உள்ளடக்கத்துக்குச் செல்

எக்ஸ் பாக்ஸ் 360

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்ஸ் பாக்ஸ் 360
எக்ஸ் பாக்ஸ் 360
எக்ஸ் பாக்ஸ் 360
தயாரிப்பாளர் மைக்ரோசாப்ட்
வகை நிகழ்பட விளையாட்டு இயந்திரம்
தலைமுறை ஏழாவது தலைமுறை
முதல் வெளியீடு அமெரிக்கா நவம்பர் 22, 2005


கனடா நவம்பர் 22, 2005
ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 2, 2005
ஜப்பான் டிசம்பர் 10,2005
பிரித்தானியா மார்ச் 23, 2006

CPU3.2 GHz பி.பி.சி எக்ஸெனொன்
ஊடகம் டி.வி.டி, சி.டி, (எச்.டி.டி.வி.டி)
நினைவகம் உள்தாங்கி,நினைவு அட்டை
உள்ளீட்டு கருவிகள்4 (any combo of wired/wireless, max 3 wired (up to 4 wired with a USB Hub), 4 wireless)
இணைப்பு3 × USB 2.0
இணையச் சேவைஎக்ஸ் பாக்ஸ் நேரடி
விற்பனை எண்ணிக்கை5 மில்லியன்
Backward
compatibility
300 எக்ஸ் பாக்ஸின் விளையாட்டுகள் விளையாடமுடியும் (அதற்கு எக்ஸ் பாக்ஸ் 360 மற்றும் அதன் உள்தாங்கி அவசியம்)
முந்தைய வெளியீடுஎக்ஸ் பாக்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே எக்ஸ் பாக்ஸ் 360 ஆகும். எக்ஸ் பாக்ஸ் 360 ஜ.பி.எம், எ.டி.ஜ, சாம்சங், எஸ்.ஜ.எஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு முயற்சியில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியந்திரத்தைப் பற்றிய முதல் முறையான அறிவிப்பு எம்.டி.வி தொலைக்காட்சியில் மே 12, 2005 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற இயற்பியல் பொழுதுபோக்கு வெளியீட்டு விழாவில் எக்ஸ் பாக்ஸ் 360 பற்றிய முழு அறிவித்தல்களும் வெளியிடப்பட்டது. எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரமே உலகின் மூன்று கண்டங்களில் ஒரே சமயத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஏழாம் தலைமுறைக்குரிய இயந்திரமாகும். மேலும் இவ்வியந்திரத்திற்குப்போட்டியாக சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேசன் 3 மற்றும் நின்டென்டோ நிறுவனத்தின் விய் போன்ற ஏழாம் தலைமுறை இயந்திரங்களின் வெளியீட்டுகளின் விற்பனைகளில் முன்னேற்றமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பெற்றிருக்கின்றது எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரம். மேலும் எச்.டி கண்டுபிடிப்புகளின் மூலமும் இவ்வியந்திரத்தில் சிறப்பான முறையில் விளையாடமுடியும் என்ற சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸ்_பாக்ஸ்_360&oldid=1546215" இலிருந்து மீள்விக்கப்பட்டது