இரக்கத்தின் கடமைகள்
Appearance
இரக்கத்தின் கடமைகள் என்பது கிறித்தவர்கள் மேற்கொள்ளும் செயல்களாகும். இவை கத்தோலிக்க திருச்சபையில் தவ முயற்சிகளாகவும் மற்றும் அறப்பணிகளாகவும் கருதப்படுகின்றன. மெதடிசத்தில் இவை தூய வாழ்வு வாழ்வதற்கும்[1] மீட்படைவதற்கும்[2] உதவும் ஒரு அருளின் கருவியாக நம்பப்படுகின்றது.
கத்தோலிக்க திருச்சபையில்
[தொகு]செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமையின்படி இரக்கத்தின் ஆன்மீக மற்றும் சமூகக் கடமைகள் நற்செயல்களின் மூலமாக அருள் பெரும் கருவிகளாகும்.[3] இவற்றை செய்யாமல் விடுவதும் பாவமாகக் கருதப்படுகின்றது.
இரக்கத்தின் சமூகக் கடமைகள்
[தொகு]இக்கடமைகள் உயிர்களின் உடல் சார்ந்த தேவைகளை நிறைவேற்ற முனைகின்றன. எசாயா 58இல் இருந்தும் தோபித்து நூலில் இருந்தும் இவை எடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
- பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்தல்
- தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல்
- ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை அணிவித்தல்
- அன்னியரை ஏற்றுக் கொள்ளுதல்
- நோயாளர்களைக் குணப்படுத்துதல்
- சிறையிலிருப்போரைச் சந்தித்தல்
- இறந்தோரை நல்லடக்கம் செய்தல்
இரக்கத்தின் ஆன்மீகக் கடமைகள்
[தொகு]அவையாவன:
- அவநம்பிக்கையில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குதல்
- அறியாமையில் இருப்போருக்கு அறிவொளியூட்டுதல்
- பாவிகள் மனம்மாற அறிவுறுத்தல்
- துன்புறுவோரைத் தேற்றுதல் - வருந்துவோருக்கு ஆறுதல் அளித்தல்
- பிறர் இழைத்த தவறுகளை மன்னித்தல் - தீமைகளை மன்னித்தல்
- தீமை செய்வோரைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல்
- இறந்தோருக்காகவும் வாழ்வோருக்காகவும் செபித்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John Stephen Bowden. Encyclopedia of Christianity. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 5 ஜூலை 2011.
Works of mercy are, therefore, not merely good deeds but also channels through which Christians receive God's grace.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help); More than one of|accessdate=
and|access-date=
specified (help) - ↑ John Wesley. The Works of the Reverend John Wesley, A.M., Volume VI. J. Emory & B. Waugh; J. Collord, New York. p. 46. பார்க்கப்பட்ட நாள் 5 ஜூலை 2011.
Why, that both repentance, rightly understood, and the practice of all good works, — works of piety, as well as works of mercy, (now properly so called, since they spring from faith,) are, in some sense, necessary to sanctification.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help); More than one of|accessdate=
and|access-date=
specified (help) - ↑ கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி - 2447