உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைப்பட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரட்டைப் பட்டப்படிப்பு என்பது ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்திலேயோ அல்லது இரு வேறு பல்கலைக்கழகத்திலேயோ ஒரே சமயத்தில் இரண்டு பட்டங்கள் பெறுவதை குறிக்கும். இரண்டு பட்டங்களை தனித்தனியாக பெறுவதற்கு ஆகும் நேரத்தை விட மிகவும் குறைந்த காலத்தில் இரட்டைப்பட்டப்படிப்பு மூலம் இரண்டு பட்டங்களை பெறலாம்.இந்த இரு பட்டங்களும் ஒரே துறை தொடர்புடையவன ஆகவோ அல்லது இரு வேறு துறைகளாகவோ இருக்கலாம்.

ஆங்கிலேயே முறையை பின்பற்றும் நாடுகளில் குறிப்பிட்ட அளவில் இளநிலை பட்டங்கள் இரட்டைப்பட்டப்படிப்பாக பல்கலைக்கழங்களில் தரப்படுகிறது. எனினும் எல்லா நாடுகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை ஒன்றாக படிப்பதே இரட்டைப்பட்டப்படிப்பாக கருதப்படுகிறது.

உதாரணமாக, இரண்டு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை தனித்தனியாக பெற 4 + 4 என 8 ஆண்டுகள் கல்விகற்க வேண்டி இருக்கும். எனினும் இதையே இரட்டைப்பட்டப்படிப்பாக கொண்டால் 5 ஆண்டுகளில் இரண்டு பட்டங்களை பெறலாம். இந்த முறை இந்திய பல்கலைக்கழங்களான, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் முதலியவற்றில் காணப்படுகிறது. அதேபோல் இளநிலை மற்றும் இளநிலை பொறியியல் படிப்பை 5 ஆண்டுகளில் இரட்டைப்படிப்பாக தருவது இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் பிற பல்கலைக்கழங்களிலும் காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைப்பட்டம்&oldid=4132175" இலிருந்து மீள்விக்கப்பட்டது