உ. பி. மாதையன்
Appearance
உ. பி. மாதையன் (U. P. Mathaiyan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். மாதையன் அனைத்திந்திய அண்ணா திராவிரமுன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1984ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அந்தியூர் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]