எட்வார்டு எமர்சன் பர்னார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட்வார்டு எமர்சன் பர்னார்டு
EdwardEmersonBarnard.jpg
எட்வார்டு எமர்சன் பர்னார்டு
பிறப்பு1857|12|16|
நாழ்சுவில்லி, டென்னசி
இறப்பு1923|2|6|1857|12|16
வில்லியம்சு பே, விசுகான்சின்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
அறியப்படுவதுபர்னார்டு விண்மீன்
வானொளிப்படவியல்
விருதுகள்இலாலண்டே பரிசு (1892)
ஜான்சன் பதக்கம் (1900)
புரூசு பதக்கம் (1917)

எட்வார்டு எமர்சன் பர்னார்டு (Edward Emerson Barnard) (திசம்பர் 16, 1857 – பிப்ரவரி 6, 1923) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வழக்கில் இ.இ.பரனார்டு எனப்படுகிறார். இவர் ஒரு தகைமையுள்ள நோக்கீட்டு வானியலாளர். இவர் 1916 இல் பர்னார்டு விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக பரவலாக அறியப்பட்டார்.இது பின்னர் இவரது பெயர் இடப்பட்டது.

இளமை வாழ்க்கை[தொகு]

ப்ர்னார்டு டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தந்தiயார் இரியூபன் பெர்னார்டு. தாயார் கேவுட் எனப்படும் எலிசபெத் ஜேன் பர்னார்டு . இவருக்கு ஓர் அண்ன்ன் உண்டு. இவர் பிறப்பதற்கு மூன்று மாத்த்துக்கு முன்பே இவரின் தந்தையார் இறந்துவிட்டுள்ளார்.[1] எனவே இவர் வறுமையான குடும்பத்தில் வளர்ந்துள்ளார். இதனால் இயல்பான முறைசார் கல்விஏதும் இவர் பயிலவில்லை. இவரின் முதல் ஆர்வல் ஒளிப்படவியலில் கவிந்தது. அதனால் இவர் ஓர் ஒளிப்படவியலாரின் உதவியாளராகத் தன் ஒன்பதாம் அகவையில் பணிபுரிந்துள்ளார்.

இவர் பின்னர் வானிய்லில் ஆர்வத்தை வளர்த்துகொண்டார். இவர் 1876 இல் ஐந்து அங்குல ஒளிவிலகல்வகைத் தொலைநோக்கியை வாங்கியுள்ளார். இவர் 1881இல் முதல் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை அறிவிக்கத் தவறியுள்ளார். இவர் அடுத்த வால்வெள்ளியைப் பின்னர் அதே ஆண்டிலும் 1992 இல் மூன்றாம் வால்வெள்ளியையும் கண்டுபிடித்தார்.

இவை ஒளிப்பட்த் தொழிலில் இருந்தபோதே 1881 இல் ஓர் ஆங்கிலேயப் பெண்ணான உரோடா கால்வர்ட்டை மணந்துள்ளார். அல்பெர்ட் ஆரிங்டன் வார்னர் 1880 களில் 200 டாலர் புது கோளைக் கண்டுபிடிப்பவருக்கு வழங்கியுள்ளார். எட்வார்டு ஐந்து கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[2] .இந்தப் பனத்தைக் கொண்டு இவர் தனக்கும் தன் புது மனைவிக்கும் ஒரு புதிய வீட்டைக் கட்டியுள்ளார்.

நாழ்சுவில்லி பயில்நிலை வானியலாளருக்கு இவர் அறிமுகமாகியதும் அவர்கள் ஒருதொகையைத் திரட்டி இவரை வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தி படிக்க நல்கையாக வழங்கியுள்ளனர். இவர் பள்ளியில் படிக்கவில்லை.ஆனால் இவருக்கு முன்பு எவருக்கு வழங்கப்படாத வாண்டர்பில்டின் தகைமைப் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.[3]இவர் இலிக் வான்காணகத்தில் 1887 இல் சேர்ந்தார். பின்னர் இவர் அதன் இயக்குநரான எட்வார்டு எசு. கோல்டன் அவர்களுடன் பெரிய வானியல் கருவிகளைப் பயன்படுத்த அணுகவும் பிற ஆய்வு, மேலாண்மைப் பணிகளிலும் மோத நேர்ந்துள்ளது.[4]

வானியல் பணி[தொகு]

இவர் 1889 இல் இவர் இயாபேதசு நிலா காரிக்கோளின் வலயங்களைக் கட்த்தலைக் கண்ணுற்றார். காரிக்கோளுக்கும் அதன் உள்வலயதுக்கும் இடையே உள்ள வெளியில் இயாபேதசு கடப்பதைப் பார்த்தபோது, நிலா மீது ஒரு நிழல் கடந்து செல்வதையும் கண்டுள்ளார். உடனே அதை அவர் உணராவிட்டாலும், இவர் காரிவலயம் உள்ளதற்கான சான்றாக்க் கருநிழல் வலயங்களின் வட்டவடிவத் தடங்களுக்குச் செங்குத்தாக அமைதலைக் கண்டுபிடித்துள்ளார். இவை முதலில் ஐயத்துக்கு ஆட்பட்டாலும் வாயேஜர்-1 விண்கலம் இதை உறுதிப்படுத்தியது.

வால்வெள்ளி கண்டுபிடிப்புகள்[தொகு]

1881 முதல் 1892 வரை இவரால் கண்டுபிடிக்கப்பட்ட 15 வேறுபட்ட வால்வெள்ளிகள், இவற்ரில் மூன்று பருவமுறையின; மேலும் இவர் பிறருடன் இணைந்து இருகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்:

தகைமைகள்[தொகு]

விருதுகள்

இவர் பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58118.html. பார்த்த நாள்: August 22, 2012. 
  2. Frost, E.B., "Edward Emerson Barnard" Astrophysical Journal, vol. 58, p.1 - 1923ApJ....58....1F
  3. Carey, Bill (2001-10-29). "Astronomer Barnard was among Vanderbilt's first academic superstars". The Vanderbilt Register. Archived from the original on 2007-02-11. https://web.archive.org/web/20070211031623/http://www.vanderbilt.edu/News/register/Oct29_01/story5.html. பார்த்த நாள்: 2007-06-27. 
  4. Osterbrock, Donald E., The Rise and Fall of Edward S. Holden - Part One, JOURN. HISTORY OF ASTRONOMY V.15:2, NO.43, P. 81 at 95-98, 1984
  5. "Book of Members, 1780-2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. May 17, 2011 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

  • Sheehan, William (1995). The Immortal Fire Within: The Life and Work of Edward Emerson Barnard. Cambridge: Cambridge University Press. 

வெளி இணைப்புகள்[தொகு]