உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வார்டு எமர்சன் பர்னார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வார்டு எமர்சன் பர்னார்டு
எட்வார்டு எமர்சன் பர்னார்டு
பிறப்பு1857|12|16|
நாழ்சுவில்லி, டென்னசி
இறப்பு1923|2|6|1857|12|16
வில்லியம்சு பே, விசுகான்சின்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
அறியப்படுவதுபர்னார்டு விண்மீன்
வானொளிப்படவியல்
விருதுகள்இலாலண்டே பரிசு (1892)
ஜான்சன் பதக்கம், (பிரெஞ்சு அறிவியல் கள்விக்கழகம்(1900)
புரூசு பதக்கம் (1917)

எட்வார்டு எமர்சன் பர்னார்டு (Edward Emerson Barnard) (திசம்பர் 16, 1857 – பிப்ரவரி 6, 1923) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வழக்கத்தில் இ.இ.பரனார்டு எனப்படுகிறார். இவர் ஒரு தகைமை மிக்க நோக்கீட்டு வானியலாளர். இவர் 1916 இல் பர்னார்டு விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக பரவலாக அறியப்பட்டார்.இது பின்னர் பர்னார்டு விண்மீன் பெயர் இடப்பட்டது.

இளமை வாழ்க்கை

[தொகு]

பர்னார்டு டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தந்தiயார் இரியூபன் பெர்னார்டு. தாயார் கேவுட் எனப்படும் எலிசபெத் ஜேன் பர்னார்டு . இவருக்கு ஓர் அண்ன்ன் உண்டு. இவர் பிறப்பதற்கு மூன்று மாத்த்துக்கு முன்பே இவரின் தந்தையார் இறந்துவிட்டுள்ளார்.[1] எனவே இவர் வறுமையான குடும்பத்தில் வளர்ந்துள்ளார். இதனால் இயல்பான முறைசார் கல்வி ஏதும் இவர் பயிலவில்லை. இவரின் முதல் ஆர்வம் ஒளிப்படவியலில் கவிந்தது. அதனால் இவர் ஓர் ஒளிப்படவியலாரின் உதவியாளராகத் தன் ஒன்பதாம் அகவையில் பணிபுரிந்துள்ளார்.

இவர் பின்னர் வானிய்லில் ஆர்வத்தை வளர்த்துகொண்டார். இவர் 1876 இல் ஐந்து அங்குல ஒளிவிலகல்வகைத் தொலைநோக்கியை வாங்கியுள்ளார். இவர் 1881இல் முதல் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை அறிவிக்கத் தவறியுள்ளார். இவர் அடுத்த வால்வெள்ளியைப் பின்னர் அதே ஆண்டிலும் 1992 இல் மூன்றாம் வால்வெள்ளியையும் கண்டுபிடித்தார்.

இவை ஒளிப்பட்த் தொழிலில் இருந்தபோதே 1881 இல் ஓர் ஆங்கிலேயப் பெண்ணான உரோடா கால்வர்ட்டை மணந்துள்ளார். அல்பெர்ட் ஆரிங்டன் வார்னர் 1880 களில் 200 டாலர் புது கோளைக் கண்டுபிடிப்பவருக்கு வழங்கியுள்ளார். எட்வார்டு ஐந்து கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[2] .இந்தப் பணத்தைக் கொண்டு இவர் தனக்கும் தன் புது மனைவிக்கும் ஒரு புதிய வீட்டைக் கட்டியுள்ளார்.

நாழ்சுவில்லி பயில்நிலை வானியலாளர்களுக்கு இவர் அறிமுகமாகியதும் அவர்கள் ஒருதொகையைத் திரட்டி இவரை வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க நல்கையாக வழங்கியுள்ளனர். இவர் பள்ளியில் படிக்கவில்லை.ஆனால் இவருக்கு முன்பு எவருக்கு வழங்கப்படாத வாண்டர்பில்டின் தகைமைப் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.[3]இவர் இலிக் வான்காணகத்தில் 1887 இல் சேர்ந்தார். பின்னர் இவர் அதன் இயக்குநரான எட்வார்டு எசு. கோல்டன் அவர்களுடன் பெரிய வானியல் கருவிகளைப் பயன்படுத்த அணுகுவதிலும் பிற ஆய்வு, மேலாண்மைப் பணிகளிலும் மோத நேர்ந்துள்ளது.[4]

