாக்சா(JAXA)
கல்வி கற்ற இடங்கள்தர்காம் பல்கலைக்கழகம் (மூதறிவியல்)
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முதுமுனைவர்)
ஆய்வேடுபால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும் எண்ணியற் படிமங்கள் (2005)
இணையதளம்
elizabethtasker.com

எலிசபெத் ஜே, தாசுக்கர் (Elizabeth J. Tasker) (பிறப்பு: 12 ஜூலை 1980) ஒரு வானியற்பியலாளரும் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். இவர் யப்பான் வான், விண்வெளித் தேட்ட முகமையின் இணைப்பேராசிரியர் ஆவார். இவர் கோள் தொழிலகம்(The Planet Factory) எனும் நூலை எழுதினார். இந்நூலை 2017 இல் புளூம்சுபரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கல்வி[தொகு]

இவர் தர்காம் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலில் படித்து 2002 இல் மூதறிவியல் பட்டம் பெற்றார்.[1] இவர் முனைவர் ஆய்வு செய்ய ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் சென்றார். அங்கு இவர் கிரெகு பிறையான் வழிகாட்டுதலில் ஆய்வை செய்துள்ளார்.[2] இவர் 2005 இல் பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் பற்றிய எண்ணியல் படிமமாக்கம் எனும் தலைப்பில் தன் முனைவர் ஆய்வை முடித்தார்.[2]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்[தொகு]

தாசுக்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்ட ஆய்வு உதவியாளராகச் சேர்ந்து அங்கு இவர் விண்மீன் உருவாக்க ஒப்புருவாக்கத்தில்(பாவனையாக்கத்தில்) ஆய்வு செய்தார் இந்த ஆய்வில் ஒண்முகில்களில் இருந்தான பின்னூட்டமும் உள்ளடக்கப்பட்டது.[3] இந்தப் பின்னூட்டத்தால் அந்தப் பேரளவு மூலக்கூற்று முகில்கள் மறைகின்றனவா என்பதையும் இவர் புலனாய்வு செய்தார்.[4] இவர் கோட்பாட்டு வானியற்பியல் முதுமுனைவர் ஆய்வாளராக மூன்றாண்டுக்ள் புளோரிடா பல்கலைக்கழகத்தில் செலவிட்டார். பின்னர் இவர்2009 ஆம் ஆண்டில் சிட்டா தேசிய ஆய்வாளராக மெக்மாசுட்டர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[5]

இவர் பால்வெளி வட்டுகளில் நிகழும் விண்மீன் உருவாக்கத்தை கணினிப் படிமங்கள்(ஒப்புருவாக்கங்கள்) ஊடாகப் புலனாய்வு செய்தார்.[6] இவர் பால்வெளிக் கட்டமைப்பு விண்மீனாக்கத்தில் தாக்கம் விளைவிக்கிறது என்பதையும் அதேபோல, விண்மீனாக்கம் ப்ல்வெளிப் படிமலர்ச்சியை முடுக்குகிறது என்பதையும் காண முயன்றார்.[6] இவர் புறவெளிக்கோள்களின் தரமீட்டு அளவியல் மொழிவை மதிப்பீட்டுக்கு ஆட்படுத்தவேண்டிய தேவை உள்ளது என வாதிட்டார்.[7] இவர் ஒக்கைதோ பல்க்லைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காலத் திட்டமீட்டுக் கல்வியாளராகச் சேர்ந்தார்.[6] இவர் 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஒக்கைதோ பல்கலைக்கழகத்தின் தலைவர் விருதை வென்றார்.[சான்று தேவை] இவர் ஜாக்சா எனும் யப்பனிய வான்,விண்வெளித் தேட்ட முகமையில் இணைப்பேராசிரியராக 2016 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.[8][9] அப்போது இவர் விண்மீன், கோள்கள் உருவாக்கம் சார்ந்த நீர்ம இயங்கியல் படிமங்களைப் பற்றி ஆய்வு செய்தார்.[9][10]

அறிவியல் தொடர்பாடல்[தொகு]

இவர் ஒரு மக்கள் அறிவியல் எழுத்தாளர் ஆவார். இவர்1999 இல் அன்றாடத் தொலைவரை இதழின் இளம் அறிவியல் எழுத்தாளர் விருதைப் பெற்றார்.[8] இவர் அமெரிக்க அறிவியல், இது எப்படி வேலை செய்கிறது, விண்வெளி.காம், உரையாடல் வானியல் எனப் பல அறிவியல் இதழ்களில் மக்கள் அறிவியல் கட்டுரைகள் எழுதிவந்துள்ளார்.[11][12][13][14] இவர் மக்களுக்கான வானியல் தொடர்பாடல் கருத்தரங்கிலும் அரசு நிறுவனம், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகிய நிறுவனங்களிலும் மக்களுக்கான அறிவியல் உரைகள் ஆற்றியுள்ளார்.[15][16][17] இவர் 2015 இல் கோக்கைதோ பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த TED கருத்தரங்கில் நாம் எப்படி தோன்றினோம் என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.[18] இவர் புவி-உயிர் அறிவியல் நிறுவனம் பற்றியொரு உரையை பொதுமக்களிடையே ஆற்றியுள்ளார்.[19]

கோள் தொழிலகம் நூல்[தொகு]

