எதிர் மின்னணு தாவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர் அணுப்படிமத்தில் மின்னன் பெயர்வு, குவைய மட்டம் n = 3 நிலையில் இருந்து n = 2 நிலைக்குப் பெயர்ந்து ஓர் ஒளியனை வெளியிடல்.

அணு எலக்ட்ரான் மாற்றம் (Atomic electron transition) என்பது ஓர் அணுவுக்குள்[1] அல்லது ஒரு செயற்கை அணுவுக்குள்[2] அணு எலக்ட்ரான் ஒரு குவைய நிலையிலிருந்து மற்றொரு குவைய நிலைக்கு மாற்றமடைதலை அணு எலக்ட்ரான் மாற்றம் என்கிறோம். இந்த மின்னன் பெயர்வு ஓர் ஆற்றல் நிலையிலிருந்து மற்றொரு ஆற்றல் நிலைக்கு ஒரு நுண் நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்கிறது. அணு இயற்பியலில் இந்நிகழ்வு எலக்ட்ரான் மாற்றம், மின்னன் பெயர்வு, எலக்ட்ரான் தாவல், குவையக் குதிப்பு, குவையத் தப்பித்தல், குவையத் தாவல் என்று பல பெயர்களால் அறியப்படுகிறது.

எலக்ட்ரான் நிலை மாற்றங்கள் ஒளியன்கள் என்று அழைக்கப்படும் குவைய அலகு வடிவில் மின்காந்த கதிர்வீச்சை உமிழ்கிறது அல்லது உறிஞ்சுகிறது. பாய்சானின் புள்ளிவிவரப்படி, மின்னன் பெயர்வு மிக வேகமாக நடைபெறுகிறது.[3] மின்னன் பெயர்வு நடைபெறும் கால இடைவெளி மாறிலியானது இயற்கையான அழுத்தம் மற்றும் கதிர்நிரல்வரிகளுக்கு இடையேயான தொலைவைப் பொருத்து அமைகிறது. எலக்ட்ரான் குதிக்கும் நிலைகளுக்கு இடையிலான ஆற்றல் அதிகரிக்கும்போது உமிழப்படும் ஒளியனின் அலைநீளம் குறைவாக இருக்கும்.[4] உமிழப்படும் ஒளியன் அணுவின் இயக்க ஆற்றலை மாற்றுகிறது. சீரொளி குளிரூட்டும் தொழில்நுட்பம் அணுக்களின் இயக்கத்தை மெதுவாக்க உதவுகிறது.

வரலாறு[தொகு]

டென்மார்க் நாட்டு இயற்பியலாளர் நீல்சு போர் 1913 ஆம் ஆண்டில் எலக்ட்ரான்கள் குவையத் தாவல்களைச் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை முதன் முதலில் அறிவித்தார்.[5] இயேம்சு பிராங்கு மற்றும் குசுடாவ் லுட்விக் எர்ட்சு போன்றவர்கள் அணுக்கள் ஆற்றல் நிலைகளை அளவிடுகின்றன என்பதை சோதனை முறையில் நிரூபித்தார்கள்.[6]

1975 இல் முதன் முதலாக ஆன்சு டெமல்ட் என்பவர் மின்னன் பெயர்வு பற்றிய கருத்தினைக் கணித்தார். பின் 1986 ஆம் ஆண்டில் பாதரச அணுவில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.[4] ஆனால் மின்னணு பெயர்வு, புளோச்சின் செவ்வியல் சமன்பாடுகளுடன் ஒத்துப்போகவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Schombert, James. "Quantum physics" பரணிடப்பட்டது 2016-05-10 at the வந்தவழி இயந்திரம் University of Oregon Department of Physics
  2. Vijay, R; Slichter, D. H; Siddiqi, I (2011). "Observation of Quantum Jumps in a Superconducting Artificial Atom". Physical Review Letters 106 (11): 110502. doi:10.1103/PhysRevLett.106.110502. பப்மெட்:21469850. Bibcode: 2011PhRvL.106k0502V. 
  3. Deléglise, S. "Observing the quantum jumps of light" (PDF). Archived from the original (PDF) on November 7, 2010. பார்க்கப்பட்ட நாள் September 17, 2010.
  4. 4.0 4.1 Itano, W. M.; Bergquist, J. C.; Wineland, D. J. (2015). "Early observations of macroscopic quantum jumps in single atoms". International Journal of Mass Spectrometry 377: 403. doi:10.1016/j.ijms.2014.07.005. Bibcode: 2015IJMSp.377..403I. http://tf.boulder.nist.gov/general/pdf/2723.pdf. 
  5. Gleick, James (1986-10-21). "PHYSICISTS FINALLY GET TO SEE QUANTUM JUMP WITH OWN EYES" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1986/10/21/science/physicists-finally-get-to-see-quantum-jump-with-own-eyes.html. 
  6. "Franck-Hertz experiment | physics | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_மின்னணு_தாவல்&oldid=3730983" இலிருந்து மீள்விக்கப்பட்டது