வானியல் பணி

[தொகு]

இவர் 1889 இல் இவர் இயாபேதசு நிலா காரிக்கோளின் வலயங்களைக் கடப்பைக் கண்ணுற்றார். காரிக்கோளுக்கும் அதன் உள்வலயதுக்கும் இடையே உள்ள வெளியில் இயாபேதசு கடப்பதைப் பார்த்தபோது, நிலா மீது ஒரு நிழல் கடந்து செல்வதையும் கண்டுள்ளார். உடனே அதை அவர் உணராவிட்டாலும், இவர் காரிவலயம் உள்ளதற்கான சான்றாக்க் கருநிழல் வலயங்களின் வட்டவடிவத் தடங்களுக்குச் செங்குத்தாக அமைதலைக் கண்டுபிடித்துள்ளார். இவை முதலில் ஐயத்துக்கு ஆட்பட்டாலும் வாயேஜர்-1 விண்கலம் இதை உறுதிப்படுத்தியது.

இவர் 1892 இல் ஒரு விண்மீன் வெடிப்பின் நோக்கீடுகளை எடுத்தார். அதன் வளிம உமிழ்வுகளை முதலில் பார்த்து இது ஒரு விண்மீன் வெடிப்புதான் என முடிவு செய்தார். இந்த ஆண்டிலேயே இவர் வியாழனின் ஐந்தாம் நிலாவை, அதாவது அமால்தியாவைக் கண்டுபிடித்தார். கலீலியோ 1609 இல் நான்கு வியாழனின் நிலாக்களைக் கண்டுபிடித்த பிறகு, இவர் தான் வியாழனின் புதிய நிலாவைக் கண்டுபிடித்தவர் ஆகிறார். இதுதான் ஒளிப்படத்தட்டு அல்லது வேறு பதிவு செய்த படிமம் அல்லாமல் கண்பார்வை வழியே கண்டறிந்த கடைசி நிலாவாகும்.

இவர் 1895 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகச் சேர்ந்தார். இங்கு இவர் யெர்க்கேசு வான்காணக 40 அங்குல தொலைநோக்கியைப் பயன்படுத்தினார். இங்கே, இவர் பால்வழி சார்ந்த ஒளிப்படங்களை எடுப்பதில் முழுநேரமும் செலவிட்டார். மேக்சு வுல்ப்புடன் இணைந்து, பால்வழியில் அமைந்த சில கருப்புப் பகுதிகளைக் கண்டுபிடித்தார். இவை வளிமமும் தூசும் கலந்த முகில்களே. இவை தொலைவில் அமைந்த விண்மீன்களை மறைத்தன. இவரிடம் உதவியாளராக, மேரி ஆர். கால்வெர்ட்டு எனும் இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பான பெண்மணி, மாந்தக் கணிப்பாளராகச் சேர்ந்தார்.

இவர் 1916 இல் கன்டுபிடித்த மங்கிய விண்மீன் ஒன்றுக்கு இவரது நினைவாக, பர்னார்டு விண்மீன் எனப் பெயரிடப்பட்டது. இந்த விண்மீனின் இயலியக்கம் மற்ற விண்மீன்களைவிட கூடுதலாக அமைந்திருந்தது. இது தான் சூரியனுக்கு அருகாக உள்ள விண்மீன்களில் இரண்டாவதாகும். ஆல்பா சென்ட்டாரிக்கு அடுத்து இது அமைகிறது.

இவர் வான் ஒளிப்படவியலின் முன்னோடியாவார். இவர் பர்னார்டு வான்பொருட்கள் என வழங்கும் கருப்பு ஒண்முகில்களின் தொடரைக் கண்டுபிடித்து, இவற்றுக்கு மெசியர் அட்டவணையைப் போல, எண் அடிப்படையில் பெயரிட்டார். இப்பெயர்கள் பர்னார்டு எனத் தொடங்கி பர்னார்டு 370 என முடிகின்றன. இவற்றுக்கான முதல் பட்டியலை வானியற்பியல் இதழில் 1919 இல் வெளியிட்டார், "வானில் அமைந்த 182 கருப்புப் பொருட்களின் அட்டவணைபற்றி".