புளூம்சுபரி பதிப்பகம் 2017 இல் இவரது முதல் நூலான கோள் தொழிலகம் எனும் நூலை வெளியிட்டது.[20] இந்நூல் புலமை சான்ற முறையில் எழுதப்பட்டுள்ளதாக இயற்பியல் உலகம் இதழ் பாராட்டியுள்ளது.[21] இந்நூல் எளிமையாகப் படிக்க கூடியதாகவும் சான்றாளுமை மிக்கதாகவும் அமைவதாக காலெபு சுகார்ப்பு போற்றியுள்ளார்.[20]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Curriculum Vitae" இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190420013650/https://www.elizabethtasker.com/research. 
 2. 2.0 2.1 Tasker, Elizabeth (2005). Numerical simulations of the formation and evolution of galaxies. researchgate.net (DPhil thesis) (in ஆங்கிலம்). University of Oxford. வார்ப்புரு:EThOS. Retrieved 2019-01-19.
 3. Tasker, Elizabeth J.; Bryan, Greg L. (2006). "Simulating Star Formation and Feedback in Galactic Disk Models". The Astrophysical Journal 641 (2): 878–890. doi:10.1086/500567. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2006ApJ...641..878T. 
 4. Tasker, Elizabeth J.; Wadsley, James; Pudritz, Ralph (2015). "Star Formation in Disk Galaxies. III. Does stellar feedback result in cloud death?". The Astrophysical Journal 801 (1): 33. doi:10.1088/0004-637X/801/1/33. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357. Bibcode: 2015ApJ...801...33T. 
 5. "Elizabeth Tasker: The Planet Factory | Ada's Technical Books". https://www.seattletechnicalbooks.com/elizabeth-tasker-planet-factory. 
 6. 6.0 6.1 6.2 "Elizabeth TASKER » Office of Promotion and Standardization of the Tenure-Track System | 北海道大学" இம் மூலத்தில் இருந்து 2020-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200216180026/https://tenure-track.cris.hokudai.ac.jp/en/researcher/elizabeth-tasker/. 
 7. Tasker, Elizabeth; Tan, Joshua; Heng, Kevin; Kane, Stephen; Spiegel, David; the ELSI Origins Network Planetary Diversity Workshop; Brasser, Ramon; Casey, Andrew et al. (2017). "The language of exoplanet ranking metrics needs to change" (in en). Nature Astronomy 1 (2): 0042. doi:10.1038/s41550-017-0042. பன்னாட்டுத் தர தொடர் எண்:2397-3366. Bibcode: 2017NatAs...1E..42T. 
 8. 8.0 8.1 "Elizabeth Tasker Bloomsbury profile". https://www.bloomsbury.com/author/elizabeth-tasker. 
 9. 9.0 9.1 宇宙科学専攻, 総合研究大学院大学 物理科学研究科. "Faculty Staff | Solar system science" (in en). http://www.isas.jaxa.jp/sokendai/e/about/staff/solar_system.html. 
 10. "タスカー エリザベス | 研究教育職員" (in ja). http://www.isas.jaxa.jp/about/researchers/tasker_elizabeth.html. 
 11. April 1, Elizabeth Tasker |; ET, 2016 08:00am. "If Hitomi is Lost, What Science is Lost With It? (Op-Ed)". https://www.space.com/32441-how-would-hitomi-loss-would-hurt-science.html. 
 12. Tasker, Elizabeth. "Let's Lose the Term "Habitable Zone" for Exoplanets" (in en). https://blogs.scientificamerican.com/observations/lets-lose-the-term-habitable-zone-for-exoplanets/. 
 13. Gorman, Christine. "Surprising New Finds from Ancient Egyptian Star Charts [Slide Show"] (in en). https://www.scientificamerican.com/article/surprising-new-finds-from-ancient-egyptian-star-charts-slide-show1/. 
 14. "Elizabeth Tasker" (in en). https://theconversation.com/profiles/elizabeth-tasker-102945. 
 15. "Communicating Astronomy with the Public 2018". https://www.communicatingastronomy.org/wp-content/uploads/2018/03/CAP2018_Program.pdf. 
 16. O'brien, Brendan (2017-03-26). "Astrophiz 30: Dr Elizabeth Tasker debunks 'Earth2.0' in Trappist-1 system + Dr Ian Musgrave 'What's Up Doc?'" (in en). https://astrophiz.wordpress.com/2017/03/27/astrophiz-30-dr-elizabeth-tasker-debunks-earth2-0-in-trappist-1-dr-ian-musgrave-whats-up-doc/. 
 17. "A planet not our own" (in en) இம் மூலத்தில் இருந்து 2019-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190120093447/http://www.rigb.org/whats-on/events-2018/july/public-a-planet-not-our-own. 
 18. TEDx Talks, How Did We Begin? | Elizabeth Tasker | TEDxHokkaidoU, retrieved 2019-01-19
 19. NASA Astrobiology, Space Dust to Sentience: Dr. Elizabeth Tasker, retrieved 2019-01-19
 20. 20.0 20.1 "The Planet Factory: Exoplanets and the Search for a Second Earth" இம் மூலத்தில் இருந்து 2021-01-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210109131947/https://www.bloomsbury.com/uk/the-planet-factory-9781472917720/. 
 21. "How to build a planet" (in en-GB). 2017-12-05. https://physicsworld.com/a/how-to-build-a-planet/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_தாசுக்கர்&oldid=3684561" இருந்து மீள்விக்கப்பட்டது