எதிர் மின்னணு தாவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓர் அணுவில் மின்னணுவானது ஒரு குவாண்டம் நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றமடைதலை மின்னணு தாவல் என்கிறோம். இத்தாவலானது செயற்கை அணுவிலும் நடைபெறும். இந்த மின்னணு தாவலானது ஒரு ஆற்றல் நிலையிலிருந்து அல்லது மட்டத்திலிருந்து, மற்றொரு நிலைக்கு ஒரு நுண் வினாடிக்குள் (nano second) நிகழ்கிறது. மின்னணு தாவலானது குவாண்டம் தாவல் மற்றும் குவாண்டம் தப்பித்தல் என்றும் அழைக்கப்படுகிறது.

மின்னணு நிலை மாற்றங்களில், ஃபோட்டன்கள் என்று அழைக்கப்படும் குவாண்டம் அலகு வடிவில் மின்காந்த கதிர்வீச்சை உமிழ்கிறது அல்லது உறிஞ்சப்படுகிறது. பாய்சானின் புள்ளிவிவரப்படி மின்னணு தாவல் மிக அதி வேகமாக நடைபெறுகிறது. மின்னணு தாவல் நடைபெறும் போது, கால இடைவெளி மாறிலியானது அழுத்தம், அணுவின் தன்மை மற்றும் நிரல்வரிகளுக்கு இடையேயான தூரத்தைப் பொருத்து அமைகிறது. இந்நிகழ்வின் போது உமிழப்பட்ட ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க, உமிழப்பட்ட கதிர்வீச்சின் அலைநீளம் குறைந்து கொண்டே செல்லும். 1975 ல் முதன் முதலாக ஹான்ஸ் டெமல்ட் (Hans Dehmelt) என்பவர் மின்னணு தாவல் பற்றிய கருத்தினை கணித்தார். பின் 1986 ல் பாதரச அணுவினில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மின்னணு தாவல், ப்ளோச் (Bloch) சமன்பாடுகளுடன் ஒத்ததுப்போகவில்லை. [1]

  1. https://en.wikipedia.org/wiki/Atomic_electron_transition
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_மின்னணு_தாவல்&oldid=2723852" இருந்து மீள்விக்கப்பட்டது