இவர் 1923 பிப்ரவரி, 6 இல் விசுகான்சில் உள்ள வில்லியம்சு பேவில் இறந்தார்; நாழ்சுவில்லியில் அடக்கம் செய்யப்பட்டார். இவர் இறந்த பின்னர், பலர் விதிவிலக்காகவுள்ள இவரது வான் ஒளிப்படங்களைத் தொகுத்து, 1927 இல் பால்வழியின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் ஒளிப்படவியல் அட்டவணை(A Photographic Atlas of Selected Regions of the Milky Way) என்ற தலைப்பிட்டு வெளியிட்டனர். இவரது பணியை யெர்க்கேசு வான்காணக இயக்குநர் எடுவின் பி. பிராசுட்டும் மேரி ஆர். கால்வெர்ட்டும் முடித்து வைத்தனர்.

வால்வெள்ளி கண்டுபிடிப்புகள்

[தொகு]

இவை1881 முதல் 1892 வரை இவரால் கண்டுபிடிக்கப்பட்ட 15 வேறுபட்ட வால்வெள்ளிகள், இவற்றில் மூன்று பருவமுறையின; மேலும் இவர் பிறருடன் இணைந்து இருகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்:

  • C/1881 அறிவிக்கப்படவில்லை
  • C/1881 S1
  • C/1882 R2
  • D/1884 O1 (பர்னார்டு 1)
  • C/1885 N1
  • C/1885 X2
  • C/1886 T1 பர்னார்டு-ஆர்ட்விகு]]
  • C/1887 B3
  • C/1887 D1
  • C/1887 J1
  • C/1888 U1
  • C/1888 R1
  • C/1889 G1
  • 177P/பர்னார்டு, (P/1889 M1, P/2006 M3, பர்னார்டு 2)
  • C/1891 F1 பர்னார்டு-டென்னிங்கு
  • C/1891 T1
  • 206P/பர்னார்டு போட்டினி D/1892 T1 (பர்னார்டு 3) – ஒளிப்படவியலால் கண்டறியப்பட்ட முதல் வால்வெள்ளி; s 206P/பர்னார்டு-போட்டினியாக 2008 இல் மீள அறியப்பட்டது.

தகைமைகள்

[தொகு]

விருதுகள்

  • இணை ஆய்வு உறுப்பினர், அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகம் (1892)[5]
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1897)
  • பிரான்சு Société astronomique de France]]இன் உயர்விருதான பிரிக்சு ஜான்சன் பரிசு, (1906)
  • புரூசு பதக்கம் (1917)

இவர் பெயர் இடப்பட்டவை

  • பர்னார்டு (நிலாக் குழிப்பள்ளம்)
  • பர்னார்டு (செவ்வாய்க் குழிப்பள்ளம்)
  • கனிமீடு நிலாவின் பர்னார்டு பகுதி
  • குறுங்கோள் 819 பர்னார்டியானா
  • புபபொ 6822 பர்னார்டு பால்வெளி
  • பர்னார்டு கண்ணி
  • பர்னார்டு விண்மீன்
  • பர்னார்டு முற்றம், வாண்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உறைவிடுதி
  • பர்னார்டு வானியல் கழகம், சட்டநூகாவின் வானியல் குழு
  • பர்னார்டு மலை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  2. Frost, E.B., "Edward Emerson Barnard" Astrophysical Journal, vol. 58, p.1 - 1923ApJ....58....1F
  3. Carey, Bill (2001-10-29). "Astronomer Barnard was among Vanderbilt's first academic superstars". The Vanderbilt Register இம் மூலத்தில் இருந்து 2007-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070211031623/http://www.vanderbilt.edu/News/register/Oct29_01/story5.html. பார்த்த நாள்: 2007-06-27. 
  4. Osterbrock, Donald E., The Rise and Fall of Edward S. Holden - Part One, JOURN. HISTORY OF ASTRONOMY V.15:2, NO.43, P. 81 at 95-98, 1984
  5. "Book of Members, 1780-2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் May 17, 2011.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]