இரக்கத்தின் கடமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரித்தாஸ், இரக்கத்தின் ஏழு கடமைகள், ஓவியர் பீட்டர் புரூகல், 1559. :வலப்புறம் கீழே இடஞ்சுழி முறையில்: பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்தல், தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல், சிறையிலிருப்போரைச் சந்தித்தல், இறந்தோரை நல்லடக்கம் செய்தல், அன்னியரை ஏற்றுக் கொள்ளுதல், நோயாளர்களைக் குணப்படுத்துதல், ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை அணிவித்தல்

இரக்கத்தின் கடமைகள் என்பது கிறித்தவர்கள் மேற்கொள்ளும் செயல்களாகும். இவை கத்தோலிக்க திருச்சபையில் தவ முயற்சிகளாகவும் மற்றும் அறப்பணிகளாகவும் கருதப்படுகின்றன. மெதடிசத்தில் இவை தூய வாழ்வு வாழ்வதற்கும்[1] மீட்படைவதற்கும்[2] உதவும் ஒரு அருளின் கருவியாக நம்பப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையில்[தொகு]

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமையின்படி இரக்கத்தின் ஆன்மீக மற்றும் சமூகக் கடமைகள் நற்செயல்களின் மூலமாக அருள் பெரும் கருவிகளாகும்.[3] இவற்றை செய்யாமல் விடுவதும் பாவமாகக் கருதப்படுகின்றது.

இரக்கத்தின் சமூகக் கடமைகள்[தொகு]

இக்கடமைகள் உயிர்களின் உடல் சார்ந்த தேவைகளை நிறைவேற்ற முனைகின்றன. எசாயா 58இல் இருந்தும் தோபித்து நூலில் இருந்தும் இவை எடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

  • பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்தல்
  • தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல்
  • ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை அணிவித்தல்
  • அன்னியரை ஏற்றுக் கொள்ளுதல்
  • நோயாளர்களைக் குணப்படுத்துதல்
  • சிறையிலிருப்போரைச் சந்தித்தல்
  • இறந்தோரை நல்லடக்கம் செய்தல்

இரக்கத்தின் ஆன்மீகக் கடமைகள்[தொகு]

அவையாவன:

  • அவநம்பிக்கையில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குதல்
  • அறியாமையில் இருப்போருக்கு அறிவொளியூட்டுதல்
  • பாவிகள் மனம்மாற அறிவுறுத்தல்
  • துன்புறுவோரைத் தேற்றுதல் - வருந்துவோருக்கு ஆறுதல் அளித்தல்
  • பிறர் இழைத்த தவறுகளை மன்னித்தல் - தீமைகளை மன்னித்தல்
  • தீமை செய்வோரைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல்
  • இறந்தோருக்காகவும் வாழ்வோருக்காகவும் செபித்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. John Stephen Bowden. Encyclopedia of Christianity. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். http://books.google.com/books?id=NGAUAQAAIAAJ&q=works+of+mercy+methodism&dq=works+of+mercy+methodism&hl=en&ei=FT0TTrqAO4jl0QHH_dS-Dg&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CEMQ6AEwBQ. பார்த்த நாள்: 5 ஜூலை 2011. "Works of mercy are, therefore, not merely good deeds but also channels through which Christians receive God's grace." 
  2. John Wesley. The Works of the Reverend John Wesley, A.M., Volume VI. J. Emory & B. Waugh; J. Collord, New York. பக். 46. http://books.google.com/books?id=q4BPAAAAYAAJ&pg=PA46&dq=works+of+mercy+sanctification&hl=en&ei=Xj8TTt6pHMnd0QHt84C5Dg&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CFkQ6AEwCQ#v=onepage&q=works%20of%20mercy%20sanctification&f=false. பார்த்த நாள்: 5 ஜூலை 2011. "Why, that both repentance, rightly understood, and the practice of all good works, — works of piety, as well as works of mercy, (now properly so called, since they spring from faith,) are, in some sense, necessary to sanctification." 
  3. கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி - 2447
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்கத்தின்_கடமைகள்&oldid=2124024" இலிருந்து மீள்விக்கப்பட்டது