எருக்கலா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எருக்கலா என்ற பழங்குடியினம் குறவர் இன வகையைச் சார்ந்தது. இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் மலையாளம் கலந்த தமிழ் கலப்பு மொழியை பேசி வருகின்றனர். இவர்களுடைய உணவு பன்றி இறைச்சியும், கேழ்வரகு களியும் ஆகும். இவர்கள் கிழங்கு வகைகள், பால், முட்டை, போன்றவற்றை மிக குறைவாக பயன்படுத்துகின்றனர். இவர்களிடம் வைணவ வழிபாட்டுத் தாக்கம் உள்ளது.
எருக்கலா இன வகைகள்
[தொகு]- மூச்சுகுறு பிரிவு - இவர்களுடைய தொழில் குறி சொல்வது.
- ஓரங்குரு வகை - இவர்களுடைய தொழில் கூடைமுடிவது, பன்றி வளர்ப்பது.
- நாகுகுறு வகை நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.
- உத்லவாறு வகை - இவர்களுடைய தொழில் உறி செய்வது.
- கோதலவாகு வகை - இவர்கள் குரங்கை வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர்.