இலட்சுமி கெபால்கர்
இலட்சுமி கெபால்கர் Lakshmi Hebbalkar | |
---|---|
ಲಕ್ಷ್ಮಿ ಹೆಬ್ಬಾಳ್ಕರ್ | |
2020-ல் இலட்சுமி கெபால்கர் | |
சட்டமன்ற உறுப்பினர், கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | சஞ்சய் பி. பாட்டீல் |
தொகுதி | பெலகாவி ஊரகம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 மே 1975 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இரவீந்திர கெபால்கர் |
பிள்ளைகள் | மிர்னல் கெபால்கர் |
கல்வி | முதுகலை |
As of சூன், 2021 மூலம்: [[1][2]] |
இலட்சுமி இரவீந்திர கெபல்கர் (Lakshmi Ravindra Hebbalkar) என்பவர் இந்தியாவின் கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இலட்சுமி இரவீந்திர கெபல்கரை மணந்து பெலகாவி அனுமான் நகரில் வசிக்கிறார். இவருக்கு மிர்னல் கெபல்கர் என்ற ஒரு மகன் உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இலட்சுமி கெபால்கர் 2013-ல் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியிலும் பின்னர் 2014-ல் பெலகாவி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் மே 2015-ல் கருநாடக மாநில மகளிர் காங்கிரசு தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] 2018ஆம் ஆண்டில், இவர் பெலகாவி ஊரக சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் சஞ்சய் பி. பாட்டீலை தோற்கடித்து கருநாடக மாநிலச் சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]
பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக 2019 செப்டம்பரில் அமலாக்க இயக்குநகரத்தால் இரண்டு நாட்கள் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.[6]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BELGAUM RURAL Election Result 2018, Winner, BELGAUM RURAL MLA, Karnataka".
- ↑ "Belgaum Rural Assembly Election Result 2018: Belgaum Rural Candidates Lists, Winners and Votes". Archived from the original on 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
- ↑ "Laxmi Hebbalkar is State women Congress chief". 12 May 2015.
- ↑ "Congress MLA Laxmi Hebbalkar shuts down quitting rumours". The New Indian Express. 15 July 2019. https://www.newindianexpress.com/states/karnataka/2019/jul/15/congress-mla-laxmi-hebbalkar-shuts-down-quitting-rumours-2003970.html. பார்த்த நாள்: 11 November 2019.
- ↑ "Lakshmi R Hebbalkar(Bharatiya Janata party):Constituency- BELGAUM RURAL(BELGAUM) - Affidavit Information of Candidate". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
- ↑ "Laxmi Hebbalkar quizzed for 2 days, maybe called again". 20 September 2019.