உள்ளடக்கத்துக்குச் செல்

எர்சே - சேசு பரிசோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிசோதனை மற்றும் உற்றுநோக்கலில் கண்ணோட்டம்

எர்சே - சேசு பரிசோதனைகள் (Hershey–Chase experiments) என்பவை 1952 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆல்பிரெட் எர்சே மற்றும் மார்த்தா சேசு ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசோதனைகள் ஆகும். இந்த பரிசோதனைகளே [1] மரபணுத்தொகை பண்புகளுக்கு காரணமானவை டி. என். ஏ. என்பதை உறுதிப்படுத்திய சோதனைகள் ஆகும். 1869 ஆம் ஆண்டில் டி. என். ஏ அறியப்பட்டதிலிருந்து [2] பல அறிவியலாளர்கள் இச்சோதனைகளுக்கு முன்பு வரை புரதம் தான் மரபு வழி உள்ளார்ந்த பண்புகளை கடத்துபவை என நம்பியிருந்தனர். ஏனெனில், டி.என்.ஏ யானது உட்கருவிற்குள் அமைந்திருப்பதாலும், செயல்படாத்தன்மையுடன் இருப்பதாகத் தோன்றுவதாலும் பாசுபரசு சேகரித்து வைப்பதே இதன் வேலை என்றும் கருதப்பட்டது. எர்சே மற்றும் சேசு ஆகியோர் தங்களது பரிசோதனைகளில். நுண்ணுயிர்த் தின்னிகள், டி. என். ஏ மற்றும் புரதத்தால் ஆக்கப்பட்டவை என்றும், பாக்டீரியாக்களை தொற்றுக்குள்ளாக்கி, அவற்றின் டி.என்.ஏக்கள் வழங்கியின் செல்களுக்குள் நுழைகின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். ஆனால், இவற்றின் பெரும்பான்மையான பண்புகள் மொத்தத்தில் இவ்வாறு செய்வதில்லை. இருப்பினும், முடிவுகள் முழமையானதாக இல்லை. எச்சே - சேசு தங்களின் சோதனைகளை விளக்குவதிலும், இவர்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய முடிவுகளுக்கு டி.என்.ஏ தான் மரபுப் பொருள் என்பதை உறுதிப்படுத்தினர். 1969 ஆம் ஆண்டில், எர்சே மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை மேக்சு டெல்ப்ரக் மற்றும் சால்வடார் லூரியா (வைரசுகளின் மரபியல் அமைப்பிற்குத் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Independent functions of viral protein and nucleic acid in growth of bacteriophage". J Gen Physiol 36 (1): 39–56. 1952. doi:10.1085/jgp.36.1.39. பப்மெட்:12981234. பப்மெட் சென்ட்ரல்:2147348. http://www.jgp.org/cgi/reprint/36/1/39.pdf. 
  2. Dahm R (January 2008). "Discovering DNA: Friedrich Miescher and the early years of nucleic acid research". Hum. Genet. 122 (6): 565–81. doi:10.1007/s00439-007-0433-0. பப்மெட்:17901982. 
  3. "The Nobel Prize in Physiology or Medicine 1969". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்சே_-_சேசு_பரிசோதனை&oldid=2804777" இலிருந்து மீள்விக்கப்பட்டது