உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்ரா, மாம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்ரா மாம்பழம்'
'பீகார் மாநிலத்திலுள்ள ஒரு பண்னையில் இலங்ரா மாம்பழம்.
பேரினம்மேங்கிபெரா
பயிரிடும்வகை'இலங்ரா'
இலங்ரா
'லாங்க்ரா' மாம்பழம் (வெட்டப்பட்டது)

இலங்ரா (Langra) என்பது தொடக்கத்தில் வட இந்தியாவில் உள்ள பனாரசு, வங்காளதேசம், பாக்கித்தான் [1][2] ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட ஒரு வகையான மாம்பழ இனம் ஆகும். பனாரசி இலங்ரா என்ற பெயராலும் இம்மாம்பழம் அழைக்கப்படுகிறது [3]. பழுக்கும் போது இந்த மாம்பழவகை பச்சை நிறத்தில் இருக்கிறது. பொதுவாக சூலை மாதத்தின் கடைசி பாதியில் இப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையிலும் இப்பழம் பிரபலமடையத் தொடங்கியது [4]. துண்டுகளாக்கவும் பதப்படுத்தவும் ஏற்ற பழமாக இலங்ரா மாம்பழம் கருதப்படுகிறது [5].

இலைகள்[தொகு]

இலங்ரா மாமரம்


இதன் இலைத்தாள்கள் முட்டை-ஈட்டி வடிவங்களாகவும் சிறிது மடிந்து தட்டையாகவும் இருக்கின்றன. மேல்முனைகள் அதி கூரியனவாக உள்ளன. இரண்டாம் நிலை நரம்புகள் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக துணை வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன [6] அவைகளின் அளவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • இலைத்தாளின் நீளம்: 21,93 செ.மீ.
  • இலை அலகு நீளம்: 18,95 செ.மீ.
  • இலை அலகின் அகலம்: 4.75 செ.மீ.
  • இலைக்காம்பின் நீளம்: 2.98 செ.மீ.
  • புடைப்புக் காம்பு மண்டலத்தின் நீளம்:1.20 செ.மீ
  • நீளம்: இலை அலகு அகலம்: 4.00
  • புடைப்புக் காம்பு நீளம்: இலைக்காம்பு: 0.42
  • இலை அலகு நீளம்:இலைக்காம்பு: 6.67 செ.மீ

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-20.
  2. "Varieties of Mango produced in West Bengal | Bengal Information - College, Admission, Events, Education, Tourism, Bengal Culture, Jobs". Bengal Information. 2012-09-12. Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
  3. "Mango Malformation". Dkchakrabarti.com. 2010-03-12. Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-11-27. பார்க்கப்பட்ட நாள் 2017-01-20.
  5. "Mango". Hort.purdue.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
  6. Chakraborti, Kalyan (1970-01-01). "Leaf Charactersand Measurements Of Mango Cultivars In | Kalyan Chakraborti". Academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்ரா,_மாம்பழம்&oldid=3544498" இலிருந்து மீள்விக்கப்பட்டது